சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதி
| சிரம்பான் ஜெயா (N24) | |
|---|---|
| State Constituency in Negeri Sembilan | |
| வாக்காளர்களின் எண்ணிக்கை | 32,390 (2023)[1] |
| முன்னாள் தொகுதி | |
| உருவாக்கப்பட்ட காலம் | 2018 |
| கட்சி | பாக்காத்தான் அரப்பான் |
| சட்டமன்ற உறுப்பினர் | குணசேகரன் பழனிசாமி |
| முதல் தேர்தல் | 2018 |
| இறுதித் தேர்தல் | 2023 |
சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதி (N36) (மலாய்: Bahagian Pilihan Raya Seremban Jaya; ஆங்கிலம்: Seremban Jaya State Constituency என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[2] இந்தத் தொகுதி, 2018-ஆம் ஆண்டில், செனவாங் சட்டமன்றத் தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது.
சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மறுசீரமைக்கப்பட்ட இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2018-ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2023-ஆம் ஆண்டில் மாநிலத் தேர்தல் நடைபெற்றது.
2018-ஆம் ஆண்டில் இருந்து சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதி, நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது டத்தோ குணசேகரன் பழனிசாமி (Gunasekaren Palanisamy) அல்லது பி. குணா[3] என்று அழைக்கப்படும் இவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியின் 2023-ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கை:[4]
30 மார்ச் 2018 அன்று வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின்படி, சிரம்பான் ஜெயா தொகுதி 5 வாக்குச் சாவடித் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[5]
தொகுதி வரலாறு
[தொகு]| சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர்கள் | |||
|---|---|---|---|
| சட்டமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
| செனவாங்; அம்பாங்கான்; பாரோய்; சிக்காமட் தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்ட தொகுதி | |||
| 14-ஆவது | 2018-2023 | குணசேகரன் பழனிசாமி | பாக்காத்தான் (ஜசெக) |
| 15-ஆவது | 2023–தற்போது வரையில் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
|---|---|---|---|---|---|
| குணசேகரன் பழனிசாமி | பாக்காத்தான் | 17,080 | 79.60 | 0.81 ▼ | |
| கேரி லீ பான் பாட் | பெரிக்காத்தான் | 4,377 | 20.40 | 20.40 | |
| மொத்தம் | 21,457 | 100.00 | – | ||
| செல்லுபடியான வாக்குகள் | 21,457 | 99.04 | |||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 207 | 0.96 | |||
| மொத்த வாக்குகள் | 21,664 | 100.00 | |||
| பதிவான வாக்குகள் | 32,290 | 21,664 | 17.40 ▼ | ||
| Majority | 12,703 | 59.2 | 2.20 ▼ | ||
| பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Warta Kerajaan Persekutuan - Keputusan Pilihan Raya Yang Dipertandingkan Dan Penyata Pengundian Selepas Penjumlahan Rasmi Undi Bahagian Pilihan Raya Negeri Bagi Negeri Sembilan" (PDF). Jabatan Peguam Negara. 2023-08-29. Retrieved 2024-04-27.
{{cite web}}: CS1 maint: date and year (link) - ↑ "14th General Election Malaysia (GE14 / PRU14) - Negri Sembilan".
- ↑ "Dap Guna Palanisamy". www.facebook.com (in ஜெர்மன்). Retrieved 14 February 2026.
- ↑ "15th Selangor State Election - Results Overview". live.chinapress.com.my. Retrieved 2023-08-11.
- ↑ "NOTICE OF POLLING DISTRICTS AND POLLING CENTRES FOR THE FEDERAL AND STATE CONSTITUENCIES OF THE STATES OF MALAYA". www.scribd.com. Retrieved 7 February 2026.
- ↑ "14th General Election Malaysia (GE14 / PRU14) - Results Overview". election.thestar.com.my. Retrieved 2023-03-05.
- ↑ "Warta Kerajaan Persekutuan - Keputusan Pilihan Raya Yang Dipertandingkan Dan Penyata Pengundian Selepas Penjumlahan Rasmi Undi Bahagian Pilihan Raya Negeri Bagi Negeri Sembilan" (PDF). Jabatan Peguam Negara. 2022-12-14. Retrieved 2024-05-13.
{{cite web}}: CS1 maint: date and year (link)
மேலும் காண்க
[தொகு]- பாரோய்
- சிரம்பான் மக்களவைத் தொகுதி
- சிரம்பான் 2
- குணசேகரன் பாலசாமி
- ராஜசேகரன் குணசேகரன்
- வீரப்பன் சுப்பிரமணியம்