சியு சாங் சனின் மேற்கு நோக்கிய பயணங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சியு சாங் சனின் மேற்கு நோக்கிய பயணங்கள் (Travels to the West of Qiu Chang Chun) என்பது தாவோயியத் துறவி சியு சுஜியின் மேற்கு நோக்கிய பயணங்கள் பற்றிய குறிப்பு ஆகும். இதை இவரது சீடர் லீ சிச்சாங் எழுதினார். லீ சிச்சாங் தன் ஆசானுடன் பயணித்தார். இந்நூல் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதி சீனாவின் சான்டோங்கிலிருந்து மேற்கு நோக்கிய பயணம் மற்றும் திரும்பி வந்ததையும் இரண்டாம் பகுதி சியு சுஜி செங்கிஸ் கானிற்கு வழங்கிய அறிவுரைகளையும் கொண்டுள்ளது. செங்கிஸ் கான் சியு சுஜியை ஒரு தங்கப் பட்டிகையைக் கொடுத்து வருமாறு அழைத்தார். 1220ஆம் ஆண்டு தன் பயணத்தைத் தொடங்கிய சியு சுஜி 1222ஆம் ஆண்டு ஆப்கானித்தானின் இந்து குஷ் மலைப் பகுதியில் செங்கிஸ் கானைச் சந்தித்தார். சீனாவில் இருந்து பாரசீகம் சென்று திரும்பிய இவரது பயணம் 1220 முதல் 1224 வரை மூன்று ஆண்டுகள் நடந்தது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

இப்பயணங்களை முதன் முதலில் உருசிய மொழிக்கு பல்லாடியசு என்ற உருசியத் துறவி 1866இல் மொழிபெயர்த்தார்.[1]

1888ஆம் ஆண்டு பெய்ஜிங் உருசியத் தூதராகத்தில் பணியாற்றிய எமில் என்ற ஒரு பால்டிக் செருமானிய மருத்துவர் இப்பயணங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டுள்ளார்.[2]

இந்நூலை ஆர்தர் வாலேய் என்பவர் 1931ஆம் ஆண்டு "ஒரு இரசவாதியின் பயணங்கள்" என்ற தலைப்பில் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார்.[3]

உசாத்துணை[தொகு]

  1. volume 4 of Record of the Pekin Eccles Mission
  2. SI YOU KI, TRAVELS TO THE WEST OF KIU CH'ANG CH'UN, by Emil Bretschneider, in Medieval Researches from Eastern Asiatic Sources vol 1 1888 Trubner & Co, London; Reprint by Elibron Classics ISBN 1-4021-9303-3
  3. ஒரு இரசவாதியின் பயணங்கள் (ஆங்கிலம்) இணையத்தில்