சிம்ரோன் ஹெட்மையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிம்ரோன் ஹெட்மையர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஷிம்ரோன் ஒடிலோன் ஹெட்மையர்
பிறப்பு26 திசம்பர் 1996 (1996-12-26) (அகவை 27)
கம்பர்லேண்ட், கயானா
மட்டையாட்ட நடைஇடது-கை
பந்துவீச்சு நடைவலது-கை நேர் விலகு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 310)21 ஏப்ரல் 2017 எ. பாக்கித்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி 183)20 டிசம்பர் 2017 எ. நியூசிலாந்து
இ20ப அறிமுகம் (தொப்பி 69)1 சனவரி 2018 எ. நியூசிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2014–தற்போதுகயானா
2016–தற்போதுகயானா அமேசான் வாரியர்ஸ்
2019ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப இ20ப முத
ஆட்டங்கள் 16 41 20 37
ஓட்டங்கள் 838 1,375 279 2,073
மட்டையாட்ட சராசரி 27.93 39.28 16.41 32.39
100கள்/50கள் 0/5 5/4 0/1 1/12
அதியுயர் ஓட்டம் 93 139 56 107
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
7/– 18/– 6/– 28/–
மூலம்: Cricinfo, 15 டிசம்பர் 2019

சிம்ரோன் ஒடிலோன் ஹெட்மையர் (Shimron Odilon Hetmyer, பிறப்பு: டிசம்பர் 26, 1996) என்பவர் கயனீயத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பன்னாட்டுப் போட்டிகளில்மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடுகிறார்.[1] 2014 ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஒரு பகுதியாக இருந்தார். டிசம்பர் 2015 இல் இவர் 19 வயதுக்குட்பட்டோர் துடுப்பாட்ட உலகக் கோப்பை 2016க்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். [2] பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐ.சி.சி) 2018ஆம் ஆண்டில் ஆண்கள் துடுப்பாட்டத்தின் ஐந்து சிறந்த அடையாளங்களில் ஒருவராக ஹெட்மையரை பெயரிட்டது. [3]

உள்நாட்டு மற்றும் இ20 போட்டிகள்[தொகு]

கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக 2016 கரீபியன் பிரீமியர் லீக்கில் (சிபிஎல்) இருபது-20 (இ20) போட்டிகளில் அறிமுகமானார், மேலும் 2017 பதிப்பிற்காக தக்கவைக்கப்பட்டார். [4] ஆகஸ்ட் 2018இல், ஜமைக்கா தல்லாவாஸுக்கு எதிராக கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக 100 ஓட்டங்கள் எடுத்தபோது, சிபிஎல்லில் நூறு அடித்த இளம்வயது மட்டையாளர் ஆனார். [5]

அக்டோபர் 2018இல், கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் (மேற்கிந்தியத் துடுப்பாட்ட வாரியம்) இவருக்கு 2018–19 பருவத்திற்கான சிவப்புப் பந்து ஒப்பந்தத்தை வழங்கியது. [6] [7]

டிசம்பர் 2018இல், 2019 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான வீரர்கள் ஏலத்தில் இவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வாங்கியது.[8][9] மார்ச் 2019இல், 2019 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கு முன்னதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) கவனிக்க வேண்டிய எட்டு வீரர்களில் ஒருவராக இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது.[10] 2020 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக இவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் விடுவித்தது. [11]

பன்னாட்டுப் போட்டிகள்[தொகு]

19 வயதிற்குட்பட்ட மட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர், இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்த்து வங்காளதேசத்தில் 2016ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட துடுப்பாட்ட உலகக் கோப்பையில் வெற்றியைப் பெற்றார். அத்தொடரில் இரண்டு அரைநூறுகள் அடித்து அணிக்கு பங்களித்திருந்தார். [12]

ஏப்ரல் 2017இல், பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் தேர்வு அணியில் இவர் இடம்பெற்றார். [13] ஏப்ரல் 21, 2017 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகளுக்காக தேர்வுப் போட்டிகளில் அறிமுகமானார். [14]

டிசம்பர் 2017இல், இவர் நியூசிலாந்திற்கு எதிரான தொடருக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகளின் ஒருநாள் பன்னாட்டு (ஒநாப) அணியில் சேர்க்கப்பட்டார். 20 டிசம்பர் 2017 அன்று நியூசிலாந்திற்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகளுக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். [15] அத்துடன் அவர் நியூசிலாந்திற்கு எதிரான தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் பன்னாட்டு இருபது20 (இ20ப) அணியிலும் சேர்க்கப்பட்டு இருந்தார். 1 ஜனவரி 2018 அன்று நியூசிலாந்திற்கு எதிராக மேற்கிந்திய தீவுகளுக்காக தனது இ20ப போட்டிகளில் அறிமுகமானார்.

