உள்ளடக்கத்துக்குச் செல்

சியா கே ராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியா கே ராம்
சியா கே இராம்
வகைஇதிகாசம்
மூலம்வால்மீகி இராமாயணம்
முன்னேற்றம்அனிருத் பாதக்
எழுத்துசி. எல். சைனி
திரைக்கதைசி. எல். சைனி
பாவனா வியாஸ்
கதைசி. எல். சைனி
இயக்கம்நிகில் சின்கா
தர்மேஷ் ஷா
அனிமேஷ் வர்மா
நடிப்புமதிராட்சி முண்டில்
முகப்பு இசைசந்தீப் முகர்ஜி
முகப்பிசைசியா கே இராம்
பின்னணி இசைசன்னி பவ்ரா
இந்தர் பவ்ரா
ஜிதேஷ் பாஞ்சால்
சுசாந்த் பவர்
நாடுஇந்தியா
மொழிஇந்தி மொழி
பருவங்கள்1
அத்தியாயங்கள்305
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புஅனிமேஷ் வர்மா
தயாரிப்பாளர்கள்நிகில் சின்கா
ஓட்டம்20 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்Triangle Film Company
ஒளிபரப்பு
அலைவரிசைஸ்டார் பிளஸ்
ஒளிபரப்பான காலம்16 நவம்பர் 2015 (2015-11-16) –
4 நவம்பர் 2016 (2016-11-04)

சியா கே ராம் அல்லது சீதையின் இராமன் என்ற பெயரில் இராமாயணம் இதிகாசம் இந்தி மொழியில் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் 16 நவம்பர் 2015 முதல் 04 நவம்பர் 2016 முடிய நாள்தோறும் 20 நிமிடங்கள் வரை வெளியானது.[1]இத்தொலைக்காட்சி தொடரின் தயாரிப்பாளர் நிகில் சின்கா என்பவர் Triangle Film நிறுவனம் மூலம் இத்தொடரை வெளியிட்டார்.[2][3]இத்தொடர் வால்மீகி எழுதிய இராமாயணம் காவியத்தின் நாயக-நாயகியான இராமர் மற்றும் சீதை ஆகியோரின் கதையை சீதையின் பார்வையில் இருந்து முன்வைக்கிறது.[4] இத்தொடரில் மதிராட்சி முண்டில் என்பவர் சீதையாகவும், அனீஷ் சர்மா என்பவர் இராமராகவும், கார்த்திக் ஜெயராமன் என்பவர் இராவணனாக நடித்துள்ளனர்.[5]இத்தொடருக்கு எழுத்தாளர் சி. எல். சைனி கதை, திரைக்கதை எழுதி, நிகில் சின்கா, தர்மேஷ் ஷா மற்றும் அனிமேஷ் வர்மா ஆகியோர் இயக்கியுள்ளனர்.இத்தொடருக்கு சன்னி பவ்ரா,இந்தர் பவ்ரா,ஜிதேஷ் பாஞ்சால் மற்றும் சுசாந்த் பவர் ஆகியோர் பின்னணி இசை அமைத்துள்ளனர்.

சிறப்பு

[தொகு]

