சிம்மக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோட்டை அமைவிடம்: சிம்மக் கோட்டை பூனாவில் இருந்து சுமார் 30.கி.மீ.தொலைவில் இருந்தது. இக்கோட்டையின் வேறு பெயர் காந்தனாகோட்டை என்பதாகும்.

கோட்டை அமைப்பு: இக்கோட்டை நான்கு புறங்களும் செங்குத்தாலான சுவர்களால் ஆனது. இக்கோட்டையில் இரு வாயில்கள் காணப்படுகின்றன. அவற்றின் பெயர்கள் பூனா வாயில், கல்யாண் வாயில் என்பதாகும். கோட்டையின் அமைப்பு மறை மிகச் சிறப்பானதாகக் கூறப்படுகின்றது. இக்கோட்டையில் சுரங்கப் பாதைகளும் உள்ளன. கோட்டையில் கொத்தளங்கள் காணப்படுகின்றன. கோட்டையில் அமைந்துள்ள குடியிருப்புகள் மிகச் சிறந்த கட்டிடக் கலைக்குச் சான்றாக அமைந்துள்ளன.

பூனேவிற்குத் தெற்கே இருக்கும் சிம்மக் கோட்டை மொகலாயர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. இக்கோட்டையில் இருந்து அதனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளைக் கவனமாகக் கண்காணிக்கும் மிகச் சரியான அமைவிடத்தில் இது கட்டப்பட்டிருந்தது. ஆகையால் பகைவர்கள் எளிதில் ஊடுருவவோ, தாக்கவோ இயலாத வலிமையான கோட்டையாக சிம்மக் கோட்டை திகழ்ந்தது. உதயபானு என்ற படைவீரனின் பாதுகாப்பில் இக்கோட்டை இருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்மக்_கோட்டை&oldid=3179087" இலிருந்து மீள்விக்கப்பட்டது