உள்ளடக்கத்துக்குச் செல்

சியாங் மாய் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியாங் மாய் மாகாணம்
Chiang Mai Province
จังหวัดเชียงใหม่
ᨩ᩠ᨿᨦᩉᩲ᩠ᨾ᩵
இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக: வாட் பிரா தாட் தோய் சுதீப், டோய் இண்டனான், டோய் ஆங் காங், ஒப் லுவாங் தேசிய பூங்கா, வாட் ப்ரா சிங், சியாங் மாய் பல்கலைக்கழகம், மே சா நீர்வீழ்ச்சி, சியாங் மாய் விலங்கியல் பூங்கா

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): Nakhon Phing; นครพิงค์
குறிக்கோளுரை:
புகழ்பெற்ற டோ சுதேப். நேர்த்தியான மரபுகள். அழகான மலர்கள். நகோன்பிங் எனும் விலைமதிப்பற்ற பெயர்.
ดอยสุเทพเป็นศรี ประเพณีเป็นสง่า บุปผชาติล้วนงามตา นามล้ำค่านครพิงค์
      சியாங் மாய்       தாய்லாந்து
      சியாங் மாய்       தாய்லாந்து
ஆள்கூறுகள்: 18°50′14″N 98°58′14″E / 18.83722°N 98.97056°E / 18.83722; 98.97056
நாடு தாய்லாந்து
மாகாணம்சியாங் மாய் மாகாணம்
தலைநகரம்சியாங் மாய்
பரப்பளவு
 • மொத்தம்22,311 km2 (8,614 sq mi)
 • பரப்பளவு தரவரிசை1-ஆவது[1]
மக்கள்தொகை
 (2024)[2]
 • மொத்தம்▼17,99,019
 • தரவரிசை4-ஆவது
 • அடர்த்தி80/km2 (200/sq mi)
  அடர்த்தி தரவரிசை61-ஆவது
மனிதச் சாதனை குறியீடு[3]
 • HAI (2022)0.6179 
68-ஆவது
மொத்த உள்நாட்டு உற்பத்தி[4]
 • மொத்தம்฿232 பில்லியன்
(US$8.0 பில்லியன்) (2019)
நேர வலயம்தாய்லாந்து நேரம் +7
அஞ்சல் குறியீடு
50xxx
தொலைபேசி052 & 053
ஐஎசுஓ 3166 குறியீடுTH-50
வாகனப் பதிவுเชียงใหม่
இணையதளம்chiangmai.go.th
chiangmaipao.go.th

சியாங் மாய் மாகாணம் (ஆங்கிலம்: Chiang Mai Province; தாய்: เชียงใหม่) என்பது தாய்லாந்தின் 77 மாகாணங்களில் (சாங்வாட் - changwat) ஒன்றாகும். பரப்பளவின் அடிப்படையில் தாய்லாந்தின் மிகப்பெரிய மாகாணமாக விளங்கும் இந்த மாகாணம்,[5][6] மேல் வடக்கு தாய்லாந்தில் அமைந்துள்ளது. 1.8 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்த மாகாணத்தின் வடகிழக்கே சியாங் ராய் மாகாணம், தெற்கே இலம்பாங் மாகாணம்; மற்றும் இலம்புன் மாகாணம், தென்மேற்கே தக் மாகாணம், மேற்கே மே ஓங் சான் மாகாணம் மற்றும் வடக்கே மியன்மரின் சான் மாநிலம் ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன.

இதன் தலைநகரமான சியாங் மாய், பேங்காக்கிற்கு வடக்கே 685 கிமீ (426 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இதற்கு முன்னரே பழைமையான நகரங்கள் இந்தச் சமவெளியில் இருந்தன. சியாங் மாய் நகரம், 1296-இல் உருவாக்கப்பட்ட காலத்தில், லான் நா பேரரசின் தலைநகரமாக விளங்கியது.

புவியியல்

[தொகு]

சியாங் மாய் மாகாணம் மே பிங் ஆற்றுப் (Ping River) படுகையில், பேங்காக் மாநகரில் இருந்து சுமார் 685 கி.மீ (426 மைல்) தொலைவிலும், சராசரியாக 300 மீட்டர் (1,000 அடி) உயரத்திலும் அமைந்துள்ளது. தாய்லாந்து உயர் நிலப்பகுதிகளின் மலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ள இந்த மாகாணம், ஏறக்குறைய 22,311 சதுர கிமீ (9,000 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.

