உள்ளடக்கத்துக்குச் செல்

சியூசு1 (கணினி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியூசு1 (Z1) கணினியின் நேர்ப்படி

1938 ஆம் ஆண்டில், செர்மனியைச் சேர்ந்த கொன்ராடு சியூசு எனும் அறிஞர், சியூசு1(Z1) எனும் விசைமுறைக் கணக்கிடும் கருவியை வடிவமைத்தார்.[1][2] இக்கணக்கிடும் கருவியானது, 22 பிட்டு அகலம் கொண்ட மிதவைப்புள்ளி எண்களை கையாண்டிடும் இருமை எண் வடிவமைப்பும் சிறு நிரலாக்க வசதியும் கொண்ட விசைமுறைக் கணக்கிடும் கருவியாக இருந்தது. எண்களை ஒன்றன்பின் ஒன்றாக கூட்டிடவும் கழித்திடவும் பெருக்கிடவும் வகுத்திடவும் இதில் வசதிகள் இருந்தன. இதனுள் 64 என்களை சேமிக்கவல்ல நினைவகமும் இருந்தது. 35 மிமி ஞெகிழிப்படலத்தில் பதிக்கப்பட்ட கணக்கிடுவதற்கான நிரலின் கட்டளைகள் இக்கருவியால் படிக்கப்பட்டு இயக்கப்பட்டன. 30000 உலோகப் பகுதிகளும் 1 டன் எடை கொண்ட கருவியக இது இருந்தது. கடிகார அதிர்வலை உருவாக்கிட இதனுள் ஒரு மின்னோட்டி இருந்தது. சான் வான் நோய்மான் பின்னாட்களின் கட்டமைத்துப் புகழ்பெறச்செய்த நிரல்தேக்கிக் கணினிமாதிரியை ஒத்தே இருந்தது சியூசு1இன் வடிவமைப்பு. 1944 ஆம் ஆண்டு, பார்ப்போர் நடந்துகொண்டிருந்த காலத்தில் பெர்லினின் மீது பிரித்தன் மேற்கொண்ட குண்டுபொழிவில் இவரது குடியிருப்பும் அதற்குள் இருந்த சியூசு1 கருவியும் அதன் செயல்திட்ட வரைபடங்களும் சிதைந்துபோயின. பின்னர் சீமென்சு எனும் நிறுவனத்தின் பண உதவியில் 1989 ஆம் அண்டு, இரண்டு கோடி ரூபாய் செலவில் இக்கருவியை சில உதவியாளர்களுடன் இணைந்து மீட்டுருவாக்கினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bauer, Friedrich Ludwig (2009-11-05). Origins and Foundations of Computing: In Cooperation with Heinz Nixdorf MuseumsForum (in ஆங்கிலம்). Springer Science & Business Media. pp. 78–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-64202992-9. பார்க்கப்பட்ட நாள் 2022-07-10.
  2. Zuse, Konrad (1976). The Plankalkül (in ஆங்கிலம்). Gesellschaft für Mathematik und Datenverarbeitung (GMD). pp. 21–. பார்க்கப்பட்ட நாள் 2022-07-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியூசு1_(கணினி)&oldid=3524137" இலிருந்து மீள்விக்கப்பட்டது