உள்ளடக்கத்துக்குச் செல்

சின்வால்டைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்வால்டைட்டு
Zinnwaldite
ஜசின்வால்டைட்டு மற்றும் குவார்ட்சில் புட்பராகம் கொண்ட புளோர் அபடைட்டு
பொதுவானாவை
வகைபைலோசிலிக்கேட்டு கனிமம்
வேதி வாய்பாடுKLiFeAl(AlSi3)O10(OH,F)2
இனங்காணல்
நிறம்சாம்பல் பழுப்பு, மஞ்சள் பழுப்பு, வெளிர் ஊதா, அடர் பச்சை, வண்ண மண்டலம் பொதுவானது
படிக இயல்புநன்கு-வடிவமைக்கப்பட்ட குறுகிய பட்டகம் அல்லது தட்டையான படிகங்கள்,
படிக அமைப்புஒற்றைச் சரிவச்சு
இரட்டைப் படிகமுறல்சமதளத்தில் {001}, இரட்டை அச்சு [310]
பிளப்புசரியான அடித்தளம் {001}
முறிவுசமமற்றது
விகுவுத் தன்மைநெகிழ்வும் மீட்சியும்
மோவின் அளவுகோல் வலிமை3.5 - 4.0
மிளிர்வுமுத்து பளபளப்பு
கீற்றுவண்ணம்White
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும் மற்றும் ஒளிகசியும்
ஒப்படர்த்தி2.9 - 3.1
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.565 - 1.625 nβ = 1.605 - 1.675 nγ = 1.605 - 1.675
இரட்டை ஒளிவிலகல்0.040 - 0.050
பலதிசை வண்ணப்படிகமைதனித்துவம், X = நிறமற்றது முதல் மஞ்சள் பழுப்பு; Y = சாம்பல் பழுப்பு; Z = நிறமற்றது முதல் சம்பல் பழுப்பு வரை
2V கோணம்0 - 40°
மேற்கோள்கள்[1][2][3][4]

சின்வால்டைட்டு (Zinnwaldite) என்பது KLiFeAl(AlSi3)O10(OH,F)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமம் ஆகும். பொட்டாசியம் இலித்தியம் இரும்பு அலுமினிய சிலிகேட் ஐதராக்சைடு புளோரைடு கனிமமாக வகைப்படுத்தப்படும் இது மைக்கா குழுவில் உள்ள ஒரு சிலிக்கேட்டு கனிமமாகும். பன்னாட்டு கனிமவியல் சங்கம் சின்வால்டைட்டு கனிமத்தை Znw[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. சிடரோபைலைட்டுக்கும் (KFe2Al(Al2Si2)O10(F,OH)2) பாலிலித்தியோணைட்டுக்கும் (KLi2AlSi4O10(F,OH)2) இடைப்பட்ட நிலையில் சின்வால்டைட்டு கனிமம் உள்ளதாகவும் பன்னாட்டு கனிமவியல் சங்கம் குறிப்பிடுகிறது. ஒரு செல்லுபடியாகும் கனிம இனமாகவும் இது கருதப்படவில்லை.[3]

கண்டுபிடிப்பு

[தொகு]

சின்வால்டைட்டு முதன்முதலில் 1845 ஆம் ஆண்டு செருமன்-செக் குடியரசு எல்லையில் உள்ள சின்வால்டில் (இன்று சினோவெக்) கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது..[3]

தோற்றம்

[தொகு]

இது பெரும்பாலும் வெள்ளீயத் தாது படிவுகளுடன் தொடர்புடைய கிரீசன்சு, பெக்மாடைட் மற்றும் குவார்ட்சு படிகங்களின் விளிம்புகளில் காணப்படுகிறது. இது பொதுவாக புட்பராகம், கேசிட்டரைட்டு, உல்பிரமைட்டு, இலெபிடோலைட்டு, சுபோடுமீன், பெரில், தூர்மலைன் மற்றும் புளோரைட்டு ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Handbook of Mineralogy
  2. Webmineral data
  3. 3.0 3.1 3.2 Mindat
  4. Rieder, M.; Hybler, J.; Smrcok, L.; Weiss, Z. (1996). "Refinement of the crystal structure of zinnwaldite 2M_1". European Journal of Mineralogy 8 (6): 1241–1248. doi:10.1127/ejm/8/6/1241. 
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்வால்டைட்டு&oldid=4211114" இலிருந்து மீள்விக்கப்பட்டது