உள்ளடக்கத்துக்குச் செல்

சிமிழி சுந்தரம் ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிமிழி சுந்தரம் ஐயர் (Simizhi Sundaram Iyer) ((1884–1927) ஓர் கருநாடக இசைக் கலைஞராவார்.

சிமிழி சுந்தரம் ஐயர்

சுயவிவரம்

[தொகு]

சிமிழி என்பது தஞ்சாவூர் மாவட்டத்தின் நன்னிலம் வட்டத்தில் குடவாசலுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமமாகும்.[1] சுந்தரம் ஐயர் 1884 ஆம் ஆண்டில் நான்கு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியில் ஒருவராக பிறந்தார். இவர் தனது 5ஆவது வயதிலேயே பாடத் தொடங்கினார். அந்த வயதிலேயே, திருவையாற்றைச் சேர்ந்த மகா வைத்தியநாத சிவனின் மூத்த சகோதரர் ராமசாமி சிவனின் கீழ் இசையைக் கற்றுக் கொண்டார். சுந்தரம் ஐயர் தனது சொந்த மாமாவின் மகளான மீனாட்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர்.

இவர் பலருக்கும் கருநாடக இசையைக் கற்பித்தார். திருவாரூர் ராஜாயி இவரிடமிருந்து கற்றுக்கொண்டார். திருகொட்டாரம் சாமிநாத முதலியார் மற்றும் காவலக்குடி முதலியார் ஆகியோர் இவருக்கு ஆதரவளித்தனர்.  

பின்னர், இவர் கற்பிப்பதற்காக மயிலாடுதுறை சென்றார். அங்கு நிரந்தரமாக தங்க முடிவு செய்த சுந்தரம் ஐயர், மாயவரம் ராஜம், மாயவரம கிருஷ்ண அய்யர், புல்லாங்குழல் ராஜாராமையார் (எஸ். ஜி. கிட்டப்பாவின் குரு) போன்ற பலருக்கும் கற்பித்தார். வயலின் கலைஞர் மாயவரம் கோவிந்தராஜ பிள்ளையும் இவரிடமிருந்து கற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

இதனையும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. குடவாசல் பேரூராட்சியின் இணையதளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமிழி_சுந்தரம்_ஐயர்&oldid=4107934" இலிருந்து மீள்விக்கப்பட்டது