சிரக்கல் காளிதாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரக்கல் காளிதாசன்
Chirakkal Kalidasan
இனம்எலிபசு மேக்சிமசு (ஆசிய யானை)
பால்ஆண்
பிறப்புஅண். 1980
கர்நாடகம்
நாடுஇந்தியா
அறியப்படுவதற்கான
 காரணம்
திரிச்சூர் பூரம் பாகுபலி 2
உரிமையாளர்சிரக்கால் மது
உயரம்3.14 m (10 அடி 4 அங்)
Named afterகாளிதாசன்

சிரக்கல் காளிதாசன் (Chirakkal Kalidasan)(பிறப்பு சி. 1980) என்பது ஒரு பிரபலமான யானை ஆகும். இது கேரளாவில் உள்ள உயரமான யானையாக இந்தியாவின் மிக உயரமான யானையான தெச்சிக்கோட்டுகாவ் ராமச்சந்திரனுக்கு அடுத்த நிலையில் உள்ளது.[1][2]

சிரக்கல் காளிதாசன் தற்போது 314 செ.மீ. உயரமுடையது. இது இம்மாநிலத்தின் வளர்ப்பு யானைகளில் உயரமானது ஆகும்.[3]  சில தலப்பொக்கம் (ஹெட்ஸ்-அப்) போட்டிகளில் வென்றதற்காகவும் அறியப்படுகிறது.[4]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

காளிதாசன் கர்நாடக காடுகளில் வனப்பகுதியில் பிறந்தது. சிரக்கல் காளிதாசன் ஆசிய வகை யானையாகும் (எலிபாசு மாக்சிமசு). மணிஸ்ஸி ஹரியால் கேரளாவுக்கு அழைத்து வரப்பட்ட காளிதாசன் பின்னர் 2000 ளில் சிரக்கல் மது என்பவரால் உரிமையாக்கப்பட்டது.[5] 

அங்கீகாரங்கள்[தொகு]

காளிதாசன் மலையாளத் திரைப்பட்த்துறையில் ஒரு நட்சத்திர யானையாகும்.

திரைப்படங்கள்[தொகு]

2017ல் வெளியான காவிய திரைப்படமான பாகுபலி 2ல் நடித்த பெருமையுடையது.[6] பட்டாபிசேகம், புனலையன் அகர்பத்தி மற்றும் தில் சே படங்களில் நடித்த பெருமையுடையது.[7]

காணொலி தொகுப்பு[தொகு]

2018ஆம் ஆண்டில், விஜய் யேசுதாஸ் பாடிய "கஜம்" என்ற இசை காணொலியில் நடித்துள்ளது.[8]

பிற[தொகு]

2020ஆம் ஆண்டில், இந்தியன் சூப்பர் லீக் அணியான கேரளா பிளாஸ்டர்ஸின் விளம்பர காணொளியில் ஒரு பகுதியில் பங்கேற்று உள்ளது.[9][10]

2010களின் முற்பகுதியில், யானை பிரியர்களால் இவருக்கு இளையவர் தெச்சிகோட் என்ற பெயர் வழங்கப்பட்டது.[11]

நடிகர்கள் மற்றும் மாதிரிகளுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வுகளில் காளிதாசன் பங்கெடுத்துள்ளார்.[12]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gajaveeran". Gajaveeran (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-04-24. Archived from the original on 2021-01-17. பார்க்கப்பட்ட நாள் 2021-01-14.
  2. ''Gajarajan has the potential to become the tallest man in Kerala in the near future. Kalidasa was born in Karnataka. Manisseri Hari brings to Kerala so...'' Read more at: https://web.archive.org/web/20210114020624/https://www.mathrubhumi.com/features/elephants/article-1.555515 The future promise of Chirayakkal Kalidasanhttps://web.archive.org/web/20210114020624/https://www.mathrubhumi.com/features/elephants/article-1.555515
  3. "Chirakkal Kalidasan, an Asian elephant at Chirakkal Madhu". www.elephant.se. பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.
  4. "ചെറായി പൂരം: തലപ്പൊക്കത്തില്‍ കാളിദാസന്‍ | Ernakulam | Kerala | Deshabhimani | Sunday Feb 12, 2017". www.deshabhimani.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.
  5. "Chirakkal Kalidasan Kerala Elephant - One of the tallest elephant in Kerala ". Aanachandam - Kerala Elephants. பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.
  6. "കേരളത്തിലെ ഗജരാജാക്കന്മാർ". Janam TV (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-08-15. பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.
  7. "ബാഹുബലിയുടെ വിജയത്തിനൊപ്പം താരപദവിയിലേക്ക് ചിറക്കൽ കാളിദാസൻ". ManoramaOnline. பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.
  8. "പടനായകന്റെ വീര്യവുമായി ചിറക്കല്‍ കാളിദാസന്‍; ഹരമായി 'ഗജം'". Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.
  9. "കൊമ്പ് കുലുക്കാന്‍ ബ്ലാസ്റ്റേഴ്സ് ഇറങ്ങുന്നു; ഒറിജിനല്‍ കൊമ്പന്‍ ദാ ഇവിടെയുണ്ട്... | bahubali fame elephant chirakkal kalidasan acted in kerala blasters video". www.asianetnews.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.
  10. Editor (2020-11-20). "ഗജരാജ ബാഹുബലി ചിറക്കൽ കാളിദാസൻ ഇനി ബ്ലാസ്റ്റേഴ്‌സ് പരസ്യത്തിൽ". The News Today (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-01-14. பார்க்கப்பட்ட நாள் 2021-01-13. {{cite web}}: |last= has generic name (help)
  11. Mundanthara, Vinu (2018-05-13). "ചിറയ്ക്കൽ കാളിദാസൻ". Aanakkazhchakal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.
  12. "ചിറക്കൽ കാളിദാസനൊപ്പം ഒരു ഫോട്ടോഷൂട്ട്, ദൃശ്യ രഘുനാഥിന്റെ പുതിയ ചിത്രങ്ങൾ ശ്രദ്ധ നേടുന്നു". മലയാളം ന്യൂസ് പോർട്ടൽ (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-08-28. பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரக்கல்_காளிதாசன்&oldid=3731954" இலிருந்து மீள்விக்கப்பட்டது