சிபில் வத்தசிங்க
சிபில் வத்தசிங்க | |
---|---|
සිබිල් වෙත්තසිංහ | |
தாய்மொழியில் பெயர் | සිබිල් වෙත්තසිංහ |
பிறப்பு | 31 October 1927 ஜின்தோட்டை, காலி, இலங்கை | (வயது 97)
தேசியம் | இலங்கையர் |
பணி | எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை | தொன் தர்மபால வத்தசிங்க |
பிள்ளைகள் | 4 |
கலா கீர்த்தி சிபில் வத்தசிங்க (Sybil Wettasinghe) இலங்கையின் மூத்த சிறுவர் கதை எழுத்தாளரும், விளக்கமளிப்பவரும் ஆவார்.[1] இவரது பல புத்தகங்கள் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]வத்தசிங்க 1927 ஆம் ஆண்டு இலங்கையில் காலி மாவட்டத்தில் ஜின்தோட்டையில் பிறந்தார். ஆறு வயது வரை ஜின்தோட்டையில் வளர்ந்தார். பின்பு குடும்பத்துடன் கொழும்புக்கு குடிபெயர்ந்து ஹோலி பெமிலி கான்வன்டில் கல்வி கற்றார். பதினேழாவது வயதில் லங்காதீப பத்திரிகையில் இணைந்தார். 1952 ஆம் ஆண்டு லேக் ஹவுஸ் பதிப்பகத்தில் ஜனதா பத்திரிகையின் பிரதான விளக்கமளிப்பவராக பணியாற்றினார். வத்தசிங்க லேக் ஹவுஸ் பதிப்பகத்தில் பணியாற்றியமையால் அவருக்கு சண்டே ஒப்சவர், சிலுமின, டெய்லி நியூஸ் மற்றும் சரசவிய ஆகிய பிரபல பத்திரிகைகளில் எழுத மற்றும் விளக்கமளிக்க வாய்ப்பு கிடைத்தது.[2] 1955 ஆம் ஆண்டு அனைத்து லேக் ஹவுஸ் பத்திரிகைகளினதும் தலைமை பதிப்பாசிரியரான தொன் தர்மபால வத்தசிங்க என்பவரை திருமணம் முடித்தார்.[3]
புத்தகங்கள்
[தொகு]1952 ஆம் ஆண்டு வத்தசிங்க ஜனதா பத்திரிகையில் பணியாற்றும் போதே கதைகள் எழுத தொடங்கினார். பத்திரிகையின் சிறுவர் பகுதியில் குடா ஹொரா என்ற கதையை எழுதினார். இக் கதையை புத்தகமாக எழுதி வெளியிட்ட போது தேசிய மற்றும் சர்வதேசிய அளவில் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. குடா ஹொராவின் வெற்றியை தொடர்ந்து 200 இற்கும் மேற்பட்ட சிறுவர் கதை புத்தகங்களை எழுதினார். இவரது பல புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கபட்டுள்ளன.[4]
ஆண்டு | புத்தகம் | மொழிகள் |
---|---|---|
1994 | ஹோலி தி பாக்ஸ் | ஜப்பானிய, கொரிய, ஸ்வீடிஷ், நோர்வே, சீன, சிங்களம் மற்றும் ஆங்கிலம் [5][6][7] |
1970 | லிட்டில் கிரேனி | தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் |
2009 | போடி என்ட் போடா | ஜப்பனீஸ் மற்றும் சிங்களம் |
1986 | தம்பாயா டேக்ஸ் ரைட் [8] | சிங்களம், தமிழ் & ஆங்கிலம் |
1960 | சூத்ரார புஞ்சா [9] | சிங்களம் |
1999 | ரன் அவெ பிரிட் [10] | சிங்களம், ஜப்பானியம், தமிழ் மற்றும் ஆங்கிலம். விரைவில் கொரிய மொழியில் வெளிவரும் |
