சிமன் சிங் லோதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிமன் சிங் லோதா (Chiman Singh Lodha ) இவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவார். உப்பு சத்தியாக்கிரகம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பியாவர் தலைவர்களில் இவரும் ஒருவர். [1]

சட்டமன்றத் தேர்தல்[தொகு]

இவர் பியாவரில் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். பியாவரில் பிரிஜ் மோகன் லால் சர்மாவுடன் தேர்தலில் போட்டியிட்டார். இரு தலைவர்களும் முறையே 'பி' மற்றும் 'சி' என்று அழைக்கப்பட்டனர். [2] இவர் 1962 ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில், பியாவர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். காங்கிரசின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பிரிஜ் மோகன் லால் சர்மாவுக்கு பின்னால் 9,090 வாக்குகள் (28.94%) பெற்று மூன்றாவது இடத்தை அடிந்தார். [3] காங்கிரசு கட்சியின் கிளைக்குள் ஏற்பட்ட பிளவு இந்தியப் பொதுவுடமைக் கட்சி வேட்பாளர் சுவாமி குமாரானந்த் தேர்தலில் வெற்றி பெற உதவியது.

1960 களின் நடுப்பகுதியில் இவர் பியாவர் நகராட்சி மன்றத்தின் தலைவராக இருந்தார். [4]

நினைவு[தொகு]

பியாவரின் சாங் சாலையில் இவரது சிலை உள்ளது. [5] பியாவரில் சிறீசிமன்சிங் லோதா என்ற பெயரில் ஒரு பள்ளி உள்ளது. சி.எஸ்.லோதா நகர் இவரது நினைவாக இவரது மூத்த மகன் மோகன்சிங் லோதாவால் நிறுவப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. Rajasthan (India) (1966). Rajasthan [district Gazetteers].: Ajmer. Printed at Government Central Press. பக். 659. https://books.google.com/books?id=qM5hAAAAIAAJ. 
  2. The Political Science Review, Vol. 12, Part 3–4. Department of Political Science, University of Rajasthan. 1973. பக். 222. https://books.google.com/books?id=OIokAQAAIAAJ. 
  3. Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1962 TO THE LEGISLATIVE ASSEMBLY OF RAJASTHAN
  4. India. Rural Urban Relationship Committee (1966). Report, Vol. 3. Governmentof India, Ministry of Health & Family Planning. பக். 399. https://books.google.com/books?id=FXC2AAAAIAAJ. 
  5. http://beawarhistory.com/beawar%20images%20all/beawar%2002/pages/Chimmansingh%20Lodha%20Circle.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமன்_சிங்_லோதா&oldid=3006407" இருந்து மீள்விக்கப்பட்டது