உள்ளடக்கத்துக்குச் செல்

சின்ன காட்டுச்சில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்ன காட்டுச்சில்லை
வடக்கு கடல் கெலிகோலாண்டு தீவில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எம்பெரிசிடே
பேரினம்:
எம்பெரிசா
இனம்:
எ. புசில்லா
இருசொற் பெயரீடு
எம்பெரிசா புசில்லா
பல்லாசு, 1776
எம்பெரிசா புசில்லா பரம்பல்     இனப்பெருக்காலாம்      சாதாரண காலம்

சின்ன காட்டுச்சில்லை (Little bunting-எம்பெரிசா புசில்லா) என்பது காட்டுச்சில்லைக் குடும்பத்தைச் சேர்ந்த (எம்பெரிசிடே) ஒரு குருவிச் சிற்றினமாகும்.

வகைப்பாட்டியல்

[தொகு]

1776 ஆம் ஆண்டு பீட்டர் சைமன் பல்லாசால் முதன்முதலில் விவரிக்கப்பட்ட இந்த சிறிய காட்டுச்சில்லை ஒரு ஒற்றை வகை உயிரலகு சிற்றினமாகும்.[2] இதன் விரிவான பாலியார்க்டிக் வரம்பில் எந்த புவியியல் மாறுபாடும் இல்லை.[3]

எம்பெரிசா என்ற பேரினப் பெயர் பழைய செருமானிய எம்பிரிட்சு, ஒரு காட்டுச்சில்லை என்பதிலிருந்து வந்தது. குறிப்பிட்ட சிற்றினப் பெயரான புசில்லா என்பது இலத்தீன் மொழியில் "மிகச் சிறியது" என்பதைக் குறிக்கிறது.[4]

விளக்கம்

[தொகு]

சின்ன காட்டுச்சில்லை ஒரு சிறிய காட்டுச்சில்லை ஆகும். இது 12 முதல் 14 செ.மீ. நீளமுடையது.[2] இது வெள்ளை நிற அடிப்பகுதிகளைக் கொண்டுள்ளது. மார்பகத்திலும் பக்கங்களிலும் அடர் கோடுகள் உள்ளன. இதன் கசுகொட்டை முகம், வெள்ளை மலர் பட்டையுடன், சிறிய நாணல் காட்டுச்சில்லை பெண் போன்றது. ஆனால் கருப்பு முகட்டுக் கோடுகளுடன் கூடிய வெள்ளை கண் வளையமும் கசுகொட்டை நிற கன்னங்களின் பின்புறத்தில் ஒரு மெல்லிய இருண்ட எல்லை இவற்றை வேறுபடுத்துகிறது. பாலினங்கள் ஒத்தவை.

இதன் அழைப்பு ஒரு தனித்துவமான ஜிக், என்றும் சிரூ-சர்-சர்-சிரூ எனவும் அமைந்துள்ளது.

சூழலியல்

[தொகு]

இந்த சிறிய பறவை, ஐரோப்பாவின் வடகிழக்கு, வடக்கு யூரோசைபீரியாவின் தைகா முழுவதும் உருசிய தூர கிழக்கு வரை இனப்பெருக்கம் செய்கிறது. இது வலசை செல்லக்கூடியது. வட இந்தியா, தெற்கு சீனா, தென்கிழக்கு ஆசியாவின் வடக்குப் பகுதிகளில் துணை வெப்பமண்டலங்களில் குளிர்காலத்தை கழிக்கிறது.[3] பறவைகள் நீண்ட காலமாக தங்கள் குளிர்கால குடியிருப்புகளில் தங்கியுள்ளன. மாதிரிகள் மார்ச் மாத இறுதியில் யுன்னானில் எடுக்கப்பட்டன.[5] இது மேற்கு ஐரோப்பாவிற்கு ஒரு அரிய அலைந்து திரியும் பறவையினமாகும்.[3] இந்தச் சிற்றினம் வாழிடச்சூழலுக்கேற்ற தகவமைப்பினைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, சிறிய எண்ணிக்கையிலான குளிர்காலத்தை அனுபவிக்கும் பூட்டான் மலைகளில், இது பொதுவாக விவசாய வாழ்விடங்களில் காணப்படுகிறது. பெரும்பாலும் சராசரி கடல் மட்டத்திலிருந்து 1,000 மற்றும் 2,000 மீட்டர்கள் (3,300 மற்றும் 6,600 அடி) உயரத்தில் காணப்படும்.[6]

இது திறந்த ஊசியிலையுள்ள காடுகளில் பெரும்பாலும் சில பிர்ச் அல்லது வில்லோ மரங்களில் இனப்பெருக்கம் செய்கிறது. ஒரு மரக் கூட்டில் நான்கு முதல் ஆறு முட்டைகள் இடப்படுகின்றன. இதன் இயற்கை உணவு விதைகள் ஆகும். இளம் குஞ்சுகளுக்கு பூச்சிகளை உணவாக வழங்கும்.

சிறிய காட்டுச்சில்லை.

பொதுவான, பரவலாக பரவியுள்ள இனமாக சிறிய காட்டுச்சில்லை, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அச்சுறுத்தலுக்கு உள்ளான இனமாகக் கருதப்படவில்லை.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 BirdLife International (2017). "Emberiza pusilla". IUCN Red List of Threatened Species 2017: e.T22720954A111137474. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22720954A111137474.en. https://www.iucnredlist.org/species/22720954/111137474. பார்த்த நாள்: 12 November 2021.
  2. 1 2 Byers, Olsson & Curson (1995), p. 154.
  3. 1 2 3 Byers, Olsson & Curson (1995), p. 156.
  4. ↑ Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London, United Kingdom: Christopher Helm. pp. 145, 325. ISBN 978-1-4081-2501-4.
  5. ↑ Outram Bangs (1932). "Birds of western China obtained by the Kelley-Roosevelts expedition". Field Mus. Nat. Hist. Zool. Ser. 18 (11): 343–379. https://archive.org/details/birdsofwesternch1811bang.
  6. ↑ Inskipp, Carol; Inskipp, Tim; Sherub (2000). "The ornithological importance of Thrumshingla National Park, Bhutan". Forktail 16: 147–162. http://orientalbirdclub.org/wp-content/uploads/2012/09/Inskipp-Bhutan.pdf. பார்த்த நாள்: 2014-08-03.

மேற்கோள் காட்டப்பட்ட படைப்புகள்

[தொகு]
  • Byers, Clive; Olsson, Urban; Curson, Jon (1995). Buntings and Sparrows: A Guide to the Buntings and North American Sparrows. Mountfield, East Sussex, UK: Pica Press. ISBN 1-873403-19-4.

வெளியிணைப்புகள்

[தொகு]
  • OBC 29 photographs (see pulldown menu at page bottom)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_காட்டுச்சில்லை&oldid=4342076" இலிருந்து மீள்விக்கப்பட்டது