சிம்பாப்வே புவியியல் ஆய்வு மையம்
சிம்பாப்வே புவியியல் ஆய்வு மையம் (Zimbabwe Geological Survey) 1910 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவே சிம்பாப்வே நாட்டின் முதன்மையான புவியியல் ஆராய்ச்சி நிறுவனமாகும்.
சிம்பாப்வேயின் சுரங்க மற்றும் சுரங்க மேம்பாட்டு அமைச்சகம் இந்நிறுவனத்தின் பணிகளை மேற்பார்வையிடுகிறது. நாட்டிற்குள் உள்ள இயற்கை வளங்கள் தொடர்பான தகவல்களைச் சேகரிப்பதிலும் அவற்றை காப்பகப்படுத்துவதிலும் புவியியல் ஆய்வு நிறுவனம் ஈடுபடுகிறது. கடந்த காலங்களில் இம் மையம் புவியியல் வரைபடமிடல் மற்றும் புவி வேதியியல் ஆய்வு முயற்சிகளில் பிரித்தானிய புவியியல் ஆய்வு நிறுவனத்துடன் ஒத்துழைத்தது. ஆனால் பொருளாதார சிக்கல்கள் மற்றும் நிதி இழப்பு காரணமாக நிறுவனத்தால் வரைபடமிடலைத் தொடர முடியவில்லை.[1]
இவ்விரு நாடுகளுக்கிடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிட்டத்தட்ட 17000 ஓடை வண்டல் படிவுகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன. Cu, Pb, Zn, Co, Ni, Mn, Li, As, Ba, Sn, Ta, மற்றும் W தனிமங்களுக்காக இப்பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MINING IN ZIMBABWE". The Association of Mine Surveyors in Zimbabwe. Archived from the original on 2 ஜூலை 2014. Retrieved 15 March 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Zimbabwe Regional Geochemical Survey". Retrieved 15 March 2013.