சியாஃபிக் யூசுப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகமது சியாஃபிக் பின் முகமது யூசுப் (Mohd Syafiq bin Mohd Yusof) பிறப்பு:டிசம்பர் 7, 1992) இவரின் மேடைப் பெயரான சியாஃபிக் யூசுப் எனும் பெயராலேயே அறியப்படும் இவர் மலேசிய நடிகர், இயக்குநர் (திரைப்படம்), திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் (திரைப்படம்) ஆவார். இவரின் சகோதரர் சியாம்சல் யூசுப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரின் தந்தை யூசுப் அஸ்லாமும் நடிகர் ஆவார். துவக்கத்தில் குறும்படங்களை இயக்கிய இவர் 2012 ஆம் ஆண்டில் சாம் சயா அமத் மென்சின்தைமு எனும் திரைப்படத்தை இயக்கினார். தற்போது வரை இவர் ஆறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவை அனைத்தும் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

சியாஃபிக் யூசுப் டிசம்பர் 7, 1992 இல் கோலாலம்பூரில் பிறந்தார். இவர் திரைப் பிரபலங்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரின் சகோதரர் சியாம்சல் யூசுப் நடிகரும், இயக்குநரும் ஆவார். இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவருடைய உறவினர் ரைசல் அஸ்ரஃப் ,சபரினா அலி, அலிஃப் அலி மற்றும் மில்லர் கான் ஆகியோரும் நடிகர்கள் ஆவர். இவருடைய தந்தை யூசுப் அஸ்லாமும் பலதிறன் கொண்ட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

சியாஃபிக் துவக்கத்தில் குறும்படங்களை இயக்கினார். 2012 ஆம் ஆண்டில் சாம் சயா அமத் மென்சின்தைமு எனும் திரைப்படத்தை இயக்கினார். இதில் சகாகெய்சி சாம் மற்றும் லிசா சுரிஹானி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் ஆகஸ்டு 19, 2012 இல் வெளியானது.[1] அதே ஆண்டில் இவரும் இவருடைய உறவினர் ரைசல் அஸ்ரஃப் இணைந்து ஒரு நாடகத் தொடரை இயக்கினார்.

சனவரி 1, 2013 ஆம் ஆண்டில் சியாஃபிக் மற்றும் தனது தொழில் நண்பர்கள் இருவருடன் இணைந்து வைபர் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் ஒன்றைத் துவங்கினர். அதன்மூலம் திரைப்படங்களைத் தயாரிப்பது, அசைவூட்ட வேலைகள், பின்- தயாரிப்பு வேலைகள் போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார்.[2]

பின் ஓர் ஆண்டுகளுக்குப்பிறகு அபாங் லாங் ஃபதில் எனும் திரைப்படத்தை இயக்கினார்.[3] பின் 2014 ஆம் ஆண்டில் சிசன் ரசாக்கை முதன்மைக் கதாப்பாத்திரமாகக் கொண்டு கேஎல் கேங்ஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். அது பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.இவரின் மூன்றாவது திரைப்படம் வில்லா நபில்லா எனும் திகில்திரைப்படம் ஆகும். இது சனவரி , 2015 இல் வெளியானது. பெகின் இப்ராகிம் மற்று திஷா ஷாம்சிர் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தின் மையக் கருவானது நவமப்ர் 2013 இல் வில்லா நபில்லா வளமனையில் நடைபெற்ற நிகழ்வினை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.[4]

தனது ஐந்தாவது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நவமப்ர் 13, 2014 இல் கோலாலம்பூர் மற்றும் புத்ராஜாயாவில் துவங்கினார்.தனது சகோதரர் சியாம்சல்லை வைத்து தேசோலசி எனும் புதிர் திரைப்படத்தினை இயக்கினார். இத் திரைப்படம் டிசம்பர் 8, 2016 இல் வெளியானது.[5] இந்தத் திரைப்படத்திர்கான சிறப்பு விளைவுக் காட்சிப் பணிகள் கோலாலம்பூரில் செய்யப்பட்டது.[6][7] இதில் ஜலாலுதீன் அசன்,பெகின் இப்ராகிம் மற்றும் பெல்லா தல்லி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[8][9]

சான்றுகள்[தொகு]

  1. Wahiduzzaman (23 Ogos 2012). Eksperimen Syafiq Yusof Menjadi Dalam 'SAM' mStar. Diperoleh pada 1 September 2012.
  2. "Viper Studios: About Us". Viper Studios இம் மூலத்தில் இருந்து 14 ஏப்ரல் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180414010326/http://viperstudios.com.my/?page_id=6. பார்த்த நாள்: 14 April 2018. 
  3. Feride Hikmet Atak (10 June 2014). "Abang Long Fadil berpaksikan dunia gengsterisme". mStar Online இம் மூலத்தில் இருந்து 9 நவம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181109121618/http://www.mstar.com.my/hiburan/wayang/2014/06/02/abang-long-fadil/. பார்த்த நாள்: 9 April 2018. 
  4. Raziatul Hanum A. Rajak (10 January 2015). "Villa Nabila: Dari kisah sebenar ke layar perak". Sinar Harian. http://www.sinarharian.com.my/hiburan/villa-nabila-dari-kisah-sebenar-ke-layar-perak-1.349351. பார்த்த நாள்: 24 March 2018. 
  5. Bibi Nurshuhada Ramli (9 December 2016). "Mind-boggling Desolasi takes local CGI films staggering new heights". New Straits Times. https://www.nst.com.my/news/2016/12/195686/mind-boggling-desolasi-takes-local-cgi-films-staggering-new-heights. பார்த்த நாள்: 24 March 2018. 
  6. Angelin Yeoh (6 December 2016). "How did Syafiq Yusof empty the streets of KL for Desolasi?". Star2 இம் மூலத்தில் இருந்து 18 ஆகஸ்ட் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170818150734/http://www.star2.com/entertainment/movies/movie-news/2016/12/06/how-did-syafiq-yusof-make-everyone-in-kl-disappear-for-desolasi/. பார்த்த நாள்: 24 March 2018. 
  7. Syafil Syazwan Jefri (2 November 2016). "Syafiq 'kosong' lokasi sibuk KL". Harian Metro இம் மூலத்தில் இருந்து 2 நவம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161102163133/http://www.hmetro.com.my/node/178569. பார்த்த நாள்: 24 March 2016. 
  8. Syanty Octavia Amry (7 December 2016). "Minda celaru mencari jawapan". Harian Metro இம் மூலத்தில் இருந்து 7 ஜனவரி 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180107175039/https://www.hmetro.com.my/node/187426. பார்த்த நாள்: 24 March 2018. 
  9. Bibi Nurshuhada Ramli (9 December 2016). "In a league of its own: Desolasi represents a new direction for M'sian films, banking on CGI". New Straits Times. https://www.nst.com.my/news/2016/12/195689/league-its-own-desolasi-represents-new-direction-msian-films-banking-cgi. பார்த்த நாள்: 9 April 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியாஃபிக்_யூசுப்&oldid=3584093" இலிருந்து மீள்விக்கப்பட்டது