சியாம் நாராயண் ஆர்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எசு.என். ஆர்யா
S. N. Arya
பிறப்புபீகார், இந்தியா
பணிமருத்துவர்
விருதுகள்பத்மசிறீ
பிதான் சந்திரா ராய் விருது
வலைத்தளம்
Website

சியாம் நாராயண் ஆர்யா (Shyam Narayan Arya) என்பவர் ஒர் இந்திய மருத்துவர் ஆவார்[1]. இந்திய மருத்துவச் சங்கத்தின் பொது மருத்துவக் கல்லுரியின் தேசியப் பேராசிரியர் மற்றும் தலைவராகவும் இவர் பணியாற்றினார்.[2]. ஓர் எழுத்தாளராகவும் அறியப்பட்ட இவர் பல மருத்துவக் கட்டுரைகளையும் தனிக்கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். [3] மற்றவர்களால் வெளியிடப்பட்ட புத்தகங்களுக்கு சில அத்தியாயங்களை வழங்கியுள்ளார் [2]. பல மருத்துவ மாநாடுகளில் முக்கிய உரைகளை நிகழ்த்தியுள்ளார் [4][5]. பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் பாட்னா பல்கலைக்கழக மருத்துவமனையின் முன்னாள் மாணவர் ஆவார் [6]. இந்திய மருத்துவமனை மருத்துவ சங்கத்தின் உறுப்பினரான இவர் இங்கு ஒரு தேசிய தலைவராகவும் உள்ளார் [7]. இந்தியாவில் மருத்துவத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான பிதான் சந்திரா ராய் விருதை இந்திய மருத்துவக் கழகம் இவருக்கு வழங்கி சிறப்பித்தது [8]. மேலும், மருத்துவத்துறையில் சிறந்த மருத்துவ சேவைக்காக இந்திய அரசாங்கம் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை 2008 ஆம் ஆண்டு சியாம் நாராயண் ஆர்யாவுக்கு வழங்கியது [9].

மேற்கோள்கள்[தொகு]

  1. "On TIMES HEALTH DIRECTORY" (PDF). Bihar Times. 2016. 22 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "Practical Obstetrics and Gynecology" (PDF). J. Med. Pub. 2009. ISBN 978-81-8448-552-3. 22 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Sleep and Sleep Disorders". Indian College of Physicians. 2015. 22 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Padmashree Dr SN Arya and Dr HV Srinivas at Epilepsy Update 2009" (PDF). Indian Epilepsy Association. 2013. 28 ஜனவரி 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 22 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. "XIIIth Annual Conference of Indian Association of Clinical Medicine" (PDF). Med India. 2005. 22 January 2016 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Bharat Ratna, Padmavibhushan, Padmashree and other Award winners". Patna University. 2016. 26 டிசம்பர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Fellows of IACM". Indian Association of Clinical Medicine. 2016. 22 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Dr. Prof SHYAM NARAYAN ARYA". Anya Singh. 2016. 28 ஜனவரி 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 January 2016 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. 15 நவம்பர் 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 3 January 2016 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாம்_நாராயண்_ஆர்யா&oldid=3554124" இருந்து மீள்விக்கப்பட்டது