உள்ளடக்கத்துக்குச் செல்

சின்மோய் கிருஷ்ண தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்மோய் கிருஷ்ண தாஸ்
চিন্ময় কৃষ্ণ দাস
தாய்மொழியில் பெயர்চিন্ময় কৃষ্ণ দাস
பிறப்புசந்தன் குமார் தார்
பணிஇந்து சமயத் துறவி
அமைப்பு(கள்)வங்காளதேச சனாதன விழிப்புணர்வு இயக்கம்
அறியப்படுவதுஇஸ்கான்
குற்றச்செயல்தேசத்துரோகம்

சின்மோய் கிருஷ்ண தாஸ், வங்காள தேசத்தவரும், இந்து சமயத் துறவியும், அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் மற்றும் வங்காளதேச சனாதன விழிப்புணர்வு இயக்கத்தைச் சேர்ந்தவரும் ஆவார்.[1][2] பிரோஸ் கான் என்பவர் டாக்கா காவல்துறையில் அளித்த புகார் மனுவின் பேரில், 25 நவம்பர் 2024 அன்று சின்மோய் கிருஷ்ண தாசை தேசத்துரோக வழக்கில் [3][4][5][6][7][8][9] கைது செய்யப்பட்டு டாக்கா சிறையில் அடைக்கப்பட்டார். இவரது கைதை கண்டித்தும், சிறையிலிருந்து விடுதலைச் செய்யக்கோரியும், வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் மேற்கு வங்காள மாநில இந்துக்கள் 26 நவம்பர் 2024 முதல் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.[10][11]

சின்மோய் கிருஷ்ண தாஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்துக்களின் தொடர் போராட்டங்களின் எதிரொலியாக வங்காளதேச அரசு உயர் நீதிமன்றத்தில், அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தை மத அடிப்படைவாத அமைப்பு எனக்காரணம் கூறி, அந்த அமைப்பை தடை செய்யக்கோரி நீதிப்பேராணை கோரியது. 28 நவம்பர் 2024 அன்று உயர் நீதிமன்றம், அரசின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தது.[12]

இளமை மற்றும் தொழில்

[தொகு]

முன்னர் சின்மோய் கிருஷ்ண தாஸ் இஸ்கான் அமைப்பின் மண்டலச் செயலளராக சிட்டகாங்கில் பணியாற்றினார்.[13] இவர் தற்போது வங்காளதேச சனாதன விழிப்புணர்வு இயக்கத்தில் சேவையாற்றிவருகிறார். மேலும் இவர் சிட்டகாங் நகரத்தில் புண்டரிக் தாம் ஆசிரமத்தின் காப்பாளராக உள்ளார்.

கைதின் காரணம்

[தொகு]

சிட்டகாங் நகரத்தின் புது சந்தை பகுதியில் நடைபெற்ற இந்துக்களின் பேரரணியில், வங்காள தேசியக் கொடியை விட உயரமாகக் காவிக் கொடிகளை உயர்த்தி பிடித்ததால், வங்காளதேச தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.[14][15] காவல்துறையால் கைது செய்யப்பட்ட இவரை 26 நவம்பர் 2024 அன்று சிட்டகாங் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி சின்மோய் கிருஷ்ண தாசின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, 10 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.[16]

பிற கைதுகள்

[தொகு]

30 நவம்பர் 2024 அன்று சின்மோய் கிருஷ்ண தாசை சிறையில் சந்தித்து விட்டு திரும்பிய இஸ்கான் துறவிகளான ஆதிபுருஷ் சியாம் தாஸ் மற்றும் ரங்கநாத் தாஸ் ஆகியோர் நீதிமன்ற ஆணை இன்றி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்[17][18][19]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hindu monk sent to jail in Bangladesh: Who is Chinmoy Krishna Das?
  2. Who Is Chinmoy Krishna Das Brahmachari, Hindu Leader Arrested In Bangladesh
  3. "Why was Hindu monk Chinmoy Krishna Das arrested in Bangladesh?". The Week. 26 November 2024. Retrieved 26 November 2024.
  4. Nath, Sanstuti (26 November 2024). "Supporters Of Arrested Hindu Priest Thrashed Outside Bangladesh Court". www.ndtv.com. Retrieved 26 November 2024.
  5. "ISKCON leader Chinmoy Das held in Bangladesh for sedition". Hindustan Times. 26 November 2024. Retrieved 26 November 2024.
  6. "Hindu monk sent to jail in Bangladesh: Who is Chinmoy Krishna Das?". The Indian Express. 26 November 2024. Retrieved 26 November 2024.
  7. "Several injured after protests break out in Bangladesh over arrest of Hindu monk". India Today. 26 November 2024. Retrieved 26 November 2024.
  8. "Bangladesh ISKCON priest Chinmoy Krishna Das arrested amid protests against Hindu atrocities". The Economic Times. 26 November 2024. Retrieved 26 November 2024.
  9. "Chinmoy Krishna Das sent to jail". Dhaka Tribune. 26 November 2024. Retrieved 26 November 2024.
  10. Priest Chinmoy Krishna das arrested in Bangaladesh:BJP & Congress holds protests in West Bengal, ISKON demand justice
  11. இஸ்கான் பொதுச் செயலர் கைது: வங்கதேசத்தில் இந்துக்கள் கொந்தளிப்பு - நடந்தது என்ன?
  12. Bangladesh court refuses to ban Iskcon amid violence after Hindu monk's arrest
  13. "Who is Chinmoy Krishna Das and why has he been arrested in Bangladesh?". The Economic Times. 2024-11-26. https://economictimes.indiatimes.com/news/new-updates/all-about-the-iskcon-priest-who-has-been-arrested-in-bangladesh/articleshow/115694394.cms?from=mdr.
  14. "Two arrested for hoisting a saffron flag over the national flag". Dhaka Post (in Bengali). 30 October 2024. Retrieved 2024-11-27.
  15. "চিন্ময় দাশকে গ্রেপ্তারে 'গভীর উদ্বেগ' ভারতের". bdnews24.com (in ஆங்கிலம்). Retrieved 2024-11-26.
  16. "Ensure safety of Hindus, India tells Bangladesh after arrest of ISKCON monk". Hindustan Times. 2024-11-27. https://www.hindustantimes.com/india-news/ensure-safety-of-hindus-india-tells-bangladesh-after-arrest-of-iskcon-monk-101732610199445.html#:~:text=for%20Hindu%20priest-,A%20Bangladesh%20court%20on%20Tuesday%20ordered%20to%20jail%20Krishna%20Das,Bangladeshi%20news%20website%20Bdnews24%20reported..
  17. Two more Hindu priests arrested in Bangladesh, claims ISKCON Kolkata spokesperson
  18. Hindu priest Shyam Das Prabhu arrested in Bangladesh
  19. Another Hindu priest arrested in Bangladesh
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்மோய்_கிருஷ்ண_தாஸ்&oldid=4474227" இலிருந்து மீள்விக்கப்பட்டது