சியூதாத் டி லா பாசு
சியூதாத் டி லா பாஸ்
Ciudad de la Paz | |
|---|---|
தலைநகரம் | |
| ஆள்கூறுகள்: 1°35′20″N 10°49′21″E / 1.58889°N 10.82250°E | |
| நாடு | |
| மாகாணம் | சிப்புலோகோ |
| ஆள்புலம் | ரீயோ முனி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 81.5 km2 (31.5 sq mi) |
| ஏற்றம் | 454 m (1,490 ft) |
| மக்கள்தொகை (2022) | |
| • மொத்தம் | 2,000[1] |
| நேர வலயம் | மே.ஆ.நே |
சியூதாத் டி லா பாசு (Ciudad de la Paz) என்பது எக்குவடோரியல் கினி நாட்டின் தலைநகரம் ஆகும். மலாபோவில் அமைந்திருந்த தலைநகரம் 2026 சனவரி 2 அன்று சியூதாத் டி லா பாசிற்கு மாற்றப்பட்டது.[3][4][5][6] இந்நகரத்தின் பெயர் முன்னர் ஜிபுலோகோ அல்லது ஒயாலா என இருந்தது.[7]
2015 ஆம் ஆண்டில் நகர்ப்புற மாவட்டமாக இது நிறுவப்பட்டது,[8] இது 2017 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட எக்குவட்டோரியல் கினியின் புதிய மாகாணமான சிப்லோகோவின் நிர்வாகத் தலைமையகமாகவும் உள்ளது.[9] 2017 ஆம் ஆண்டில், இந்த நகரம் அதிகாரப்பூர்வமாக "சியுதாத் டி லா பாஸ்" (அமைதி நகரம்) என்று பெயரிடப்பட்டது.[10][11]
திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட இந்நகரத்தின் இருப்பிடம் இதன் எளிதான அணுகலாலும், மென்மையான காலநிலைக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. பயோக்கோ தீவில் உள்ள பழைய தலைநகரமான மலாபோ போலல்லாமல், இது குறிப்பாக நாட்டின் முக்கிய நிலப்பகுதியில் உள்ளது. இது கட்டடக்கலை, நகர்ப்புறவியம் - எதிர்கால கட்டிடக்கலை சிந்தனைக்காக போர்த்துகீசிய நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டது. இது சுமார் 200,000 மக்கள் வசிக்கும் இடமாகும்.[12] ஒரு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தையும், ஏராளமான சனாதிபதி மாளிகைகளையும், 8150 எக்டேர் பரப்பளவையும் கொண்டுள்ளது.[13][14] இந்த புதிய தலைநகரின் கட்டுமானம், இந்த முயற்சிக்கு உந்து சக்தியாக இருந்த அரசுத்தலைவர் தியோடோரோ ஒபியாங்கிற்கு எதிரான அரசியல்வாதிகளால் விமர்சிக்கப்பட்டது. எக்குவட்டோரியல் கினி அரசாங்கம் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நகரத்திற்குக் குடிபெயரத் தொடங்கியது.[15]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "En Guinée équatoriale, Ciudad de la Paz, luxueuse capitale inaboutie et déserte". Le Monde.fr. 17 January 2022. https://www.lemonde.fr/afrique/article/2022/01/17/en-guinee-equatoriale-ciudad-de-la-paz-luxueuse-capitale-inaboutie-et-deserte_6109848_3212.html.
- ↑ "El Gobierno de Guinea Ecuatorial se muda de Malabo a Oyala" (in ஸ்பானிஷ்). 11 February 2017. Archived from the original on 26 September 2017. Retrieved 25 September 2017.
- ↑ "Decreto Ley por el que se declara la Ciudad de la Paz, Djibloho, capital de la República de Guinea Ecuatorial". Guinea Ecuatorial (in ஸ்பானிஷ்). 2 January 2026. Retrieved 8 January 2026.
- ↑ Fortin, Jacey (19 December 2012). "Poverty-Stricken Equatorial Guinea Builds Expensive Capital City In The Middle Of Nowhere". International Business Times.
- ↑ Empresas portuguesas planeiam nova capital da Guiné Equatorial. africa21digital.com. 5 November 2011
- ↑ Atelier luso desenha futura capital da Guiné Equatorial பரணிடப்பட்டது 15 அக்டோபர் 2015 at the வந்தவழி இயந்திரம். boasnoticias.pt. 5 November 2011
- ↑ "Oyala la futura capital de Guinea Ecuatorial". Guinea Market (in ஸ்பானிஷ்). 28 August 2013. Retrieved 8 January 2026.
- ↑ "Solemn inauguration of the new city of Djibloho". Equatorial Guinea Press and Information Office. 3 August 2015 இம் மூலத்தில் இருந்து 30 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190330204713/https://www.guineaecuatorialpress.com/noticia.php?id=6805&lang=en.
- ↑ Djibloho – Equatorial Guinea's Future Capital City/IDF – Ideias do Futuro
- ↑ "Prime Minister presents draft laws before Chamber of Deputies". Equatorial Guinea Press and Information Office. 25 February 2017. Archived from the original on 31 March 2019. Retrieved 25 September 2017.
- ↑ "Swearing-in of new offices for directors at Ministry for National Defence". Equatorial Guinea Press and Information Office. 3 August 2017. Retrieved 25 September 2017.
- ↑ Oyala, una nueva capital para la megalomanía de Obiang. abc.es. 26 December 2012
- ↑ Arquitetos portugueses projetam nova capital para Guiné Equatorial பரணிடப்பட்டது 10 மே 2013 at the வந்தவழி இயந்திரம். piniweb.com.br. 10 November 2011
- ↑ Mauricio Lima (4 November 2011) Ateliê português desenha futura capital da Guiné Equatorial பரணிடப்பட்டது 22 சனவரி 2012 at the வந்தவழி இயந்திரம். greensavers.pt.
- ↑ BBC Equatorial Guinea government moves to new city in rainforest
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் சியூதாத் டி லா பாசு பற்றிய ஊடகங்கள்- Ateliê português desenha futura capital da Guiné Equatorial