சியைசெல் சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சியைசெல் அறுதியிடல் அல்லது சியைசெல் சோதனை (Zeisel determination or Zeisel test) என்பது ஒரு வேதிப்பொருளில் எசுத்தர்கள் அல்லது ஈதர்கள் இருப்பதைக் கண்டறியும் சோதனையாகும்[1][2][3][4]. செக் நாட்டு வேதியியலர் சைமன் சியைசெல் (1854–1933). கண்டறிந்த காரணத்தால் இவ்வினை சியைசெல் சோதனை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

Zeisel determination
Zeisel determination

இப்பண்பறி பகுப்பாய்வு சோதனையில், சோதனைக்குழாயில் எடுத்துக் கொள்ளப்பட்ட மாதிரி உப்பானது முதலில் அசிட்டிக் அமிலம், ஐதரசன் அயோடைடு கலவையுடன் சேர்த்து வினைப்படுத்தப்படுகிறது. இதனால் ஈதர் அல்லது எசுத்தர் மூலக்கூறு பிளவடைந்து ஆல்க்கைல் ஆலைடு ஆகவும் முறையே ஆல்ககால் அல்லது ஒரு கார்பாக்சிலிக் அமிலமாகவும் மாறுகிறது.

கலவையை சூடுபடுத்துவதால், சோதனைக்குழாயின் மேற்புறத்திலுள்ள தெவிட்டிய பாதரச(II) அயோடைடு காகிதத்துடன் உருவாகும் வாயுக்கள் வினைபுரியும் வாய்ப்பு ஏற்பட்டு சிவப்பு அல்லது மஞ்சள் நிறம் உருவாகிறது[5].

ஒரு பொருளிலுள்ள மெத்தாக்சி குழுக்களின் (-OCH3) எண்ணிக்கையை உறுதி செய்யவும் இவ்வினை பயன்படுத்தப்படுகிறது. இவ்வினையில் அயோடோமெத்தேனுடன் வெள்ளி நைட்ரேட்டு கரைலைச் சேர்த்து காய்ச்சி வடித்தல் செய்யும்போது வெள்ளி அயோடைடு உருவாகிறது. வீழ்படிவை வடிகட்டி நிறையறிதல் மூலம் அயோடின் அணுக்களின் எண்ணிக்கையையும் மெத்தாக்சி குழுக்களின் எண்ணிக்கையையும் உறுதிசெய்ய முடியும்.

செயற்கை பயன்பாடுகள்[தொகு]

Zeisel determination
Zeisel determination

மேற்கோள்கள்[தொகு]

  1. S Zeisel. Monatshefte für Chemie 6 (1885) p989. http://www.springerlink.com/content/j6n1272v54q05027/ பரணிடப்பட்டது 2019-07-02 at the வந்தவழி இயந்திரம்
  2. S Zeisel. Monatshefte für Chemie 7 (1886) p406. http://www.springerlink.com/content/w135j20507818364/ பரணிடப்பட்டது 2019-07-02 at the வந்தவழி இயந்திரம்
  3. V Prey. Chemische Berichte 74 (1941) p350.
  4. Lange. J Org Chem 27 (1962) p2037.
  5. "Ziesel Reaction". Archived from the original on 2012-06-30. பார்க்கப்பட்ட நாள் 2017-05-22.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியைசெல்_சோதனை&oldid=3791923" இலிருந்து மீள்விக்கப்பட்டது