சிராகன் விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேளா சிராகனைக் கொண்டாடுதல்

சிராகன் விழா அல்லது சாலிமார் விழா ( பஞ்சாபி: میلہ چراغاں  ; "விளக்குகளின் திருவிழா") என்பது 16 ஆம் நூற்றாண்டில் லாகூரில் வாழ்ந்த பஞ்சாபி கவிஞரும் சூஃபி துறவியுமான ஷா ஹுசைனின் (1538-1599) நினைவு நாளில் நடத்தப்படும் ஆண்டுவிழா ஆகும். இது பாகிஸ்தானின் லாகூர் புறநகரில் உள்ள சாலிமார் தோட்டத்தை ஒட்டிய பாக்பன்புராவில் உள்ள ஷா ஹுசைனின் சன்னதியில் நடைபெறுகிறது.[1] 1958ல் ஜனாதிபதி அயூப் கான் உத்தரவிடும் வரை, சாலிமார் பூங்காவிலும் இவ்விழா நடந்து வந்தது.

தொடக்கத்தில் இந்த திருவிழா தான் பஞ்சாபில் பெரியதும் முதன்மையானதுமாக இருந்தது, ஆனால் இப்போது பசந்துக்கு அடுத்தபடியாக வருகிறது.இந்திய துணைக்கண்டத்தின் மிகப்பழமையான விழாவான இதில் சாதாரண விவசாயிகள், முகலாய ஆட்சியாளர்கள், பஞ்சாபி சீக்கியர்கள் மற்றும் பிரித்தானிய ஆட்சியின் போது பிரித்தானிய அதிகாரிகள் கூட இந்த விழாவில் கலந்து கொண்டு நினைவுகூர்ந்துள்ளார். மகாராஜா ரஞ்சித் சிங் (13 நவம்பர் 1780-27 ஜூன் 1839) இந்த 16 ஆம் நூற்றாண்டின் சூஃபி துறவியான ஷா ஹுசைன் மீது அதிக மரியாதை வைத்திருந்தார்.[2] 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பஞ்சாபில் சீக்கியர்கள் ஆட்சி செய்த காலத்தில், மகாராஜா ரஞ்சீத் சிங் லாகூர் கோட்டையில் இருந்து இந்த திருவிழா நடக்கும் இடத்திற்கு ஊர்வலம் செல்வார்.[1] ஆயிரக்கணக்கான சீக்கியர்கள், முஸ்லிம்கள் மற்றும் இந்துக்களுடன், பேரரசர் தனது அரண்மனையிலிருந்து சன்னதிக்கு வெறுங்காலுடன் ஊர்வலம் செல்வார், என்பதாக வரலாற்றுக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

படத்தொகுப்புக்கள்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிராகன்_விழா&oldid=3924983" இலிருந்து மீள்விக்கப்பட்டது