6 மார்ச் 2018 அன்று, 2018 துடுப்பாட்ட உலகக் கோப்பை தகுதிச்சுற்றில், ஹராரேவில் உள்ள ஓல்ட் ஹாராரியன்ஸ் மைதானத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் ஒருநாள் நூறை அடித்தார்.[16][17][18]. ஆட்டத்தை மேற்கிந்தியத் தீவுகள் அணி 60 ஓட்டங்களால் வென்றது. ஆட்ட நாயகனாக ஹெட்மையர் தேர்வு செய்யப்பட்டார். [19]

பிப்ரவரி 2019இல், ஹெட்மையர் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் மட்டையாளர் ஒருவரின் அதிவேக நூறை அடித்தார் (82 பந்துகளில்).[20]

ஏப்ரல் 2019இல், 2019 துடுப்பாட்ட உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பெற்றார். [21] [22] பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐ.சி.சி) துடுப்பாட்ட உலகக் கோப்பையில் அறிமுகமான ஐந்து அற்புதமான திறமையாளர்களில் ஒருவராக இவரைப் பெயரிட்டது. [23] 17 ஜூன் 2019 அன்று, வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில், ஹெட்மையர் ஒருநாள் போட்டிகளில் தனது 1,000வது ஓட்டத்தை எடுத்தார். [24]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Shimron Hetmyer". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 June 2015.
 2. "Hetmyer to lead West Indies at Under-19 World Cup". ESPNCricinfo. 31 December 2015. பார்க்கப்பட்ட நாள் 31 December 2015.
 3. "2018 lookback – the breakout stars (men)". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 1 January 2019.
 4. "HERO CPL PLAYER DRAFT 2017 CPL T20". www.cplt20.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 March 2017.
 5. "Hetmyer, Malik destroy Tallawahs as Guyana go top". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 August 2018.
 6. "Kemar Roach gets all-format West Indies contract". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 October 2018.
 7. "Cricket West Indies announces list of contracted players". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 2 October 2018.
 8. "IPL 2019 auction: The list of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
 9. "IPL 2019 Auction: Who got whom". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 18 December 2018.
 10. "Indian Premier League 2019: Players to watch". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 19 March 2019.
 11. "Where do the eight franchises stand before the 2020 auction?". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 15 November 2019.
 12. "Cricket Records | Records | ICC Under-19 World Cup, 2015/16 - West Indies Under-19s | Batting and bowling averages | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/engine/records/averages/batting_bowling_by_team.html?id=10799;team=3863;type=tournament. பார்த்த நாள்: 5 May 2017. 
 13. "Kieran Powell recalled to West Indies Test squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 April 2017.
 14. "Pakistan tour of West Indies, 1st Test: West Indies v Pakistan at Kingston, Apr 21-25, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 April 2017.
 15. "1st ODI, West Indies tour of New Zealand at Whangarei, Dec 20 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 December 2017.
 16. "Hetmyer hits maiden ODI hundred". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 6 March 2018.
 17. "Gayle's six-laden 123 razes UAE". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 March 2018.
 18. "Gayle, Hetmyer slam centuries as Windies overpower UAE". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 6 March 2018.
 19. "6th Match, Group A, ICC World Cup Qualifiers at Harare, Mar 6 2018". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 March 2018.
 20. "Hetmyer smashes unbeaten century to set England victory target of 290". The Belfast Telegraph. பார்க்கப்பட்ட நாள் 23 February 2019.
 21. "Andre Russell in West Indies World Cup squad, Kieron Pollard misses out". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 April 2019.
 22. "Andre Russell picked in West Indies' World Cup squad". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 24 April 2019.
 23. "Cricket World Cup 2019: Debutant watch". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 28 April 2019.
 24. "World Cup 2019: Hetmyer smashes joint-fastest fifty, crosses 1000 ODI runs". SportStar. பார்க்கப்பட்ட நாள் 17 June 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்ரோன்_ஹெட்மையர்&oldid=2876641" இலிருந்து மீள்விக்கப்பட்டது