சிமா பினா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிமா பினா
ராட்டர்டேம் ஜெஸ்ஸல் இஸ்லா அரங்கத்தில் சிமா பினா 2014 திசம்பர்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்சிமா பினா
பிறப்புசனவரி 4, 1945 (1945-01-04) (அகவை 79)
பிறப்பிடம்பிர்ஜந்த், ஈரான்
இசை வடிவங்கள்பாரசீக பாரம்பரிய இசை
தொழில்(கள்)பாடகர், இசையமைப்பாளர், இசை ஆராய்ச்சியாளர்
இசைக்கருவி(கள்)குரல், செட்டார், டேரே
இசைத்துறையில்1960 முதல் தற்போது வரை
இணையதளம்sima-bina.com

சிமா பினா (Sima Bina) ( பிறப்பு: 1945 சனவரி 4) இவர் ஒரு குறிப்பிடத்தக்க ஈரானிய பாரம்பரிய இசைக்கலைஞரும், இசையமைப்பாளரும், ஆராய்ச்சியாளரும், ஓவியரும் மற்றும் ஆசிரியருமாவார். ஜெர்மனியின் வானொலி டபிள்யூ.டி.ஆரால் "ஈரானிய நாட்டுப்புற இசையின் பெரும் பெண்மணி" என்று விவரிக்கப்படுகிறார். நிகழ்த்து கலைகளில் பினாவின் வாழ்க்கை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. கிட்டத்தட்ட மறந்துபோன ஈரானிய நாட்டுப்புற பாடல்கள் மற்றும் மெல்லிசைகளின் தொகுப்பை பினா சேகரித்து புதுப்பிக்க முடிந்தது. பிரபலமான பிராந்திய இசையை சேகரித்தல், அதை பதிவு செய்தல், எழுதுதல் மற்றும் மறு ஆக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய அவற்றின் தோற்றம் குறித்து விரிவான ஆராய்ச்சி செய்துள்ளார். மசண்டரணி இசை, குர்திஷ் இசை, துர்க்மென் இசை, பலூச் இசை, லூர் இசை, சிராஜி இசை, ஆப்கான் இசை, பக்தியாரி இசை மற்றும் வடக்கு மற்றும் தெற்கு கோரசனின் இசை உள்ளிட்ட ஈரானிய நாட்டுப்புற இசையின் முழு நிறமாலையையும் இவரது படைப்புகள் உள்ளடக்கியது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

பிரபலமான பாரம்பரியத்தின் மையத்தில் உள்ள கோராசனில் பிறந்த இவர், தனது ஒன்பது வயதில் ஈரானிய வானொலியில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது தந்தை அகமத் பினாவின் வழிகாட்டுதலின் கீழ் - ஈரானிய பாரம்பரிய இசையின் மேதை மற்றும் அவரது ஆரம்பகால பாடல்களை எழுதிய கவிஞர் . மராஃபி மற்றும் ஜரின் பஞ்சே போன்ற சிறந்த நிபுணர்களுடன் பினா பாரசீக, துருக்கிய மற்றும் உருது கவிதைகளில் ஒரு விதியான ரேடிஃப் என்ப்படும் திறமை மற்றும் அவாஸ் எனப்படும் குரல் நுட்பத்தைப் படித்தார். ஈரானின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் இசைத் தொகுப்பை வழங்கி, தனது சொந்த தனித் திட்டமான கோல்ஹே சஹ்ராய் (பாலைவனத்தின் பூக்கள்) என்பதை வெளிப்படுத்தினார்..

1969ஆம் ஆண்டில் தெகுரான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, நுண்கலைகளில் முதலிடம் பெற்ற சிமா பினா தனது இசைப் படிப்பைத் தொடர்ந்தார். மேலும் ஆசிரியர் தாவாமியின் வழிகாட்டுதலின் கீழ் ரேடிஃப் குறித்த தனது அறிவை முழுமையாக்கினார். 1993ஆம் ஆண்டு முதல், விழாக்களில் உலகளவில் தனது இசையை நிகழ்த்துவதற்கான அழைப்புகளை இவர் ஏற்றுக்கொண்டார். மேலும் பாரசீக பாரம்பரிய இசையை உள்ளடக்கிய இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். [1] இவர் தற்போது ஜெர்மனியின் கொல்ன் மற்றும் ஈரானின் தெகுரான் இடையே வசிக்கிறார்.

ஈரானியத் தாலாட்டு[தொகு]

ஈரானிய நாட்டுப்புறப் பாடல்களைப் பின்தொடரும் போது, சிமா பினா பலவகையானத் தாலாட்டுப் பாடல்களைக் கண்டார். இது இவர் சேகரித்த படைப்புகளில் சேர்ந்தது. இந்த தொகுப்பு இறுதியாக 2009இல் ஈரானிய லுல்லபீஸ் (ஈரானியத் தாலாட்டுப் பாடல்கள்) என்ற புத்தகத்தை உருவாக்க வழிவகுத்தது. இந்த புத்தகத்தில், பினா தனது கண்டுபிடிப்புகள், தனது கருத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட தாலாட்டுக்களின் இசைப் பற்றிய விவரம் மற்றும் காட்சி வெளிப்பாடு ஆகியவற்றை தாய்மார்களுடன் பகிர்ந்துகொள்வது மட்டுமல்லாமல், நாற்பது அசல் ஈரானிய தாலாட்டுக்களை நான்கு தொகுதிகளாக முன்வைக்கிறார். அங்கு இவரது குரல்கள் சில சமயங்களில் தாய்மார்களின் பாடலுடன் கலக்கப்படுகின்றன. மேலும், ஈரானின் வெவ்வேறு பகுதிகளில் இவருக்கு தாலாட்டு பாடல்களைப் பாடியவர்களுடன் இணைகிறது.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமா_பினா&oldid=3367377" இலிருந்து மீள்விக்கப்பட்டது