சிப்பிப்பாறை நாய்
| தோன்றிய நாடு | இந்தியா | |||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||
| ||||||||||||||||
| நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்) | ||||||||||||||||
சிப்பிப்பாறை (Chippiparai) என்பது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாடுயைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு வேட்டை நாய் இனமாகும். இந்த இனம் அதன் வேகம், சுறுசுறுப்பு மற்றும் விசுவாசத்திற்கு பெயர் போனது. முன்பு காட்டுப்பன்றி, மான் போன்ற வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்டது.[1][2]
வரலாறும் தோற்றமும்
[தொகு]சிப்பிப்பாறை என்பது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிப்பிப்பாறை என்ற கிராமத்தின் பெயரில் இருந்து உருவானது.[1] இந்த இனம் வரலாற்று ரீதியாக விருதுநகர், திருநெல்வேலி, மதுரை போன்ற பகுதிகளில் அரச குடும்பங்களால் வளர்க்கப்பட்டது.[1][3] இவை சலுக்கி போன்ற வேட்டை நாய் இனங்களில் இருந்து பரிணமித்ததாக நம்பப்படுகிறது.[4] வேட்டைத்திறனுக்கு பெயர் போன இந்த நாய்கள், அதன் புலனுணர்வு மற்றும் பயிற்சியை ஏற்கும் தன்மை காரணமாக காவல் நாய்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.[5]
தோற்றம்
[தொகு]சிப்பிப்பாறை நாய்கள் நீண்ட கால்கள், இலேசான தசைப்பிடிப்பு, குறுகிய தலை ஆகியவற்றைக் கொண்ட வேகத்திற்கான உகந்த உருவத்தைப் பெற்றுள்ளன.[1][4] இவற்றின் உரோமம் மிகவும் குட்டையாக, மிருதுவாக, மினுமினுப்பாக காணப்படும். இவற்றின் நிறம் பழுப்பு, சிவப்பு, சாம்பல், புள்ளிகள் உள்ளிட்ட பல வண்ணங்களில் காணப்படுகிறது.[2][5] வால் நீளமாக வளைவு பெற்றிருக்கும்.[4]
குணாதிசயங்கள்
[தொகு]சிப்பிப்பாறை நாய்கள் அறிவாற்றல், விசுவாசம் மற்றும் தன் உரிமையாளருடன் அமைதியான தன்மை கொண்டவை.[2][4] இவை பெரும்பாலும் ஒரு ஒற்றை உரிமையாளருடன் ஆழமான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும். அன்னியர்களிடம் கரிசிகளாக நடந்துகொள்ளும்.[5] இவற்றுக்கு வேட்டைத்திறன் அதிகம் என்பதால், பாதுகாப்பான வேலி மற்றும் தொடர் வடம் தேவை.[4] பிற சிறு விலங்குகளுடன் வாழ வேண்டுமெனில், சிறு வயதிலிருந்தே பழக்கிப்படுத்துவது நல்லது.[4]
உடல்நலமும் பராமரிப்பும்
[தொகு]
சிப்பிப்பாறை நாய்கள் பொதுவாக ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவற்றின் ஆயுட்காலம் 11 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும்.[2][5] இவற்றில் காணப்படக்கூடிய சில உடல்நலப் பிரச்சினைகள்:
- கால் வளைவு
- இடுப்பு மூட்டு இணக்கம்
- விழித்திரை சீர்கேடு
- ஒவ்வாமை
- மயக்க மருந்துக்கான உணர்திறன்
- குளிர் தாங்காமை [2][4]
குட்டையான உரோமம் இவற்றை வெப்ப காலநிலைக்கு ஏற்றதாக ஆக்குகிறது. அடிக்கடி தலைவாரி இறந்த உரோமங்களை நீக்கினால் போதுமானது.[5] இவை அதிக சக்தி வாய்ந்த இனம் என்பதால், நாள்தோறும் நீண்ட நடை அல்லது ஓட்டம் போன்ற உடற்பயிற்சி தேவை.[4]
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Karthickeyan, S.M.K.; Ravimurugan, T.; Hisham, A.; Sivaselvam, S.N. (2015). "Chippiparai breed of dogs in Tamil Nadu: An assessment of physical and performance characteristics". Indian Journal of Veterinary Sciences and Biotechnology 10 (3): 45–49. பன்னாட்டுத் தர தொடர் எண்:2394-0247. https://www.researchgate.net/publication/313861661. பார்த்த நாள்: 21 September 2020.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "Chippiparai Information & Dog Breed Facts". Dogell.com. Retrieved 8 November 2025.
- ↑ "Rajapalayam to Kanni: Know These Native Dog Breeds From Tamil Nadu". News18. 25 February 2025. Retrieved 8 November 2025.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 "Chippiparai Dog Breed". Dog-learn.com. Retrieved 8 November 2025.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 "Meet the Chippiparai : Origin , Temperament & Grooming Tips". NAHF.org. 12 November 2024. Retrieved 8 November 2025.
வெளி இணைப்புகள்
[தொகு]இரா.சிவசித்து தி இந்து 2017 அக்டோபர் 28
- வசூலுக்கு வந்தவர்களை விரட்டிய நாய்! இரா.சிவசித்து தி இந்து 2017 நவம்பர் 4
- அசல் சிப்பிப்பாறை இரா.சிவசித்து தி இந்து 2017 நவம்பர் 11