உள்ளடக்கத்துக்குச் செல்

சிமரணி நாயக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிமரணி நாயக்
உறுப்பினர்-17ஆவது ஒடிசா சட்டமன்றம்
பதவியில்
5 சூன் 2024  முதல்
தொகுதிகிண்டோல்
பதவியில்
2019–2024
தொகுதிகிண்டோல்
பதவியில்
2014–2019
முன்னையவர்அஞ்சலி பெகரா
தொகுதிகிண்டோல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 செப்டம்பர் 1995 (1995-09-18) (அகவை 30)
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பணிஅரசியல்வாதி

சிமரணி நாயக் (Simarani Nayak)(பிறப்பு 1964) ஒடிசா சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். தேன்கனல் மாவட்டத்தில் உள்ள கிண்டோல் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை உள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சி பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் 2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[1][2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

நாயக் கிண்டோலைச் சேர்ந்தவர். இவரது மறைந்த கணவர் ஒரு மருத்துவர். இவர் ஒரு இல்லத்தரசியும் சமூக சேவகரும் ஆவார். 1985-ஆம் ஆண்டில் தேன்கனல் அரசு இடைநிலைப் பயிற்சிப் பள்ளியில் 12-ஆம் வகுப்பை முடித்தார். முன்னதாக, இவர் 1982-ஆம் ஆண்டில் ஒடிசாவின் தல்பூர் உயர்நிலைப் பள்ளியில் தனது 11-ஆம் வகுப்பை முடித்தார்.[3][4]

அரசியல்

[தொகு]

2024 ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கிண்டோல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து நாயக் வெற்றி பெற்றார். இவர் 97,795 வாக்குகளைப் பெற்று பிஜு ஜனதா தளத்தின் மகேஷ் சாகுவினை 11,827 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட் வாய்ப்பு, மறுக்கப்பட்ட பின்னர், சிமரணி பிஜு ஜனதா தளத்தை விட்டு வெளியேறி ஏப்ரல் 2024-இல் பாஜகவில் சேர்ந்தார்.[5][6]

2019 ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் சார்பில் தான் முன்னர் வென்ற தனது இடத்தை இவர் தக்க வைத்துக் கொண்டார், பாரதிய ஜனதா கட்சியின் அசோக் குமார் நாயக்கை 18,905 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர் முதன்முதலில் 2014 ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கிண்டோல் தொகுதியில் வெற்றி பெற்றார்.[7][8] இவர் பாஜகவின் லட்சுமிதர் பெகாராவை 50,499 என்ற பெரிய வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Odisha ASSEMBLY ELECTION RESULT 2024". www.moneycontrol.com.
  2. "Hindol Assembly Election Results 2024: Hindol Election Candidates List, Election Date, Vote Share - IndiaToday". India Today (in ஆங்கிலம்). Retrieved 2024-06-06.
  3. "Election Commission of India". affidavit.eci.gov.in. Archived from the original on 2024-03-30.
  4. "Simarani Nayak(BJD):Constituency- HINDOL(DHENKANAL) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2024-06-06.
  5. "Two women BJD leaders quit party ahead of LS assembly polls in Odisha". The Week (in ஆங்கிலம்). Retrieved 2024-06-06.
  6. tamil. "Hindol Election Result 2023 Live, Hindol Elections Vote Counting, Odisha Results 2023 | ABP Tamil News". tamil.abplive.com. Retrieved 2024-06-06.
  7. "Hindol Lok Sabha Election 2024 Live: Get Hindol Lok Sabha Election Results and Candidate List". The Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-06-06.
  8. "Hindol Assembly Constituency Election 2024 (हिंडोल): Hindol Constituency Chunav Date,Hindol Constituency details, list of candidates, Hindol Vidhan Sabha Election Last Winner,(हिंडोल)". Jansatta (in இந்தி). 2024-06-06. Retrieved 2024-06-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமரணி_நாயக்&oldid=4384953" இலிருந்து மீள்விக்கப்பட்டது