சினோபி நோ மோனோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஷினோபி நோ மோனோ
இயக்கம்சட்சுவோ யமமோட்டோ
கதைஹஜிமே டகைவா
நடிப்புஇஷிகாவா ஜோமோன்,
சண்டாயு மொமோச்சி ,
மக்கி
வெளியீடு1962
ஓட்டம்104 நிமிடங்கள்
மொழிஜப்பானிய மொழி

ஷினோபி நோ மோனோ (Shinobi no mono )1962 ஆம் ஆண்டு வெளிவந்த ஜப்பானிய மொழித் திரைப்படமாகும்.

வகை[தொகு]

நாடகப்படம் / தற்காப்புக்கலைப்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

பண்டைக்கால ஜப்பானில் நடைபெறும் இத்திரைக்கதையில் நீன்ஞா (ninja) குழுவினர் தலைவன் ஒருவன் தனது குழு உறுப்பினர்களை வைத்து அப்பகுதி மன்னர் படைகளினை எதிர்த்துப் போராட ஆயத்தம் செய்கின்றான்.குழுவினருக்கு தனது மாறு வேட முகத்தினை காண்பிக்கும் இவன் கட்டளைப்படியே அனைத்து நீன்ஞா போராளிகளும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராட்டத்தில் இறங்குகின்றனர்.பெரும்பாலும் இரவு நேரங்களில் தாக்குதல்களை நடத்தும் அவ்வீரர்கள் உயிரினும் மேலாகத் தம் போராட்டக் கொள்கையினைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.இச்சமயம் அக்குழுவின் தலைவனைன் மனைவியின் மோகமனத்தின் படி அவளுடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொள்ளும் நீன்ஞா போராளியொருவனை மாறு வேடம் பூண்டிருக்கும் தலைவன் கண்டுகொள்கின்றான்.தன் மனைவி மீது தகாத உறவு வைத்துக் கொண்டதற்காக அவனைக் கொலை செய்ய முன் வரும் போதும் மன்னித்து அவன் செய்த குற்றத்திற்காக ஷன் என்ற தனது எதிரியினைக் கொலை செய்ய உத்தரவு பிறப்பிக்கின்றான்.அப்போராளியும் அவ்வாறே செய்கின்றான்.மேலும் பல கொலைகளை தன் தலைவன் ஆணைப்படி செய்து முடிக்கும் அப்போராளி இறுதியில் தனக்கு மிக நெருங்கிய சொந்தக்காரர்களை தான் தலைவனாகக் கருதுபவனே கொலையும் செய்திருக்கின்றான் என்பதனை அறிந்து அவனுக்கு எதிராகச் சண்டையிட எத்தனிக்கின்றான்.அச்சமயம் நின்ஞாக்களின் எதிரிகள் படை அவர்களை சுற்றிவளைத்துத் தாக்குதல் நடத்தி அனைத்து நிஞ்ஞாக்களையும் கொன்றொளிக்கின்றனர்,ஆனால் இப்பகுதியில் இருந்து தப்பிச் செல்லும் நிஞ்ஞாப் போராளி தன் காதலியுடன் வாழ்வது குறிப்பிடத்தக்கது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சினோபி_நோ_மோனோ&oldid=3316097" இருந்து மீள்விக்கப்பட்டது