1994 | ஸ்ரேன்ஜ் விசிடர்ஸ் டு த கெட் கன்ட்ரி [11] | ஜப்பனீஸ், ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்களம் |
1965 | வெசக் லேண்டர் [12][13] | ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்களம் |
2009 | எடர்னலி யுவர்ஸ் | ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் [14] |
2009 | துரா கமனக் [15] | சிங்களம் |
2000 | லிட்டில் ரெட் கார் | ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் |
2010 | மான்ஸ்டர் இன் த வெல் | ஆங்கிலம் மற்றும் சிங்களம் |
1995 | சைல்ட் இன் மீ [16] | டச்சு, ஆங்கிலம், சிங்களம், தமிழ் மற்றும் சமீபத்தில் ஜப்பானிய மொழிகளில் |
1970 | மகுல் கெதாரா பாத் நாதோ | சிங்களம் |
1956 | தி அம்ரல்லா திப் [17] | ஜப்பனீஸ், சீன, ஸ்வீடிஷ், நோர்வே, டேனிஷ், ஆங்கிலம், கொரிய, சிங்களம் மற்றும் தமிழ் |
விருதுகள்
[தொகு]வத்தசிங்க பல சர்வதேச பாராட்டுக்களை அவரது சிறுவர் கதைகளுக்காக பெற்றுள்ளார். ஐரோப்பிய மற்றும் ஆசியாவில் விருதுகளை பெற்றுள்ளார். 1965 ஆம் ஆண்டு இவர் எழுதிய வெசக் லன்டர்ன் கதைக்காக சிறுவர் கதைகளுக்கான ஆசிய பெண் எழுத்தாளருக்கான இசபெல் ஹட்டன் பரிசை வென்றார். 1986 இல் இவரது முதல் புத்தகமான குடா ஹொரா சிறந்த வெளிநாட்டு புத்தகம் என்ற விருதை ஜப்பானில் வென்றது. மேலும் இந்த புத்தகத்திற்கு 1987 ஆம் ஆண்டு மிக பிரபலமான சிறுவர் புத்தகம் என்ற விருது ஜப்பானிய நூலக சங்கத்தால் கிடைக்கப் பெற்றது. குடா ஹொரா புத்தகம் ஏழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு ஜப்பான் மற்றும் செக்கோசெலோவாக்கியாவில் வத்தசிங்கவின் புத்தக கண்காட்சி நடைபெற்றது. அவருக்கு நோர்வே புத்தக விழாவிற்காக நன்கறியப்பட்ட எழுத்தாளர்களால் அழைப்பு விடுவிக்கப்பட்டது.
- தி வெசாக் லன்டர்ன் - 1996 ஆம் ஆண்டு சிறந்த ஆங்கில சிறுவர் புத்தகத்திற்கான மாநில இலக்கிய விருதை வென்றது.
- தி சைல்ட் இன் மீ - 1995 ஆம் ஆண்டு பிரபலமான ஆங்கில படைப்புக்கான தி கிராடியன் பரிசை வென்றது.[18][19]
- தீப்தா லமா மகே - பியான்னல் ஒப் இலுஸ்ரேசன் பிரிடிஸ்லாவ விருதை வென்றது.
- மகுல் கெதர பாத் நேதோ - 1971 இல் மாநில இலக்கிய விருதை பெற்றது.
- தி அம்ரெல்லா தீப் புத்தகம் 1986 இல் சிறந்த சிறுவர் பட புத்தகத்திற்கான விருதை ஜப்பானிய கலாச்சார அமைச்சினால் பெற்றது.
- 1987 இல் மிக பிரபலமான சிறுவர் புத்தக விருதை டோக்கியோ சிறுவர் நூலகத்தினால் கிடைக்கப்பெற்றது.
- 1992 இல் சிறந்த ஜுவெனிலா சிறுவர் புத்தக விருதை மெடி கெதர லமெய் புத்தகம் ஆர்ட்ஸ் கவுன்சில் ஒப் ஶ்ரீலங்கா இனால் கிடைக்கப் பெற்றது.
