உள்ளடக்கத்துக்குச் செல்

சியாரோஸ்கியூரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Giovanni Baglione. Sacred Love Versus Profane Love. 1602–1603 Oil on canvas. 179 x 118 cm. Gemäldegalerie, Staatliche Museen, Berlin

சியாரோஸ்கியூரோ (Chiaroscuro) என்பது, ஓவியத்துறையில், ஒளி, நிழல்களுக்கு இடையேயான வேறுபாட்டளவைக் (contrast) குறிப்பிடப் பயன்படும் ஒரு இத்தாலியச் சொல்லாகும். இது பொதுவாக ஓவியத்தின் முழுக்கூட்டமைவைப் பாதிக்கும் வகையில் அமையும் கடுமையான வேறுபாட்டளவையே பொதுவாகக் குறிக்கும். எனினும், மனித உடல் போன்றவற்றின் முப்பரிமாண அமைப்பை வெளிக்கொண்டு வருவதற்காக, கடுமையாக இல்லாவிட்டாலும், வேறுபாட்டைப் பயன்படுத்துவதை, ஓவியர்களும், ஓவிய வரலாற்றாளரும் இச்சொல்லால் குறிப்பர். இச்சொல், ஓவியம் தொடர்பில் மட்டுமன்றி, மரச் செதுக்குவேலை, திரைப்படம், ஒளிப்படங்கள் ஆகியவை தொடர்பிலும் பயன்படுத்தப்படுவது உண்டு.


சியாரோஸ்கோ வரைதலின் தோற்றம்

[தொகு]

இச்சொல் முதலில், ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலத்தில் வழங்கிவந்த, நிறத் தாளில் வரையப்படும் ஒருவகை ஓவியத்தைக் குறிக்கவே பயன்பட்டது. இதுவும் ரோமர் காலத்திய ஊதா நிறமூட்டப்பட்ட தாளில் எழுதும் மரபின் தொடர்ச்சியே எனவும் கூறப்படுகிறது. இதே நுட்பத்தைப் பின்பற்றி போலச்செய்தலாக உருவாக்கப்பட்ட மரச் செதுக்கு வேலைகளும் இதே பெயரினால் அழைக்கப்பட்டன. இச் சொல்லின் பொருள் மேலும் விரிவடைந்து, ஓவியங்களின் ஒளி, நிழல் பகுதிகளுக்கு இடையிலான ஒளிர்வு வேறுபாடுகளைக் குறிக்கவும் பயன்படத்தொடங்கியது. தற்காலத்தில் இச்சொல்லுக்கான முதன்மைப் பொருள் இதுவே ஆகும்.

சியாரோஸ்கியூரோ உருவமைப்பு

[தொகு]

சியாரோஸ்கியூரோ என்னும் சொல்லின் கூடிய தொழில்நுட்பப் பயன்பாடு, ஓவியம், வரைதல், அச்சடித்தல் போன்றவற்றோடு தொடர்புள்ள ஒளியுருவாக்க விளைவுகள் தொடர்பிலேயே இடம்பெற்றது. இவற்றில், நிழல், மிகையொளி என்பவற்றைப் பயன்படுத்தி முப்பரிமாணத் தோற்றம் பெறப்பட்டது. இது நிழற்றல் (shading) எனப்பட்டது.


படத் தொகுப்பு

[தொகு]

உருவமைப்பில் சியாரோஸ்கியூரோ: ஓவியம்

உருவமைப்பில் சியாரோஸ்கியூரோ: அச்சுப்பதிவும், வரைதலும்.

கூட்டமைவில் முக்கிய கூறாக சியாரோஸ்கியூரோ.

Chiaroscuro faces

சியாரோஸ்கியூரோ மரச்செதுக்கும், வரைதலும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாரோஸ்கியூரோ&oldid=2549393" இலிருந்து மீள்விக்கப்பட்டது