இந்த மாகாணத்தின் வடக்கு முனையில் டேன் லாவ் மலைத்தொடரும் (Daen Lao Range), கிழக்கில் குன் டான் மலைத்தொடரும் (Khun Tan Range) அமைந்துள்ளன. தனோன் தோங் சாய் மலைத்தொடர் (Thanon Thong Chai Range) வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பரவி, தாய்லாந்தின் மிக உயர்ந்த மலையான டோய் இந்தானோன் மலையை (Doi Inthanon) (2,565 மீட்டர் அல்லது 8,415 அடி) தன்னுள் கொண்டுள்ளது. இந்த மூன்று மலைத்தொடர்களும் மழைக்காடுகளால் சூழப்பட்டுள்ளன.

சாவோ பிரயா ஆற்றின் முக்கியத் துணை ஆறுகளுள் ஒன்றான மே பிங் ஆறு, டேன் லாவ் மலையிலிருந்து உற்பத்தியாகிறது. இந்த மாகாணத்தில் டோய் இன்தனான், டோய் சுதேப்-புய் (Doi Suthep-Pui)[7], ஒப் லுவாங் (Ob Luang), சிறீ லன்னா (Sri Lanna), உவாய் நாம் டாங் (Huai Nam Dang), மே வாங் (Mae Wang)[8] மற்றும் பா டேன் (Pha Daeng) உள்ளிட்ட பல தேசியப் பூங்காக்கள் அமைந்துள்ளன. மொத்தக் காடுகளின் பரப்பளவு 15,404 சதுர கிமீ (5,948 சதுர மைல்) அல்லது மாகாணப் பரப்பளவில் 69.6 விழுக்காடு[9] ஆகும்.

காலநிலை

[தொகு]

சியாங் மாய் ஒரு வெப்பமண்டல ஈரநிலை மற்றும் வறண்ட காலநிலையைக் (கோப்பென் காலநிலை வகைப்பாடு Aw) கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் இதமான வெப்பம் முதல் கடுமையான வெப்பம் வரையிலான காலநிலையைக் கொண்டுள்ளது. வறண்ட காலத்தின் போது இரவு நேர காலநிலை குளிர்ச்சியாக இருக்கக்கூடும்; மேலும் பகல் நேரத்தில் கூடுதலான வெப்பநிலையை விட மிகவும் குறைவாக இருக்கும். மே 2005-இல் பதிவான 42.4 °C (108.3 °F) வெப்பநிலையே இங்கு இதுவரை பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலையாகும்.[10]

தேசியப் பூங்காக்கள்

[தொகு]

சியாங் மாய் மாகாணத்தில் 14 தேசிய பூங்காக்கள் உள்ளன.[11] (2024-ஆம் ஆண்டில் வருகையாளர்கள்)[12]

சிறீ லன்னா தேசியப் பூங்கா1405 சதுர கிமீ   (89,382)
குவாய் நாம் டாங் தேசியப் பூங்கா1252 சதுர கிமீ (121,109)
பா டேன் தேசியப் பூங்கா1123 சதுர கிமீ   (39,534)
ஒப் லுவாங் தேசியப் பூங்கா   553 சதுர கிமீ   (36,270)
டோய் பாகோம் போக் பூங்கா    524 சதுர கிமீ   (70,129)
டோய் இன்தனான் தேசியப் பூங்கா   482 சதுர கிமீ (853,856)
மே தோ தேசியப் பூங்கா   433 சதுர கிமீ    (1,387)
மே தாக்ராய் தேசியப் பூங்கா   354 சதுர கிமீ   (24,983)
டோய் வியாங் பா தேசியப் பூங்கா   303 சதுர கிமீ        (939)
டோய் சுதேப்–புய் தேசியப் பூங்கா   257 சதுர கிமீ (296,088)
ஒப் கான் தேசியப் பூங்கா   227 சதுர கிமீ   (98,972)
குன் கான் தேசியப் பூங்கா   208 சதுர கிமீ   (18,053)
மே வாங் தேசியப் பூங்கா   119 சதுர கிமீ   (66,042)
நாம்டோக் புவா தோங்–     86 சதுர கிமீ (385,316)
நாம்சு செட் சி தேசியப் பூங்கா

காட்டுயிர் காப்பகங்கள்

[தொகு]

தாய்லாந்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் வட்டார அலுவலகங்களின் பட்டியல்#16-இன் (சியாங் மாய் மாகாணம்) நான்கு வனவிலங்கு காப்பகங்களில் மூன்று சியாங் மாய் மாகாணத்தில் அமைந்துள்ளன. ஓம்கோய் வனவிலங்கு காப்பகம் (Omkoi Wildlife Sanctuary) இதில் அமையவில்லை

சியாங் தாவ் வனவிலங்கு காப்பகம்521 சதுர கிமீ
மே லாவ்-மே சே வனவிலங்கு காப்பகம் 514 சதுர கிமீ
சமோங் வனவிலங்கு காப்பகம்  75 சதுர கிமீ

