சிராம்பியடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிராம்பியடி
இடம்
சிராம்பியடி
சிராம்பியடி
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவுமண்முனைப்பற்று
கிராமம்புதுக்குடியிருப்பு

சிராம்பியடி (Siraampiyadi) என்பது மட்டக்களப்பு நகரில் இருந்து கல்முனை செல்லும் பாதையில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு கிராமத்தில் மட்டக்களப்பு வாவிக்கு அருகாமையில் காணப்படும் ஒர் இடத்தின் பெயராகும்.

பெயர்க் காரணம்[தொகு]

16ம் நுாற்றாண்டின் ஆரம்பத்தில் ஒத்துக்குடா கந்தன் என்பவரும் அவரது புத்திரியும் சகோதரிகளும் ஏழு கண்ணகி விக்கிரங்களுடன் மட்டக்களப்பு வாவியல் வந்து இறங்கி "சிராம்பி" கட்டி கண்ணகி வழிபாடு நடாத்திய இடம் என்பதால் இவ்விடம் சிராம்பியடி என அழைக்கப்படுகின்றது.[1] [2]

சிராம்பியடி பிள்ளையார் கோயில்[தொகு]

கண்ணகை வழிபாடு இடம்பெறறபோது கண்டி மன்னனின் ஆணையால் குறித்த கண்ணகை விக்கிரகங்கள் மட்டக்களப்பின் ஏழு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பிற்காலங்களில் சிரம்பியடியில் தோற்றுவிக்கப்பட்ட ஆலயம் சிராம்பியடி பிள்ளையார் ஆலயம் ஆகும். [3]

காட்சியகம்[தொகு]

குறிப்புக்கள்[தொகு]

  1. மட்டக்களப்பு மான்மீயம் (இரண்டாம் பதிப்பு 1998), பதிப்பாசிரியர் - வித்துவான் எப்.எக்ஸ்.சி.நடராசா (பக்கம் - 69)
  2. செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வரலாறு (முதல் பதிப்பு - 1994) - வெளியீடு. பதிப்பு ஆலய நிருவாகம் (பக்கம் - 3,30)
  3. செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வரலாறு (முதல் பதிப்பு - 1994) - வெளியீடு. பதிப்பு ஆலய நிருவாகம் (பக்கம் - 31)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிராம்பியடி&oldid=2770505" இருந்து மீள்விக்கப்பட்டது