சியோலைட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கனிமங்கள்[தொகு]

சியோலைட் குழுவைச் சேர்ந்த கனிமங்கள் சோடியம், கால்சியம் ஆகியவற்றின் நீர் கலந்த அலுமினியம் சிலிகேட் ஆகும். இவற்றிலுள்ள அலுமினியம், சிலிக்கான் இரண்டும் ஆக்சிஜனுக்குப் பாதியளவு என்ற விகிதத்தில் இருக்கக் காணலாம். அலுமினிசலஃபிடே யம் ஆக்சைடும், கால்சியம் ஆக்சைடு, சோடியம்ஆக்சைடு ஆகிய இரண்டும் சமவிகிதத்தில் இருக்கின்றன.

சியோலைடின் முக்கயத்துவம்[தொகு]

சியோலைட்டுகளில் நீர் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வெளிப்படுவது இல்லை. சூடாக்கப்படும்போது அதிலுள்ள நீர் எளிதாகத் தொடர்ந்து வெளியேறுகின்றன. இவ்வாறு சியோலைட்டிலுள்ள நீர் வெளியேறுவதால் அது அணு அமைப்பில் சிதைவோ, மாற்றோமோ ஏற்படுவதில்லை. நீரின் ஒரு பகுதி வெளியேறியனிலையில் சியோலைட்டுகள் அமோனியா ஆல்கஹால், ஹைட்ரஜன் சலஃபைடு, அயோடின் முதலானவற்றை உறிஞ்சி அவ்விடத்தை நிரப்பிக்கொள்கின்றன. [1]

  1. அறிவியல் களஞ்சியம் தொகுதி -பத்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியோலைட்டுகள்&oldid=2421782" இருந்து மீள்விக்கப்பட்டது