சியாம் (ஓவியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஷியாம் என்பவர் தமிழக ஓவியர்களில் ஒருவர். இவர் ராஜபாளையம் ஊரைச் சேர்ந்தவர். [1]

இவர் குற்றாலம் வேதப்பாடசாலையில் பயின்றவர். சென்னையில் அம்புலிமாமா பத்திரிக்கையில் பணியாற்றினார். இவரது ஓவியங்கள் குமுதம், நக்கீரன், விகடன் போன்ற பல இதழ்களில் வெளிவந்துள்ளது. பல தமிழ் நூல்களுக்கான அட்டைப் படங்களை வரைந்துள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என நான்கு மொழி பத்திரிக்கைகளுக்கு ஓவியம் வரைகிறார்.

விகடனில் வெளியான எழுத்தாளர் சரஸ்வதியின் மல்லி தொடருக்கும், கவிஞர் வைரமுத்து அவர்களின் மூன்றாம் உலகப் போருக்கும் ஓவியம் வரைந்தார்.[2]


இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. ``ரஜினியைப் பார்க்க வந்து, அம்புலிமாமால சேர்ந்தது தெய்வ சித்தம்!’’ - ஓவியர் ஸ்யாம் - கட்டுரை எஸ்.கதிரேசன் விகடன் ஆன்மீக மலர் 23.07.2018
  2. [நானும் விகடனும் - ஓவியர் ஸ்யாம் - விகடன் 02-05-2012]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாம்_(ஓவியர்)&oldid=3172835" இலிருந்து மீள்விக்கப்பட்டது