சியாம் சின்கா ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியாம் சின்கா ராய்
இயக்கம்இராகுல் சாங்கிரித்யன்
தயாரிப்புவெங்கட் போயனப்பள்ளி
திரைக்கதைஇராகுல் சாங்கிரித்யன்
இசைமிக்கி ஜே. மேயர்
நடிப்பு
ஒளிப்பதிவுசானு ஜான் வர்க்கீஸ்
படத்தொகுப்புநவீன் நூலி
கலையகம்நிகாரிகா என்டர்டெயின்மென்ட்
வெளியீடு24 திசம்பர் 2021 (2021-12-24)
ஓட்டம்157 நிமிடங்கள்[1]
நாடுதெலுங்கு
மொத்த வருவாய்மதிப்பீடு. ₹47.25 கோடி[2]

சியாம் சிங்கா ராய் (Shyam Singha Roy) என்பது 2021ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான வரலாற்று காதல் திரைப்படமாகும்.[3] ஜங்கா சத்யதேவ் எழுதிய கதையை இராகுல் சாங்கிரித்யன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நானி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் சாய் பல்லவி, கிருத்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் கதை 1970களின் கொல்கத்தாவின் பின்னணியில் நடப்பது போன்று ஓரளவு அமைக்கப்பட்டது. இது மறுபிறவியின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டது.

படம் பிப்ரவரி 2020இல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்து. முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி திசம்பர் 2020 முதல் சூலை 2021 வரை ஐதராபாத்திலும் கொல்கத்தாவிலும் நடைபெற்றது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தயாரிப்பும் வெளியீடும் தாமதமானது. பின்னர், 24 திசம்பர் 2021 அன்று திரையரங்கில் வெளியிடப்பட்டது. திரைக்கதையை விமர்சித்த விமர்சகர்கள் நடிகர்களின் நடிப்பைப் பாராட்டி நேர்மறையான விமர்சனங்களை அளித்தனர். இப்படம் திரையரங்கில் ₹47 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றது. [4] [5]

நடிகர்கள்[தொகு]

 • சியாம் சிங்கா ராய் மற்றும் வாசுதேவ் காண்டா என இரட்டை வேடத்தில் நானி
 • ரோஸியாக சாய் பல்லவி
 • கீர்த்தியாக கிருத்தி ஷெட்டி
 • வழக்கறிஞர் பத்மாவதியாக மடோனா செபாஸ்டியன்
 • மனோஜ் சிங்கா ராயாக ராகுல் ரவீந்திரன்
 • பிரமோதாக அபினவ் கோமதம்
 • தேவேந்திர சிங்கா ராயாக ஜிஷு சென்குப்தா
 • வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியாக முரளி சர்மா
 • மகாதேவ் மஹந்தாக மணீஷ் வாத்வா
 • உளவியல் நிபுணராக லீலா சாம்சன்
 • நீதிபதி ஜே. சத்யேந்திராவாக சுபலேகா சுதாகர்
 • "பிரணவாலயா" பாடலில் சிறப்பு தோற்றத்தில் அனுராக் குல்கர்னி.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Shyam Singha Roy : సెన్సార్ పూర్తి చేసుకున్న శ్యామ్ సింగ రాయ్.. నిడివి ఎంతంటే." News18 (in தெலுங்கு). பார்க்கப்பட்ட நாள் 18 December 2021.
 2. "Shyam Singha Roy 24 days collections: నాని 'శ్యామ్ సింగరాయ్' 24 డేస్ కలెక్షన్స్." சிஎன்என்-ஐபிஎன் (in தெலுங்கு). 17 January 2022.
 3. BBFC. "Shyam Singha Roy". www.bbfc.co.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-29. SHYAM SINGHA ROY is a Telugu language drama in which an aspiring film director discovers that he has lived a previous life.
 4. "'Shyam Singha Roy' box office verdict: Nani-starrer emerges as big hit". Deccan Herald. 2022-01-03.
 5. "Shyam Singha Roy 24 days collections: నాని 'శ్యామ్ సింగరాయ్' 24 డేస్ కలెక్షన్స్." News18 Telugu (in தெலுங்கு). பார்க்கப்பட்ட நாள் 2022-01-18.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாம்_சின்கா_ராய்&oldid=3952940" இலிருந்து மீள்விக்கப்பட்டது