வரலாறு

[தொகு]
வரலாற்று தொடர்புகள்

நிகோன்யாங் பேரரசு 1292-க்கு முன்னர்
லான் நா இராச்சியம் 1292–1579
துங்கூ அரசமரபு 1579–1775
தாய்லாந்து தோன்புரி இராச்சியம் 1775–1782
தாய்லாந்து சியாமிய ஆக்கிரமிப்பு 1782–1802
சியாங் மாய் இராச்சியம் 1802–1899
தாய்லாந்து சயாமிய இராச்சியம் 1899–1932
தாய்லாந்து தாய்லாந்து இராச்சியம் 1932–தற்போது

சியாங் மாய் மாகாணத்தின் தலைநகரமான சியாங் மாய் நகரம், 1296-இல் அது உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து லான் நா பேரரசின் தலைநகரமாகவும் விளங்கியது. இது சுகோத்தாய் இராச்சியம் நிறுவப்பட்ட அதே காலக்கட்டமாகும். அதன் பிறகு சியாங் மாய், லான் நா இராச்சியத்தின் (Lan Na) தலைநகரமாகவும் வட தாய்லாந்தின் பௌத்த சமய மையமாகவும் திகழ்ந்தது.

மங்ராய் (Mangrai) மன்னர் இந்த நிலப்பகுதியில் பல கோயில்களைக் கட்டினார். 1558-இல், சியாங் மாய் முதல் தூங்கூ பேரரசின் (First Toungoo Empire) ஒரு குடியேற்ற நாடாக மாறியது. பர்மிய-சயாமியப் போர் (1775-1776) வரை, 200 ஆண்டுகளுக்கும் மேலாக சியாங் மாய் அதன் குடியேற்ற நாடாகவே நீடித்தது. 1774-இல் லான் நா மற்றும் சயாமியப் படைகளின் கூட்டமைப்பால்; பர்மியக் குடியேற்ற ஆட்சி சியாங் மாய் பகுதியில் இருந்து நீக்கப்பட்டது. அதன் பிறகு சியாங் மாய், சயாமின் கப்பம் கட்டும் நாடாக மாறியது.

சயாம் பின்னர் அதன் நட்பு நாடான லான் நா இனக்குழுத் தலைவர் கவிலா (Kawila) என்பவரை இலம்பாங் மற்றும் சியாங் மாய் நிலப் பகுதிகளுக்கு ஒரு மன்னராக ஆட்சி செய்ய நியமித்தது. சயாமின் ஐந்தாம் இராமா மன்னரின் ஆட்சிக் காலத்தில், அவரின் நிர்வாக மையப்படுத்தல் கொள்கையின் கீழ், சியாங் மாய் தனது தனாட்ட்சியை இழந்தது. பின்னர் சயாமுடன் இணைக்கப்பட்டு அதன் இரண்டாம் நிலைத் துணைப் பிரிவாக மாறியது.[13] 1933-ஆம் ஆண்டிலிருந்து சியாங் மாய் ஒரு மாகாணம் என்ற தகுதியைப் பெற்றுள்ளது.[14]

மாகாண நிருவாகம்

[தொகு]
சியாங் மாய் மாகாணத்தின் 25 மாவட்டங்கள்

சியாங் மாய் மாகாணம் 25 மாவட்டங்களாக (ஆம்போ) பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்கள் மேலும் 204 துணை மாவட்டங்களாகவும் 2,066 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

  1. முயேங் சியாங் மாய்
  2. சோம் தோங்
  3. மே சேம்
  4. சியாங் தாவ்
  5. டோய் சாகெட்
  6. மே தேங்
  7. மே ரிம்
  8. சமோங்
  9. பாங்
  10. மே ஆய்
  11. பிராவ்
  12. சான் பா தோங்
  13. சான் காம்பேங்
  14. சான் சாய்
  15. ஆங் டோங்
  16. ஆட்
  17. டோய் தாவ்
  18. உம்கோய்
  19. சாரபி
  20. வியாங் எங்
  21. சாய் பிராகான்
  22. மே வாங்
  23. மே ஆன்
  24. டோய் லோ
  25. கலியானி வதானா

மனித மேம்பாட்டுச் சுட்டெண் 2022

[தொகு]
உடல்நலம் கல்வி வேலைவாய்ப்பு வருமானம்
65 25 66 50
வீட்டுவசதி குடும்பம் போக்குவரத்து பங்கேற்பு
70 42 67 12
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2022) குறியீட்டில் 0.6179 என்ற மதிப்புடன் "தாழ்ந்த" நிலையில் உள்ள சியாங் மாய் மாகாணம், தாய்லாந்து நாட்டின் தரவரிசையில் 68-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

