சிம் சா சுயி இந்து கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிம் சா சுயி இந்து கோயில் ஹொங்கொங் சிம் சா சுயி நகரில் இருக்கும் இந்து சமயத்தினருக்கான ஒரு வழிப்பாட்டுத் தளமாகும். ஹொங்கொங்கில் இந்து சமயத்தினருக்கான வழிப்பாட்டுத் தளங்கள் இரண்டே உள்ளன. ஹொங்கொங் தீவு பகுதியில் மகிழ்ச்சி பள்ளத்தாக்கு எனும் இடத்தில் ஒன்றும், அடுத்தது இந்த சிம் சா சுயி இந்து கோயிலும் ஆகும். இந்த கோயில் கவுலூன் நிலப்பரப்பில் இருப்பதனால் இதனை கவுலூன் மந்திர் இந்து கோயில் என்றும் அழைப்பர்.[1] இந்த கோயில் ஒரு கட்டத்தில் இரண்டாவது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் பூசகர்களாக வடயிந்தியரே உள்ளனர். இந்த கோயிலுக்கு இந்தி, நேபாளி, தமிழர் மற்றும் சிங்களவர் என பல மொழியினரும் செல்வர்.

முகவரி மற்றும் அமைவிடம்[தொகு]

இந்த கோயில் A1/A2 2/F கர்னவன் கட்டடம், 8-10 கர்னவன் வீதி, சிம் சா சுயி, கவுலூன் எனும் முகவரியைக் கொண்டுள்ளது. சிம் சா சுயி எம்டிஆர் தொடருந்தகத்தில் வெளியேற்றம் D (MTR Exit D) பக்கம் வெளியேறினால், கரனவன் வீதியை அடைய முடியும். அதே வீதியில் கரனவன் கட்டடம் அல்லது கர்னவன் மாளிகை (Carnavon Mansion) எனும் கட்டடத்தில் இரண்டாவது மாடியில் இக்கொயில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]