சிரித்த முத்துகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிரித்த முத்துகள் கவிதை

     இதன் சிற்பி. பாலசுப்பிரமணியன் ஆவர். கவிதை என்பது இதயத்தின் அந்தரங்கத்திலிருந்து பேசப்படும் பேச்சு. இதற்கு முன்னுரை, அறிமுக முகவுரை, அணிந்துரை, அநாவசியமும், செயற்கையும் ஆகுமென்ற எண்ணம் உடையவன் சிற்பி.பாலசுப்பிரமணியன். கவிதைகள் மன அரங்கில் அபிநயம் பிடித்து ஆடுகின்றன. ஒலிக்கின்றன, உயிர்க்கின்றன.
   '"காவிய நாயகி கூவியழைக்கினறாள்
     காதுகள் குளிர கேளுங்கடி
    கட்டியம் கூறிடச் சூழுங்கடி" - என்று இந்த ஆசிரியர் நூலுக்கு ஒரு இடத்தில் பாடியிருக்கும் வரிகளை - வாசகர்கள் அனைவரையும் நோக்கிக் கூறி இக்கவிதைகளைப் படிக்க அழைக்க விரும்புகின்றன. நல்ல வாக்கு வளமும், சொற் செறவிவும் இக்கவிதையில் நிரம்பி இருக்கின்றன.
கம்பன், பாரதி - பாரதிதாசன் காலத்திற்குப் பின் தமிழ்க் கவிதைக்கு ஒரு புது வழி கிடைத்து இருக்கிறது. உலகில் விஞ்ஞானம் சமூதாய அரசியல் பாதிப்புகள் தமிழ் கவிதையில் விளைய வேண்டும் என நாம் ஆர்வமாக இருந்து வருகின்ற காலம் இது.சிற்பி பாலசுப்பிரமணியன்  போன்ற கவிஞர்கள் முயன்றால் தமிழ் கவிதை துறையில் பாரதி - பாரதிதாசன் பின் ஒரு மறுமலர்ச்சி வேதத்தையும் புதுமை ஆர்வத்தையும் ஏற்படுத்த முடியும். மேலம் ஆசிரியர் தமிழகத்திற்கு பல புதுமை விருந்துகளை அளிக்க வேண்டுமென்று மக்களே வேண்டுவார்கள். அப்படி தூண்டிவிட செய்யும் சொற்பொழியும், பொற்பொழியும் இக்கவிதை தொகுதியில் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரித்த_முத்துகள்&oldid=2376493" இருந்து மீள்விக்கப்பட்டது