சின்னக்கல்லார் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சின்னக்கல்லர் அருவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சின்னக்கல்லார் அருவி (Chinnakallar Falls) இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மாவட்டத்தில், வால்பாறை வட்டத்தில் உள்ள ஓர் அருவியாகும்.

கரடு முரடான புதர்களுக்கு மத்தியில் அமைந்துள்ள பாதை வழியாகவே அருவிக்குச் செல்ல முடியும். வட இந்தியாவின் மேகாலயா மாநிலத்தின் மௌசின்ரம், சோரா நகரங்களுக்கு அடுத்து இந்தியாவில் மூன்றாவது அதிக மழை வீழ்ச்சியைப் பெறும் இடமாக இப்பகுதி விளங்குகின்றது.[1]

தமிழ் திரைப்படமான "சூர்யவம்சத்தில்" சரத்குமாரின் ஒரு பாடல் இங்கு படப்பிடிப்பு செய்யப்பட்டது.[2] இவ்விடத்தின் அடையாள ஆள்கூறுகள்:10°18'11"வடக்கு 77•°1'47"கிழக்கு என்பதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The 8 Wettest Places Of India, 1. Mawsynram, 2. Cherrapunji, 3. Chinna Kallar - Hello Travel Buzz". Hellotravel.com. 2016-02-10. பார்க்கப்பட்ட நாள் 2017-04-09.
  2. "Chinnakallar Falls Valparai". Beautyspotsofindia.com. 2014-07-01. Archived from the original on 2017-05-18. பார்க்கப்பட்ட நாள் 2017-04-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னக்கல்லார்_அருவி&oldid=3854494" இலிருந்து மீள்விக்கப்பட்டது