வால்மீகி எழுதிய இராமாயணத்தில் யுத்த காண்டத்தின் முடிவில் இராமர் பட்டாபிசேகத்துடன் காவியம் நிறைவு பெறுகிறது. ஆனால் இத்தொடரில் சீதை கர்ப்பதியாகிறார். இந்நிலையில் அயோத்தி மக்களிடையே சீதாவின் தூய்மை பற்றிய வதந்திகள் பரவியது. வதந்திகள் காரணமாக ராமர் சீதாவை காட்டுக்கு நாடு கடத்துகிறார். சீதை வால்மீகி முனிவர் ஆசிரமத்தில் தங்குகிறார். சீதைக்கு இலவன் மற்றும் குசன் எனும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கின்றனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, இராமர் அசுவமேத யாகம் யாகம் செய்த வேளையில், இரட்டையர்களான சீதையின் மகன்களான லவன் மற்றும் குசன் யாகக் குதிரையைப் பிடித்து வைத்துவிடுகின்றனர். யாகக் குதிரையை விடுவிக்க வேண்டி நடைபெற்ற போரில், இலக்குவன், பரதன், சத்துருக்கன், அனுமன் ஆகியோர் லவன் & குசனிடம் தோற்று அயோத்தி செல்கின்றனர். இரட்டையர்கள் இராமரிடம் போரிட முயலும் போது, சீதை இரட்டையர்களிடம் இராமர் தங்கள் தந்தை என்ற உண்மையை வெளிப்படுத்துகிறாள்.பின் இராமர் சீதையை குழந்தைகளுடன் அயோத்திக்கு அழைத்து செல்ல முடிவு செய்கிறார்.

ஆனால் சீதை மட்டும் அயோத்திக்குத் திரும்ப மறுத்து பூமாதேவியிடம் ஐக்கியமாகி, பரலோகத்திற்குச் செல்கிறாள். இதனால் இராமர் மனம் உடைந்து அயோத்திக்குத் திரும்புகிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, இராமர் லவன் மற்றும் குசனுக்கு அயோத்தியின் இளவரசர்களாக முடிசூட்டுகிறார், . சில காலம் கழித்து எமதர்மராஜன் முனிவரின் வடிவத்தில் ராமரைச் சந்திக்க வருகிறார். சந்திப்பின் போது அறையில் யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்றும், மீறி வந்தால் மரண தண்டனை வழங்க ஆணையிடுகிறார். இலட்சுமணன் அறைக் கதவின் முன் நின்று காவல் காக்கிறான். முனிவர் துர்வாசர் ராமரைச் சந்திக்க வருகிறார். ஆனால் இலெட்சுமணன் துர்வாசர் இராமரை சந்திக்க அனுமதி மறுக்கிறார். இதனால் கோபம் கொண்ட துர்வாசர் இலக்குவன்ச் சபிக்கிறார். லட்சுமணன் அடர்ந்த காட்டிற்குச் சென்று தற்கொலை செய்து கொள்கிறான். மறுநாள் ராமர் தன் சகோதரர்களான பரதன் மற்றும் சத்துருக்கன்]] ஆகியோருடன் சரயு ஆற்றில் மூழ்கி இறந்து விடுகின்றனர்.. சரயு நதியின் அடிப்பகுதியில், ராமர் விஷ்ணுவாகவும், சத்துருக்கன் பாஞ்சசன்யம் ஆகவும், பரதன் விஷ்ணுவின் சுதர்சன சக்கரம் ஆகவும் காட்சியளிக்கின்றனர். இறுதியில் சீதை வடிவத்தில் இருந்த இலக்குமி. விஷ்ணுவிடம் சேர்கிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'Siya Ke Ram' and 'Ashoka' to go off air". 20 October 2016. https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Siya-Ke-Ram-and-Ashoka-to-go-off-air/articleshow/54938085.cms. 
  2. "Star Plus readies new mythological series 'Siya Ke Ram'". Indian Television.
  3. "Siya Ke Ram". The Times of India. Archived from the original on 19 November 2015. Retrieved 23 December 2019.
  4. "I've gained a new perspective on Sita, says Madirakshi Mundle". The Asian Age. 7 June 2016.
  5. A. Sharadhaa (20 November 2013). "The small screen's big rewards". The New Indian Express இம் மூலத்தில் இருந்து 24 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131124000739/http://newindianexpress.com/entertainment/television/The-small-screens-big-rewards/2013/11/20/article1900555.ece. பார்த்த நாள்: 26 September 2015. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியா_கே_ராம்&oldid=4258465" இலிருந்து மீள்விக்கப்பட்டது