சியாவோய்
| உற்பத்தியாளர் | ஐபிளைடெக் நிறுவனம் |
|---|---|
| நாடு | சீனா |
| வகை | மருத்துவ பொறியன் |
| நோக்கம் | சுகாதா சேவை |
சியாவோய் (Xiaoyi) சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஐபிளைடெக் (iFlyTek) நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு சீன செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் பொறியன் மருத்துவர் ஆவார். ஐபிஎம்மின் வாட்சன், அமேசானின் எக்கோ. கூகிளின் டீப்மைன் கெல்த் ஆகியவற்றிற்குப் போட்டியாக எதிர்கால சிகிச்சைகளில் செயல்திறனை மேம்படுத்த மருத்துவர்களுக்கு உதவியாளராகச் செயல்படும் வகையில் இந்த பொறியன் உருவாக்கப்பட்டுள்ளது.[1] சீனாவின் தேசிய மருத்துவ உரிமத் தேர்வில் தேர்ச்சி பெற்று வரலாற்றை உருவாக்கும் உலகின் முதல் ரோபோவாக சியாவோய் அறியப்படுகிறது. இத்தேர்வானது நாட்டில் பயிற்சி பெறும் எந்தவொரு மருத்துவருக்கும் முதல் மதிப்பீடாகும்.[2]
கண்ணோட்டம்
[தொகு]"சின்ன மருத்துவர்" என்று பொருள்படும் 'சியாவோய்' என்பது சீன பொறியனின் பெயராகும். சிங்குவா பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஐபிளைடெக் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு மருத்துவ உரிமத் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் செயற்கை நுண்ணறிவு பொறியனாக இது உள்ளது.
பெய்ஜிங் செய்தி நிறுவனத்தின் செய்தியின்படி, சீனாவின் மருத்துவ உரிமத் தேர்வில் இதற்கு முன்பு பயிற்சிச் சுற்றில் 600 புள்ளிகளில் 100 புள்ளிகளையே சியாவோய் பெற்றது. இது இந்த பொறியனை உருவாக்கம் செய்தவர்களுக்கு இது திருப்திகரமாக இல்லை. ஏனெனில் தேர்ச்சிப் புள்ளி 360 ஆக இருந்தது. மருத்துவருக்குத் தேவையான பகுத்தறிவுத் திறனை வளர்த்துக் கொள்வதற்காக, டஜன் கணக்கான மருத்துவப் பாடப்புத்தகங்களின் பொருட்கள், இரண்டு மில்லியன் மருத்துவப் பதிவுகளை முழுமையாகப் படித்து, 400,000 கட்டுரைகளை மதிப்பாய்வு செய்து, மீண்டும் பயிற்சி இந்த பொறியன் பயிற்சி பெற்றது. உண்மையான சோதனையை முயன்றபோது, பொறியன் தேர்வை முடிக்கத் தேவையான ஒதுக்கப்பட்ட நேரத்தில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டது.[3] இம்முறை 456 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றது. இது முன்னர் தேர்ச்சிக்காகப் பெற்ற மதிப்பெண்களை விட 96 புள்ளிகள் அதிகமாகும்.
நுகர்வோர் மின்னணுவியல், சுகாதாரப் பராமரிப்பு, தொழில்களில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை விரைவுபடுத்துவதில் சீனா மேற்கொண்ட பெரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக சியாவோயின் வளர்ச்சி உள்ளது. செயற்கை நுண்ணறிவு-செயல்படுத்தப்பட்ட ரோபோ நோயாளியின் தகவல்களைத் தானாகவே கைப்பற்றி பகுப்பாய்வு செய்ய முடியும். இதனால் ஆரம்ப நோயறிதல்களையும் செய்ய முடியும். ஐபிளைடெக் நிறுவனத்தின் தலைவர் லியு கிங்ஃபெங் , "நாங்கள் மார்ச் 2018 இல் ரோபோவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துவோம். இது மருத்துவர்களை மாற்றுவதற்காக அல்ல. மாறாக, செயல்திறனை அதிகரிக்கவும் மக்கள்-இயந்திர ஒத்துழைப்பை ஊக்குவிப்பதாகும்" என்றார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "For the first time, a robot passed a medical licensing exam". Futurism (in ஆங்கிலம்). 20 November 2017. Retrieved 2020-11-25.
- ↑ Goyal, Nidhi (2018-01-24). "Chinese Robot Doctor Makes History by Passing Medical Licensing Exam". Industry Tap (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-11-25.
- ↑ "How a robot passed China's medical licensing exam". South China Morning Post (in ஆங்கிலம்). 2017-11-20. Retrieved 2020-11-25.
- ↑ "Chinese robot becomes world's first machine to pass medical exam[1]- Chinadaily.com.cn". www.chinadaily.com.cn. Retrieved 2020-11-25.