2003 ஆம் ஆண்டு முதல், தாய்லாந்திலுள்ள ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) மனித மேம்பாட்டின் எட்டு முக்கிய பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு குறியீடான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணை (Human achievement index - HAI) பயன்படுத்தி, தேசிய அளவில் மனித மேம்பாட்டின் முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகிறது. 2017-ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தின் தேசிய பொருளாதார சமூக மேம்பாட்டு வாரியம் (National Economic and Social Development Board) இப்பணியை ஏற்றுக் கொண்டுள்ளது.[3]

நிலைவகைப்பாடு
  1 - 13உயர்வு
14 - 29சற்று உயர்வு
30 - 45சராசரி
46 - 61சற்று குறைவு
62 - 77குறைவு

சகோதர நகரங்கள்

[தொகு]

சியாங் மாய் மாகாணம் எட்டு மாகாணங்கள்/மாநிலங்களுடன் இரட்டை நகர (twinned) உடன்படிக்கையைக் கொண்டுள்ளது.

காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 As of 2023 total area of Chiang Mai province is 22,311 sq.km
  2. ↑ "Official statistics registration systems". Department of Provincial Administration (DOPA). Retrieved 10 February 2025. , year 2024, provincial level, Excel File, no.50
  3. 1 2 "ข้อมูลสถิติดัชนีความก้าวหน้าของคน ปี 2565 (PDF)" [Human Achievement Index Databook year 2022 (PDF)]. Office of the National Economic and Social Development Council (NESDC) (in thai). Retrieved 12 March 2024. , page 27{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. ↑ "Gross Regional and Provincial Product, 2019 Edition" (in en). Gross Regional and Provincial Product (Office of the National Economic and Social Development Council (NESDC)). July 2019. பன்னாட்டுத் தர தொடர் எண்:1686-0799. https://www.nesdc.go.th/ewt_dl_link.php?nid=5628&filename=gross_regional. பார்த்த நாள்: 22 January 2020.
  5. ↑ ประกาศกระทรวงมหาดไทย เรื่อง การกำหนดเขตตำบลในท้องที่อำเภอสามเงา จังหวัดตาก (ฉบับที่ ๒) พ.ศ. ๒๕๖๓
  6. ↑ ประกาศกระทรวงมหาดไทย เรื่อง การกำหนดเขตตำบลในท้องที่อำเภอดอยเต่า จังหวัดเชียงใหม่ (ฉบับที่ ๒) พ.ศ. ๒๕๖๗
  7. ↑ "Doi Suthep-Pui National Park". Department of National Parks (DNP) Thailand. Archived from the original on 24 May 2015. Retrieved 24 May 2015.
  8. ↑ "Mae Wang National Park". Department of National Parks (DNP) Thailand. Archived from the original on 12 February 2015. Retrieved 24 May 2015.
  9. ↑ "Table 2 Forest area Separate province year 2019". Royal Forest Department. Retrieved 6 April 2021.
  10. ↑ "Daily Climate Weather Data Statistics". Geodata.us. Retrieved 2012-04-29.
  11. ↑ "ข้อมูลพื้นที่อุทยานแห่งชาติ (เตรียมการ) 22 แห่ง" [Information of 22 National Parks Areas (Preparation)]. Department of National Parks, Wildlife and Plant Conservation (in தாய்). Archived from the original on 3 November 2022.
  12. ↑ "สถิตินักท่องเที่ยวที่เข้าไปอุทยนห่งชาติ ปีงบประมาณ พ.ศ. 2567" [Statistics of tourists visiting national parks in fiscal year 2024]. Department National Parks, Wildlife and Plant Conservation (in தாய்). Retrieved 6 September 2025.
  13. ↑ "A Brief History of Chiang Mai" (PDF). Department of Mineral Resources, Thailand. Retrieved 2025-05-17.
  14. ↑ "About Chiang Mai". Saint Lanna College of Management. Retrieved 2025-05-17.
  15. ↑ "MOU of the Establishment of Friendship between Province of Chiang Mai and Prefecture of Hokkaido" (PDF). Retrieved 2018-12-29.
  16. ↑ "ประยุทธ์เยือนพม่า-ขอสื่ออย่าระบุสัญชาติผู้ต้องหาเกาะเต่า".

வெளி இணைப்புகள்

[தொகு]

விக்கிமூலத்தில் Chiang Mai சியாங் மாய் பற்றிய ஆக்கங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாங்_மாய்_மாகாணம்&oldid=4698701" இலிருந்து மீள்விக்கப்பட்டது