சியாம் சிங் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியாம் சிங் யாதவ்
Shyam singh yadav.jpg
பகுஜன் சமாஜ் கட்சி நாடாளுமன்றத் தலைவர் மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 மே 2019
முன்னவர் கிருஷ்ண பிரதாப்
தொகுதி ஜவுன்பூர் நாடாளுமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 31 மார்ச்சு 1954 (1954-03-31) (அகவை 69)
ஜவுன்பூர், உத்தரப்பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சி பகுஜன் சமாஜ் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்)
புஷ்பா யாதவ் (தி. 1986)
பிள்ளைகள் 2
இருப்பிடம் இராணிபட்டி, ஜவுன்பூர் மாவட்டம், உத்தரப்பிரதேசம்[1]
படித்த கல்வி நிறுவனங்கள் அலகாபாத் பல்கலைக்கழகம்
பணி நாடாளுமன்ற உறுப்பினர்
தொழில்
  • வழக்குரைநர்
  • விவசாயி

சியாம் சிங் யாதவ் (Shyam Singh Yadav)(பிறப்பு 31 மார்ச் 1954) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 17வது மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

அரசியல்[தொகு]

சியாம் சிங் யாதவ் பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினராகவும், மக்களவையில் அக்கட்சியின் தலைவராகவும் உள்ளார்.[2][3][4] இவர் 2019 முதல் நாடாளுமன்ற ஆவணக் குழுவின் தலைவராகவும் உள்ளார். நிலக்கரி மற்றும் எஃகு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். இலாப அலுவலகங்கள் மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழு; நாடாளுமன்ற பொது நோக்கக் குழுவின் (மக்களவை) உறுப்பினர் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் போன்ற பொறுப்பில் உள்ளார்.[5] இவர் முன்னாள் உத்தரப்பிரதேச குடிமையியல் அதிகாரி ஆவார்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

யாதவ் 31 மார்ச் 1954 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் உமா சங்கர் சிங் யாதவ் மற்றும் இந்திராவதி யாதவ் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் தனது இளம் அறிவியல், முதுகலை அறிவியல் (1976) மற்றும் இளங்கலைச் சட்டம் (1979) பட்டங்களை அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பெற்றார் . இவர் 11 மார்ச் 1986-ல் புஷ்பா யாதவை மணந்தார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் ஒரு வழக்குரைஞர் மற்றும் விவசாயம் செய்கிறார். இவர் இராணிபட்டி கிராமத்தில் வசிக்கிறார்.[5][1]

அரசுப் பணி[தொகு]

யாதவ் அரசு ஊழியராக பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.[7]

முன்னாள் அரசு ஊழியராக, யாதவ், துணைப் பிரிவு நீதிபதி, நகராட்சி ஆணையர், சிறப்புச் செயலர் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டத் துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.[8]

விளையாட்டு வீரர்[தொகு]

யாதவ் ஒரு துப்பாக்கிச் சுடும் வீரர் ஆவார். இவர் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.[6] இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த இவர், ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கும் பயிற்சி அளித்துள்ளார்.[7] பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் (2008) மற்றும் மெல்போர்ன் பொதுநலவாயப் விளையாட்டுகள் (2006) போட்டிகளில் பயிற்சியாளராகப் பங்கேற்றுள்ளார்.[9][10] யாதவ் உத்தரப் பிரதேச மாநிலத் துப்பாக்கிச் சங்கத்தின் தலைவராகவும், உத்தரப் பிரதேச ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார். இந்தியத் தேசியத் துப்பாக்கி சங்கத்தின் பொருளாளராகவும் இருந்துள்ளார்.[11] 2016-2019 வரை மும்பையில் தணிக்கை வாரியத்தின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.[5]

விருது[தொகு]

  1. இலட்சுமண் விருது, உ.பி அரசு 2000 [12]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Shyam Singh Yadav(Bahujan Samaj Party(BSP)):Constituency- JAUNPUR(UTTAR PRADESH) - Affidavit Information of Candidate". www.myneta.info. 31 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Jaunpur Election Results 2019: BSP's Shyam Singh Yadav seals victory by a margin of 80936 votes". Times Now. 23 May 2019. 24 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. "In a first, BSP appoints a Yadav as leader of party in Lok Sabha". The Indian Express (ஆங்கிலம்). 7 August 2019. 8 August 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Shyam Singh Yadav: Shyam Singh Yadav BSP from JAUNPUR in Lok Sabha Elections | Shyam Singh Yadav News, images and videos". https://economictimes.indiatimes.com/shyam-singh-yadav/candidates/candidateid-12380.cms. 
  5. 5.0 5.1 5.2 "Members : Lok Sabha". loksabhaph.nic.in. 18 September 2020 அன்று பார்க்கப்பட்டது.
  6. 6.0 6.1 "Shyam Singh Yadav - Retired PCS Officer". 16 May 2019. 18 September 2020 அன்று பார்க்கப்பட்டது.
  7. 7.0 7.1 Faridi, Mohd Rafatuddin. "भाजपा के मंत्री राज्यवर्धन सिंह राठौर के पूर्व कोच को BSP ने इस सीट से दिया टिकट". Patrika (இந்தி). 28 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Lok Sabha Elections 2019: Apolitical candidates who took political plunge for change". 16 May 2019.
  9. "Shyam Singh Yadav v. State of U.P.And Others | Writ Petition No. 1681(S/B) of 2008 | Judgment | Law | CaseMine".
  10. "Allahabad HC stays coach Yadav's transfer | Lucknow News - Times of India".
  11. "The Tribune, Chandigarh, India - Sport". 2013-02-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-01-15 அன்று பார்க்கப்பட்டது.
  12. "Laxman Award / Rani Laxmi Bai Award". upsports.gov.in. 31 மே 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 31 May 2019 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாம்_சிங்_யாதவ்&oldid=3584097" இருந்து மீள்விக்கப்பட்டது