சிபிலிமா நீர்மின் திட்டம்
சிபிலிமா நீர்மின் நிலையம் Chipilima Hydro Power plant | |
---|---|
சிபிலிமா நீர்மின் நிலைய மின் வலைப்பின்னல் | |
அமைவு | 21°21′13.03″N 83°55′0.99″E / 21.3536194°N 83.9169417°E |
நிலை | செயற்பாட்டில் உள்ளது. |
உரிமையாளர் | ஒடிசா நீர்மின் ஆணையம், புவனேசுவரம்[1] |
சிபிலிமா நீர்மின் திட்டம் (Chipilima Hydro Electric Project) என்பது இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் நகரம் , சிபிலிமா கிராமத்தில் அமைந்துள்ள ஒரு நீர்மின் நிலையமாகும்.
ஒடிசா அரசு 11 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் பர்லா நீர்மின் திட்டம் மற்றும் சிபிலிமா நீர்மின் திட்டம் ஆகியவற்றின் 5 ஆவது மற்றும் 6 ஆவது அலகுகளை நவீனப்படுத்த திட்டமிட்டது.[2] இதன் விளைவாக சிபிலிமா நீர்மின் திட்டத்தின் 1 ஆவது மற்றும் 2 ஆவது அலகுகளின் நவீனமயமாக்கல் மற்றும் சீரமைப்புக்கான வழி கிடைக்கிறது. இந்த திட்டம் ஒடிசாவின் மற்ற நீர் மின் திட்டங்களின் ஒரு பகுதியாக 2005-06 ஆம் ஆண்டு காலத்தில் 5234 மில்லியன் அலகுகளும் , 2006-07 ஆம் ஆண்டு காலத்தில் 7354 மில்லியன் அலகுகளும் , 2008-09 ஆம் ஆண்டு காலத்தில் 7883 மில்லியன் அலகுகளும் பங்களித்தது. [2]
அமைவிடம்
[தொகு]ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் நகரிலிருந்து சிபிலிமா 32.2 கிலோமீட்டர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை எண் 6 இல் அமைந்துள்ளது. 262 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சத்தீசுகர் மாநிலம் ராய்பூர் விமான நிலையம் இதற்கு அருகிலுள்ள விமான நிலையமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Archived copy". Archived from the original on 2012-01-31. பார்க்கப்பட்ட நாள் 2011-10-17.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ 2.0 2.1 Odisha government plans to take up modernisation of 5th and 6th unit of BHEP and 3rd unit of CHEP during the 11th five year plan period.12 August 2008
- நாயக், அஜித். அதிகாரப் போராட்டம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் . ஆகஸ்ட் 4, 2011