சிராய் ஆறு
| சிராய் ஆறு | |
|---|---|
![]() | |
| அமைவு | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • அமைவு | இந்தியா |
| முகத்துவாரம் | |
• அமைவு | கச்சு வளைகுடா, அரபிக்கடல், இந்தியா |
• ஆள்கூறுகள் | 23°09′36″N 70°15′27″E / 23.1601°N 70.2575°E |
• உயர ஏற்றம் | 0 m. |
| நீளம் | 30 km (19 mi) |
| வெளியேற்றம் | |
| • அமைவு | தப்பார் அணை |
| வெளியேற்றம் | |
| • அமைவு | கண்ட்லா, கச்சு வளைகுடா, அரபிக்கடல் |
சிராய் ஆறு (Chirai River), சகாரா ஆறு (Sakara River) என்றும் அழைக்கப்படுகிறது. இது மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள குசராத்து மாநிலத்தில் ஓடும் ஒரு ஆறு ஆகும். இந்த ஆற்றின் பிறப்பிடம், பண்டைய நகரமான கிர்சாராவிற்கு மேலுள்ள பகுதியில் அமைந்துள்ளது. இதன் ஆற்றுப் படுகையின் அதிகபட்ச நீளம் 30 கி.மீ ஆகும். இப்படுகையின் மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 365 சதுர கி.மீ ஆகும்.[1]
சிராய் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தப்பார் அணை , 1975-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.(23°15′07″N 70°08′11″E / 23.25194°N 70.13639°E).. இது கான்கிரீட் பூச்சுடன் கூடிய ஒரு மண் அணை ஆகும். இது 4,575 மீட்டர் நீளமும், 17.75 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த அணை, 48.81 மில்லியன் கன மீட்டர் நீரைத் தேக்கி வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.[2] புஜ் நகரில் சனவரி 2001-ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக இந்த அணை உடைந்தது. பின்னர், அது மீண்டும் புதிதாகக் கட்டப்பட்டது.[3] தப்பார் நீர்த்தேக்கம் , காந்திதாம் பெருநகரப் பகுதிக்கும், கண்ட்லாவில் அமைந்துள்ள துறைமுக நகரத்திற்கும் தேவையான குடிநீரை வழங்குகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chirai River". guj-nwrws.gujarat.gov.in. குஜராத் அரசு. Archived from the original on 21 February 2015.
- ↑ Sêco e Pinto, Pedro Simão (2015). "Lessons learned from dams behavior under earthquakes". In Ansal, Atilla; Sakr, Mohamed (eds.). Perspectives on Earthquake Geotechnical Engineering. Cham, Switzerland: Springer Verlag. pp. 187–246, page 196. ISBN 978-3-319-10785-1.
- 1 2 Yagev, Sanjaykumar M.; Mishra, R.; Samtani, B. K. (2008). "Rehabilitation of earthquake affected Tapar Dam, Gujarat, India". Geomechanics in the emerging social and technological age: Proceedings of the 12th Conference of International Association for Computer Methods and Advances in Geomechanics, Goa, India. Vol. 6. Cham, Switzerland: Springer Verlag. pp. 4744–4747. (Paper Id: 688)
https://en.wikipedia.org/w/index.php?title=Chirai_River&action=edit#/map/0/9/23.1606/70.2567
