சிப்தாஸ் கோஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிப்தாஸ் கோஷ்
பின்வந்தவர்
நிஹார் முகர்ஜி
தனிநபர் தகவல்
பிறப்பு 5 ஆகஷ்ட் 1923
டாக்கா, வங்காள மாகாணம், பிரிட்டிஷ் இந்தியா
இறப்பு 5 ஆகஷ்ட் 1976(1976-08-05) (வயது 53)
கல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
அரசியல் கட்சி இந்திய சோசலிச ஒற்றுமை மையம் (கம்யூனிஸ்ட்)
இருப்பிடம் கல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா

சிப்தாஸ் கோஷ் (5 ஆகஸ்ட் 1923 - 5 ஆகஸ்ட் 1976) என்பவர் ஒரு இந்தியப் பொதுவுடமை அரசியல்வாதி ஆவார். இவர் பல தசாப்தங்களாக இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் இந்திய சோசலிஸ்ட் யூனிட்டி மையம் (கம்யூனிஸ்ட்) நிறுவனப் பொதுச் செயலாளர் ஆவார்.[1]

கோஷ் பிரித்தானிய இந்தியாவின் டாக்கா மாவட்டத்தில், ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தார். 13 வயதில் தனது கிராமப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். அவர் இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் பங்கேற்க அனுசீலன் சமித்தியில் சேர்ந்தார். அவர் மிக வயதில் எம். என். ராயின் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டார். அவர் தோழர் பாசு ஆச்சார்யாவை (கல்யாணி, நாடியா) வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார்.[2] 1942 இல் அவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே அவர் மார்க்சிசம்-லெனினிசத்தை முழுமையாகப் படித்தார். பின்னர் நிஹார் முகர்ஜி போன்ற சக ஊழியர்களுடன் அவர் 1948 இல் இந்திய சோசலிஸ்ட் யூனிட்டி மையத்தை கட்டமைத்தார். அவர் 1976 இல் அவரது 53வது பிறந்த நாளில் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வெளியிடப்பட்ட உரைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்தாஸ்_கோஷ்&oldid=3392578" இருந்து மீள்விக்கப்பட்டது