- விஸ்வா பிரசாதினி விருது இலங்கையின் முதல் பெண் பிரதம மந்திரியான சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களால் 1996 இல் பெற்றார்.
- ரோஹன பிரதீபா விருது 2003 ஆம் ஆண்டு ருகுணு பல்கலைக்கழகத்தினால் பெற்றுக் கொண்டார்.
- 2004 ஆம் ஆண்டு கலு பகன்சிலு விருது இளம் பௌத்த சங்கத்தினால் கிடைக்கப் பெற்றது.
- 2005 இல் கலா கீர்த்தி விருது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசினால் வழங்கப்பட்டது.
- 2007 இல் சோலிஸ் மென்டிஸ் விருது கிடைக்கப்பெற்றது.[20]
- துர கமனக் மாநில இலக்கிய விருது வழங்கப்பட்டது.
- 2012 இல் நிகய் ஆசிய பரிசு கிடைக்கப்பெற்றது.[21][22]
மேலும்
[தொகு]- Sybil Wettasinghe,1995, Child in Me, Colombo: Published by Author[16]
- Anoli Perera, 2008,“Women Artists in Sri Lanka: Are they the Carriers of the Women’s Burden?", South Asia Journal for Culture, Vol. 2. Pitakotte: Colombo Institute/ Theertha.[23]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.goodreads.com/author/show/1666896.Sybil_Wettasinghe Goodreads.com பார்த்தநாள் 29-08-2012
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. Retrieved 2019-03-07.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-19. Retrieved 2019-03-07.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-11-18. Retrieved 2019-03-07.
- ↑ "Fukuinkan Shoten Publishers,Inc" (in ஜப்பானியம்). Fukuinkan.com. Archived from the original on 20 ஆகஸ்ட் 2014. Retrieved 29 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Hoity – in Japanese". Sybilwettasinghe.com. Retrieved 29 August 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Hoity the Fox – in Chinese". Sybilwettasinghe.com. Retrieved 29 August 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "|| Daily News Online Edition – Sri lanka :: Print Page". Dailynews.lk. 27 October 2010. Retrieved 29 August 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Eye". Nation.lk. Archived from the original on 20 ஆகஸ்ட் 2014. Retrieved 29 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ The Runaway Beard. https://books.google.com/books?id=AeKDAAAACAAJ.
- ↑ "Plus". Sundaytimes.lk. Retrieved 29 August 2012.
- ↑ Vesak Lantern. 1965*. https://books.google.com/books?id=H_1VPgAACAAJ.
- ↑ "Vesak lantern (Book, 1965)". [WorldCat.org]. Retrieved 29 August 2012.
- ↑ "The Island-Leisure". Island.lk. Archived from the original on 3 பிப்ரவரி 2011. Retrieved 29 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Bookazone Pvt Ltd :: Sinhala :: BOOKS :: Lama Katha :: Dura Gamanak". Books.lk. Archived from the original on 20 ஆகஸ்ட் 2014. Retrieved 29 August 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 16.0 16.1 "The child in me (9789559511076): Sybil Wettasinghe: Books". Amazon.com. Retrieved 29 August 2012.
- ↑ The Umbrella Thief. https://books.google.com/books?id=1joBAAAACAAJ.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-28. Retrieved 2019-03-07.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-05. Retrieved 2019-03-07.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-18. Retrieved 2019-03-07.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-07. Retrieved 2019-03-07.
- ↑ http://e.nikkei.com/e/fr/forum/nap/index.aspx
- ↑ "Women Artists in Sri Lanka:Are they Carriers of a Women's Burden? by Anoli Perera — Theertha". Theertha.org. Archived from the original on 2 ஏப்ரல் 2013. Retrieved 29 August 2012.
வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.sybilwettasinghe.com பரணிடப்பட்டது 2019-03-12 at the வந்தவழி இயந்திரம்