சிபைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிபைட்டு (Chibaite) என்பது SiO2•n(CH4,C2H6,C3H8,i-C4H10) என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இவ்வாய்ப்பாட்டிலுள்ள n இன் அதிகபட்ச மதிப்பு 3/17 ஆகும். ஓர் அரிய சிலிகேட் தாதுவான சிபைட் கனிமம் சிலிகா கிளாத்தரேட்டு எனப்படும் சிலிகா கூடுவகை சேர்மம் என்று வகைப்படுத்தப்படுகிறது. மேலும், இத்தாது இருதொகுதி வகைபாடான எம்3 கனசதுர கட்டமைப்பில் மீத்தேன், ஈத்தேன், புரோப்பேன் ஐசோபியூட்டேன் போன்ற பல்வேறு ஐதரோகார்பன் மூலக்கூறுகளுக்கு சிலிகா கூடு தனக்குள் இடமளிக்கிறது [1][2].

சப்பான் நாட்டின் பெரிய தீவான ஒன்சு திவிலுள்ள சிபா மாவட்டத்தின் மினாமிபோசோ நகரத்திலுள்ள அராகாவாவில் முதன்முதலில் சிபைட்டு கனிமம் கண்டறியப்பட்டது. இந்த கனிமத்தை ஐ.எம்.ஏ எனப்படும் அனைத்துலக கனிமவியல் நிறுவனம் 2009 ஆம் ஆண்டில் அங்கீகரித்தது [1][2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபைட்டு&oldid=2805121" இருந்து மீள்விக்கப்பட்டது