சின்னபூவே மெல்லபேசு (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சின்னபூவே மெல்லபேசு
சின்னபூவே மெல்லபேசு.jpg
வகைகாதல்
நாடகம்
மெகாதொடர்
உருவாக்கம்ஏக்தா கபூர்
எழுத்துரேகா மோடி
திரைக்கதைஅனில் நாக்பால்
மிருனல் திரிபாதி
கதை
 • கவிதா நாக்பால்
 • அனில் நாக்பால்
இயக்கம்
 • சமீர் குல்கர்னி
 • அபிஷேக் குமார்.
 • ஆர். பால்
 • அமன் வார்பே
நடிப்பு
 • ஷ்ரத்தா ஆர்யா
 • தீரஜ் தூபர்
 • மனித் ஜவுரா
 • அஞ்சும் ஃபக்கிஹ்
முகப்பு இசைலலித் சென்
ஆஷிஷ் ரெகோ
நாடுஇந்தியா
மொழிதமிழ் (மொழிமாற்றம்)
சீசன்கள்1
எபிசோடுகள்1041
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஏக்தா கபூர்
ஷோபா கபூர்
படவி அமைப்புமல்டி கேமரா
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்பாலாஜி மோஷன் பிக்சர்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்12 அக்டோபர் 2019 (2019-10-12) –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்இனிய இரு மலர்கள்
வெளியிணைப்புகள்
இணையதளம்
தயாரிப்பு இணையதளம்

சின்னபூவே மெல்லபேசு என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு காதல் மெகாத்தொடர் ஆகும். 12 அக்டோபர் 2019 அன்று வெளியான இத்தொடரில் ஷ்ரத்தா ஆர்யா, தீரஜ் தூபர், மனித் ஜவுரா மற்றும் அஞ்சும் ஃபக்கிஹ் ஆகியோர் நடிக்கிறார்கள்.[1][2]

இது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனிய இரு மலர்கள் என்ற இந்தி தொடரின் கிளைக்கதையாக இத்தொடர் அமைந்துள்ளது.[3]

கதைச்சுருக்கம்[தொகு]

ப்ரீத்தா என்ற பெண், லூத்ரா குடும்பத் தலைவியான பானி என்பவருக்கு பிசியோதெரபிஸ்ட்டாக பணியாற்றி வருகிறார். பானியின் மூத்த பேரன் ரிஷப், நாளடைவில் ப்ரீத்தாவை ஒருதலையாகக் காதலிக்கத் தொடங்கினார்; இளைய பேரன் கரண், ப்ரீத்தாவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறார். ரிஷப், ப்ரீத்தாவைக் காதலித்தாலும் திருமணத்தில் நாட்டமின்றி இருந்தார். ப்ரீத்தா அவரிடம் திருமணம் செய்துகொள்வதற்கு சம்மதிக்க வைக்கிறார். ஷெர்லினுடன் திருமணம் என்று தெரியாமல் ப்ரீத்தாவுடன் என்று நினைப்பில் ரிஷப் சம்மதித்து விடுகிறார். பிறகு உண்மை தெரிந்ததும் வேறு வழியின்றி ப்ரீத்தாவுடனான தனது காதலை மனதில் புதைத்துவிட்டு ஷெர்லினை நிச்சயம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஷெர்லின் அனைவரும் நினைப்பது போல் நல்லவர் இல்லை என்று ப்ரீத்தா உணர்கிறார். மேலும் ஷெர்லினுக்கு ஒரு ஆண் நண்பர் இருப்பதையும் அறிந்த ப்ரீத்தா, தன் சந்தேகத்தை கரணிடம் தெரிவிக்கிறார். முதலில் ப்ரீத்தா பேச்சை நம்பாத கரண், பிறகு ஆதாரங்களை தெரிந்துகொண்டு உண்மையை உணர்ந்தார். ஷெர்லினிடம் இருந்து ரிஷப்பை காப்பாற்றுவதற்காக கரண்-ப்ரீத்தா இணைந்து செயல்படுகின்றனர். இந்த இணைவு நாளடைவில் நட்பாக மாறியது.

இதற்கிடையில், ப்ரீத்தாவிற்கு ஷெர்லினின் ஆண் நண்பரான ப்ருத்வியுடன் நிச்சயம் செய்யப்படுகிறது. ப்ருத்வியின் நடத்தையில் சந்தேகமடைந்த ரிஷப், அவர் ப்ரீத்தாவிற்கு ஏற்ற துணையாக இருக்க மாட்டார் என்று உணர்ந்தனர். ஷெர்லினிடம் இருந்து ரிஷப்பை காப்பாற்ற கரண்-ப்ரீத்தா முயன்று வரும் அதே வேளையில், ப்ருத்வியிடம் இருந்து ப்ரீத்தாவைக் காப்பாற்ற கரண்-ரிஷப் முயன்றனர்.

நடிகர்கள்[தொகு]

முக்கிய கதாபாத்திரங்கள்[தொகு]

 • ஷ்ரத்தா ஆர்யா - பிரீத்தா அரோரா, சரளா-ரகுவீரின் நடு-இளைய மகள்
 • அஞ்சும் ஃபக்கிஹ் - ஸ்ருதி அரோரா, சரளா-ரகுவீரின் இளைய மகள்
 • தீரஜ் தூபர் - கரண் லூத்ரா, ரேகா-மஹேஷின் இளைய மகன்
 • மனித் ஜவுரா - ரிஷப் லுத்ரா, ரேகா-மஹேஷின் மூத்த மகன்

துணை கதாபாத்திரங்கள்[தொகு]

 • அபிஷேக் கபூர் - சமீர் லூத்ரா, ரிஷப்-கரண் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரன்
 • ருஹி சதுர்வேதி - ஷெர்லின் குரானா, ரிஷப்பிற்கு நிச்சயமானவர்
 • சஞ்சய் கக்னானி- பிரித்வி மல்ஹோத்ரா, ஷெர்லினின் நண்பன்
 • மது ராஜா - சரளாவின் மாமியார், பிரக்யா, அம்மு, ப்ரீத்தி, ஸ்ருதி ஆகியோரின் பாட்டி
 • சுப்ரியா சுக்லா - சரளா அரோரா, ரகுவீரின் மனைவி - பிரக்யா, அம்மு, ப்ரீத்தி, ஸ்ருதி ஆகியோரின் தாய்
 • அனிஷா ஹிந்துஜா - ரேகா லூத்ரா, மஹேஷின் மனைவி - ரிஷப், கரண் ஆகியோரின் தாய்
 • நவீன் சைனி - மஹேஷ் லூத்ரா, ரேகாவின் கணவர் - ரிஷப், கரண் ஆகியோரின் தந்தை
 • ஸ்ரிதி ஜா - பிரக்யா மெஹ்ரா, சரளா-ரகுவீரின் மூத்த மகள்
 • ஷப்பீர் அலுவாலியா - அபிஷேக் மெஹ்ரா, பிரக்யாவின் கணவர்

சின்ன பூவே மெல்ல பேசு தொடர் முழுக்கை

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]