உள்ளடக்கத்துக்குச் செல்

சிரேயாஸ் கோபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரேயாஸ் கோபால்
2019 ஐபிஎல்லின் போது
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ராமசாமி சிரேயாஸ் கோபால்
பிறப்பு4 செப்டம்பர் 1993 (1993-09-04) (அகவை 32)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை leg break
பங்குபன்முக வீரர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2013/14–2022/23கருநாடகத் துடுப்பாட்ட அணி
2014–2017 , 2024மும்பை இந்தியன்ஸ் (squad no. 19)
2014–2017 , 2024ராஜஸ்தான் ராயல்ஸ் (squad no. 37)
2022சன்ரைசர்ஸ் ஐதராபாத்
2023/24கேரள துடுப்பாட்ட அணி
2025–Presentசென்னை சூப்பர் கிங்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை மு.த.து ப.அ.து இ20
ஆட்டங்கள் 88 75 104
ஓட்டங்கள் 3,577 974 526
மட்டையாட்ட சராசரி 34.72 27.82 16.43
100கள்/50கள் 6/15 0/4 0/0
அதியுயர் ஓட்டம் 161* 64 48*
வீசிய பந்துகள் 12,421 3,340 1,936
வீழ்த்தல்கள் 254 119 124
பந்துவீச்சு சராசரி 29.12 27.82 17.35
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
8 2 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 5/17 5/19 5/11
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
30/– 20/– 28/–
மூலம்: ESPNcricinfo, 4 மார்ச் 2025

ராமசாமி சிரேயாஸ் கோபால் (Ramaswamy Shreyas Gopal[1] பிறப்பு: செப்டம்பர் 4,1993) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[2] இவர் ஒரு பன்முக வீரராவார். 2011-ஆம் ஆண்டில் இந்திய 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்.[3] 13 வயதுக்குட்பட்டவர்கள், 15 வயதுக்குட்பட்டோர், 16 வயதுக்குட்பட்டவர் மற்றும் 19 வயதுக்குட்பட்டது போன்ற பல்வேறு வயது நிலைகளில் கருநாடக அணியின் தலைவராக இருந்தார்.[4]

இந்தியன் பிரீமியர் லீக்

[தொகு]

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

சனவரி 2018-இல், 2018 ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.[5] 30 ஏப்ரல் 2019 அன்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக ஹாட்ரிக் இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரின் இலக்குகளை வீழ்த்தினர்.[6][7][8]

பிப்ரவரி 2022 இல், 2022 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவரை இவரை வாங்கியது.[9]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

கோபால், பெங்களூரில் உள்ள தி ஃபிராங்க் அந்தோனி பொதுப் பள்ளியில் படித்தார். ஜெயின் பல்கலைக்கழகத்தில் பி. காம் (இளங்கலை வணிகம்) பயின்றார்.[10]

இவரது தந்தை ராமசாமி கோபால் 20 ஆண்டுகளாக சங்க அளவில் விளையாடும் துடுப்பாட்ட வீரராக இருந்தார். இவரது தாயார் அமிதா மாநில அளவில் கைப்பந்து விளையாடினார்.[11] தனது குழந்தைப் பருவத்தில் தனது முன்மாதிரியான அனில் கும்ப்ளே பந்துவீச்சு முறையினைப் பின்பற்ற விரும்பினார்.[12]

கோபால், தனது நீண்டகால காதலி நிகிதாவை 24 நவம்பர் 2021-இல் திருமணம் செய்து கொண்டார்.[13][14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Shreyas Gopal - CricketArchive profile". CricketArchive.
  2. "Shreyas Gopal - CricketArchive profile". CricketArchive.
  3. "Under-19 ODI Matches played by Shreyas Gopal". CricketArchive.
  4. "Rahul Dravid is my cricketing God, says Shreyas Gopal". Times of India. Retrieved 10 August 2014.
  5. "List of sold and unsold players". ESPNcricinfo. Retrieved 27 January 2018.
  6. "Shreyas Gopal cherishes big scalps of Kohli and AB De Villiers | Shreyas Gopal cherishes big scalps of Kohli and AB De Villiers" (in en). Deccan Chronicle. 4 April 2019 இம் மூலத்தில் இருந்து 23 March 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250323085459/https://www.deccanchronicle.com/sports/cricket/040419/shreyas-gopal-cherishes-big-scalps-of-kohli-and-ab-de-villiers.html.
  7. "IPL 2019: Rajasthan Royals' Shreyas Gopal claims hat-trick in five-over-a-side game". The Times of India. 1 May 2019 இம் மூலத்தில் இருந்து 23 March 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250323085326/https://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl/top-stories/ipl-2019-rajasthan-royals-shreyas-gopal-claims-hat-trick-in-five-over-a-side-game/articleshow/69121250.cms.
  8. "Gopal hat-trick in washout, RCB eliminated". ESPNcricinfo. Retrieved 1 May 2019.
  9. "IPL 2022 auction: The list of sold and unsold players". ESPNcricinfo. Retrieved 13 February 2022.
  10. Notable Alumni பரணிடப்பட்டது 2017-02-02 at the வந்தவழி இயந்திரம் Jain University
  11. "Rahul Dravid is my cricketing God, says Shreyas Gopal | New Zealand in India 2016 News - Times of India". The Times of India.
  12. IANS. "No Pressure, But Dream to Don India Colors Soon: Shreyas Gopal". India West (in ஆங்கிலம்). Archived from the original on 8 ஜூலை 2020. Retrieved 8 July 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. "भारत के इस लेग स्पिनर ने की शादी, Photos पोस्ट कर दी जानकारी, पत्नी चलाती हैं दो कंपनियां". TV9 Bharatvarsh. 25 November 2021 இம் மூலத்தில் இருந்து 23 March 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250323084712/https://www.tv9hindi.com/photo-gallery/cricket-photos/shreyas-gopal-wedding-with-nikitha-shiv-posts-photos-on-instagram-930553.html.
  14. "Indian Celebrities who got married in 2021". Shaadivale. 29 December 2021 இம் மூலத்தில் இருந்து 23 March 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250323084926/https://www.shaadivaale.com/post/indian-celebrities-who-got-married-in-2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரேயாஸ்_கோபால்&oldid=4586225" இலிருந்து மீள்விக்கப்பட்டது