சிரத்தா நிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரத்தா நிகம்
The TV actress Shraddha Nigam at the 36th International Film Festival of India – 2005 in Panaji, Goa on November 27, 2005.jpg
2005இல் சிரத்தா நிகம்
பிறப்பு1 அக்டோபர் 1979 (1979-10-01) (அகவை 43)[1]
இந்தியா
தேசியம் இந்தியா
வாழ்க்கைத்
துணை
கரண் சிங் குரோவர்
(தி. 2008; ம.மு. 2009)

மயங்க் ஆனந்த்]] (தி. 2012)

சிரத்தா நிகம் (Shraddha Nigam) (பிறப்பு 1 அக்டோபர் 1979) ஓர் இந்தியத் திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் தோன்றும் நடிகையாகாவார்.[2]

சொந்த வாழ்க்கை[தொகு]

சாலோம் அழகிப் போட்டி நிகழ்ச்சியில் மயங்க் ஆனந்துடன் சிரத்தா நிகம்.

சிரத்தா தனது கல்வியை இந்தூரில் முடித்தார். புனேவில் உள்ள சிம்பியோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தில்வடிவமைப்பைப் படித்தார். 2008ஆம் ஆண்டில் இவர் கரண் சிங் குரோவர் என்ற பிரபல இந்தியத் தொலைக்காட்சி நடிகரை மணந்தார். ஆனால், இவர்கள் 2009இல் விவாகரத்து பெற்றனர். 2012 திசம்பரில் சிரத்தா நடிகர் மயங்க் ஆனந்தை மணந்தார.[3] இவர்கள் 2011 முதல் கூட்டாக ஒரு வடிவமைப்பு வரிசையைத் தொடங்கினார்கள். மேலும், கூட்டு தளவாடங்கள் வடிவமைப்பும் உட்புற வடிவமைப்புக்கான திட்டங்களையும் கொண்டுள்ளனர்.

தொழில்[தொகு]

1997இல் வெளியான பொன்னிலமழா என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரைப்படங்களில் அறிமுகமானார். இவரது இந்தி அறிமுகம் 2000ல் ஜோஷ் என்ற படத்தில் இருந்தது. பின்னர் சில பாலிவுட் படங்களில் நடித்தார். சோடியன் என்ற நாடகத் தொடர் மூலம் இவர் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.[4] தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, கிருஷ்ணா அர்ஜுன் என்ற படத்தில் பெண் கதாபாத்திரத்தில் நடித்ததைப் பற்றி எழுதும்போது "இதயங்களைத் திருடினார்" என்று எழுதியது. 2010இல், சிரத்தா தனது வடிவமைப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 2012ஆம் ஆண்டில், பைரவி ராய்ச்சுரா தயாரித்த நிகழ்ச்சியில் அனுஜ் சக்சேனாவுக்கு இணையாக தோன்ற இவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.

சான்றுகள்[தொகு]

  1. "Shraddha Nigam". Oneindia.in. 19 ஏப்ரல் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Shraddha Nigam upsets Karan Oberoi". Archived from the original on 2012-03-14. https://web.archive.org/web/20120314143358/http://entertainment.in.msn.com/tv/article.aspx?cp-documentid=3032458. 
  3. Abraham, Letty Mariam (3 January 2013). "Shraddha Nigam and Mayank Anand finally tie the knot". BollywoodLife.com.
  4. "Shraddha Nigam Biography". Oneindia.in. 19 ஏப்ரல் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 August 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரத்தா_நிகம்&oldid=3584100" இருந்து மீள்விக்கப்பட்டது