உள்ளடக்கத்துக்குச் செல்

சிரேயங்கா பட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரேயங்கா பட்டீல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சிரேயங்காபட்டீல்
பிறப்பு31 சூலை 2002 (2002-07-31) (அகவை 23)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
மட்டையாட்ட நடைவலதுகைத் துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வழமைச் சுழல்
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 141)30 டிசம்பர் 2023 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப2 சனவரி 2024 எ. ஆத்திரேலியா
இ20ப அறிமுகம் (தொப்பி 80)6 டிசம்பர் 2023 எ. இங்கிலாந்து
கடைசி இ20ப7 சூலை 2024 எ. தென்னாப்பிரிக்கா
இ20ப சட்டை எண்31
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2019–தற்போதுகருநாடகம்
2023–தற்போதுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (மகளிர்)
2023கயானா அமேசான் வாரியர்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெ.ப.இ20 ப.அ.து பெ.இ20
ஆட்டங்கள் 2 18 42
ஓட்டங்கள் 4 170 222
மட்டையாட்ட சராசரி 4.00 18.88 10.09
100கள்/50கள் 0/0 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 4 73 25
வீசிய பந்துகள் 26 848 769
வீழ்த்தல்கள் 2 29 52
பந்துவீச்சு சராசரி 25.00 20.27 16.19
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/44 3/30 4/7
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 3/– 4/–
பதக்கத் தகவல்கள்
பெண்கள் துடுப்பாட்டம்
நாடு  இந்தியா
பெண்கள் ஆசியக் கோப்பை
இறுதிப் போட்டியாளர்2024 இலங்கைஅணி
மூலம்: CricketArchive, 20 February 2024

சிரேயங்கா பட்டீல் (Shreyanka Patil, பிறப்பு: 31 சூலை 2002) ஓர் இந்திய பெண் துடுப்பாட்ட அணிக்காக விளையாடி வருகிறார். உள்நாட்டுத் துடுப்பாட்டத்தில் கருநாடக அணிக்காகவும், பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும் விளையாடுகிறார்.[1] வலதுகை எதிர்ச் சுழல் பந்து வீச்சாளரான இவர்[2], 2023ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார்.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

சிரேயங்கா பட்டீல் 2002ஆம் ஆண்டு சூலை 31 அன்று பெங்களூர் நகரில் பிறந்தார்.[3] பத்து வயதில் துடுப்பாட்டம் விளையாடத் தொடங்கினார்.இவரது தந்தை ராஜேஷ் ஒரு துடுப்பாட்டப் பயிற்சி மையத்தை நடத்தி வந்தார். ஆரம்பத்தில் விரைவு வீச்சாளராகவும் பின்னர் நேர்ச்சுழல் முயற்சி செய்த இவர், இறுதியில் எதிர்ச்சுழல் பந்து வீச்சில் சிறந்து விளங்கினார்.[4] தனது திறமையை மேம்படுத்துவதற்காக கர்நாடகத்தின் குட்டனஹள்ளியில் உள்ள தேவ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார். பின்னர் கர்நாடகா 16 வயதுக்குட்பட்டோர் அணியில் இடம்பிடித்ததன் மூலம் தொழில்முறை துடுப்பாட்ட வாழ்க்கையைத் தொடங்கினார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Player Profile: Shreyanka Patil". CricketArchive. Retrieved 10 December 2023.
  2. "Shreyanka Patil to play for Guyana Amazon Warriors in WCPL". cricket.com. 30 June 2023. Archived from the original on 2 August 2023. Retrieved 18 December 2024.
  3. "Player Profile: Shreyanka Patil". CricketArchive. Retrieved 10 December 2023.
  4. "What you need to know about WPL 2024 Purple Cap Shreyanka Patil". Moneycontrol (in ஆங்கிலம்). 18 March 2024. Retrieved 16 April 2024.
  5. "Shreyanka Patil And Asha Sobhana: The RCB Spin Duo Are Here To Stay" (in en). Forbes India. https://www.forbesindia.com/article/lifes/shreyanka-patil-and-asha-sobhana-the-rcb-spin-duo-are-here-to-stay/92071/1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரேயங்கா_பட்டீல்&oldid=4560995" இலிருந்து மீள்விக்கப்பட்டது