சின்ன விஷயங்களின் கடவுள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சின்ன விஷயங்களின் கடவுள்
Chinna-vishayangalin-kadavul.jpg
சின்ன விஷயங்களின் கடவுள் நூலின் அட்டைப்படம்
நூலாசிரியர்அருந்ததி ராய்
மொழிபெயர்ப்பாளர்ஜி. குப்புசாமி
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைநூல்
வெளியீட்டாளர்காலச்சுவடு பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
2012

சின்ன விஷயங்களின் கடவுள் என்பது அருந்ததி ராய் எழுதிய "த காட் ஆஃப் சிமோல் திங்சு" (The god of small things) என்ற புகழ் பெற்ற ஆங்கில நூலின் தமிழ்ப் பதிப்பு ஆகும்.

காலச்சுவடு பதிப்பக வெளியீடாக ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் 2012 சூலை 28-ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள டோன் போஸ்கோ பள்ளியில் நடைபெற்ற விழாவில் இந்நூல் வெளியிடப்பட்டது.

ஐரோப்பிய மொழிகள் உட்பட ஏராளமான மொழிகளுக்கு இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் கடைசியாக தமிழில் வெளியிடப்பட்டதோடு இதுவரை இந்நூல் வெளியிடப்பட்ட மொழிகளின் எண்ணி்க்கை 39 ஆகும்.

மலையாள மொழியில் இந்த நூல் ஏற்கனவே பிரியா ஏ.எஸ் என்பவரால் குஞ்ஞு காரியங்களுடைய ஒடே தம்புரான் (കുഞ്ഞു കാര്യങ്ങളുടെ ഒടേതമ്പുരാന്‍) என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

2012, சூலை 28-ஆம் தேதி சென்னையில் உள்ள டோன் போஸ்கோ பள்ளியில், சின்ன விஷயங்களின் கடவுள் நூல் வெளியீட்டு விழாவின்போது கவிஞர் சுகிர்தாரணி (இடது பக்கம் உள்ளவர்) எழுதிய காமத்திப்பூ கவிதை நூலை எழுத்தாளர் பிரபஞ்சன் (வலது பக்கம் உள்ளவர்) வெளியிட, பெறுகிறார் எழுத்தாளர் அருந்ததி ராய்.

மேற்கோள்கள்[தொகு]

தினமலர் நாளிதழ் செய்தி