சிம்பாப்வே அறிவியல் அகாடமி
| சுருக்கம் | ZAS |
|---|---|
| உருவாக்கம் | அக்டோபர் 2004 |
| நிறுவனர் | சிம்பாப்வே ஆராய்ச்சிக் குழுமம் |
| நிறுவப்பட்ட இடம் | அராரே, சிம்பாப்வே |
| வகை | தேசிய அகாடமி |
| நோக்கம் | அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்கும், அறிவியல் தொடர்பான விவகாரங்களில் கொள்கை வகுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும். |
| தலைமையகம் | அராரே, சிம்பாப்வே |
| துறைகள் | வெப்பமண்டல வளங்கள், சூழலியல், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை |
உறுப்பினர் (2005) | 35 |
| சார்புகள் | இடை-கல்விக்கழகக் கூட்டாண்மை, ஆப்பிரிக்க அறிவியல் அகாடமி வலையமைப்பு |
| வலைத்தளம் | www |
சிம்பாப்வே அறிவியல் அகாடமி (Zimbabwe Academy of Sciences) என்பது சிம்பாப்வே நாட்டின் தேசிய அறிவியல் அகாடமியாகும். அறிவியல் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்கும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான விடயங்களில் அரசாங்கத்திற்கும் கொள்கை நிர்ணயிப்போருக்கும் சுயாதீனமான ஆலோசனைகளை வழங்குவதற்கும் இந்த அகாடமி உருவாக்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டில் சிம்பாப்வே ஆராய்ச்சிக் குழுமத்தால் நிறுவப்பட்டது. வெப்பமண்டல வளங்கள், சூழலியல், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை ஆய்வுகள் போன்ற துறைகளை மையமாகக் கொண்டு அகாடமி செயல்படுகிறது. இடை-கல்விக்கழகக் கூட்டாண்மை மற்றும் 'ஆப்பிரிக்க அறிவியல் அகாடமிகளின் வலையமைப்பு ஆகியவற்றுடன் இந்த அகாடமி இணைவு பெற்றுள்ளது.
வரலாறு
[தொகு]உலகளாவிய அறிவியல் அகாதமிகள் குறித்து சிம்பாப்வே ஆராய்ச்சிக் குழுமம் ஓர் ஆய்வை மேற்கொண்டதைத் தொடர்ந்து, 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சிம்பாப்வே அறிவியல் அகாடமி நிறுவப்பட்டது.[1] சிம்பாப்வேயில் ஒரு தேசிய அறிவியல் அகாடமியின் தேவை குறித்து விவாதிப்பதற்காக, சிம்பாப்வே ஆராய்ச்சிக் குழுமம் ஏற்கனவே செயல்பட்டு வந்த தொழில்முறை அமைப்புகளுடன் கலந்தாலோசனைகளை நடத்தியது. நிறுவனக் குழுவால் கலந்தாலோசிக்கப்பட்ட கொள்கை வகுப்பாளர்களால் சிம்பாப்வே அறிவியல் அகாடமியின் உருவாக்கம் ஆதரிக்கப்பட்டது.[2][3]
2005-ஆம் ஆண்டிற்குள், சிம்பாப்வே அறிவியல் அகாடமி 10 ஆய்வாளர்களையும் 25 உறுப்பினர்களையும் கொண்டிருந்தது. இதன் மூலம் மொத்தமாக 35 அறிவியலாளர்களை இது உள்ளடக்கியிருந்தது. அரசாங்கம், தனியார் துறை மற்றும் சர்வதேச நன்கொடையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு மூலங்களிலிருந்து, இந்த அகாடமி நிதியுதவியை நாடி வந்தது.[3]
முக்கிய நோக்கங்கள்
[தொகு]- சிம்பாப்வே மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்துதல்.
- அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சமூக முன்னேற்றம் தொடர்பான கொள்கை ஆலோசனைகளை வழங்குதல்.
- விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வளர்த்தல்.
- சிறந்த அறிவியல் சாதனைகளை அங்கீகரித்து கௌரவித்தல்.
- அறிவியல் அறிவை பொதுமக்களிடம் பரப்புதல்[2]
செயல்பாடுகள்
[தொகு]சிம்பாப்வே அறிவியல் அகாடமி தனது நோக்கங்களை அடைவதற்காக, அறிவியல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், அறிவியல் வெளியீடுகளைப் பதிப்பித்தல், அறிவியல் சார்ந்த வலைப்பின்னல்களில் பங்கேற்றல், அறிவியல் ஆலோசனைகளை வழங்குதல், அறிவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை விருதுகள் மூலம் அங்கீகரித்தல், அத்துடன் அறிவியல் கல்வி மற்றும் பரப்புரைத் திட்டங்களை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. கருத்தரங்குகள், அறிவியல் மாநாடுகள் மற்றும் கல்வி நிகழ்வுகளை அகாடமி நடத்துகிறது. மேலும், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், உயிரியல் வளங்கள் மற்றும் பிற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் பிரச்சினைகள் குறித்து கருத்துரைகளையும் வழங்குகிறது.[2]
வெளியீடுகள்
[தொகு]சிம்பாப்வே அறிவியல் அகாடமி அமைப்பானது, சிம்பாப்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழ்' எனும் சக மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் இதழை வெளியிடுகிறது. இவ்விதழ் இயற்கை, பயன்பாட்டு மற்றும் சமூக அறிவியல் துறைகள் மட்டுமின்றி, பொறியியல் மற்றும் கணிதத் துறைகளையும் உள்ளடக்கிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகளைத் தாங்கி வருகிறது. மேலும், சிம்பாப்வே அறிவியல் அகாடமி, அதன் உறுப்பினர்கள் சார்ந்த செய்திகள், நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், தற்கால அறிவியல் சார்ந்த சிக்கல்கள் குறித்த கட்டுரைகளையும் உள்ளடக்கிய, காலாண்டு செய்திமடலான 'சிம்பாப்வே அறிவியல் செய்திகள் என்ற இதழையும் வெளியிடுகிறது.
உறுப்பினர்கள்
[தொகு]கிறிசுட்டோபர் மகட்சா, டேவிட் சிம்பி, கிறிசுட்டோபர் செட்சங்கா, பிரான்சிசுக்கா முடாபி, பரமு மஃபோங்கோயா மற்றும் ஐடா சிதோல்-நியாங் ஆகியோர் தற்போதைய உறுப்பினர்களாக உள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The ODL African Continental Education Strategy". Retrieved 30 December 2023.
- 1 2 3 "Zimbabwe Academy of Sciences (ZAS)". www.interacademies.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 30 December 2023.
- 1 2 "Zimbabwean science academy seeks funding". SciDev.Net. 27 May 2005. Retrieved 30 December 2023.