உள்ளடக்கத்துக்குச் செல்

சினேகா கபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சினேகா கபூர்

சினேகா கபூர் (Sneha Kapoor) இந்திய சல்சா நடனக் கலைஞர், நடன இயக்குநர், பயிற்றுவிப்பாளர் ஆவார். இவர் "இந்திய சல்சா இளவரசி" என்று பிரபலமாக அறியப்படுகிறார். மும்பையில் வசிக்கும் கபூர், பெங்களூரில் ஒரு நடன நிறுவனத்துடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். சல்சா, பச்சாட்டா, மெரெங்கு, ஜிவ், கிப்-காப், அடாகியோ, பாலிவுட் போன்ற பல்வேறு நடன வடிவங்களைத் தழுவிய ஒரு வாழ்க்கையின் தொடக்கமாக இது அமைந்தது. மே 25, 2015 அன்று ஜபல்பூரில் நடைபெற்ற குழந்தைகளின் நடன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.[1][2]

தொழில்

[தொகு]

"இந்திய சல்சா இளவரசி" அல்லது "சல்சா சினேகா" என்று பிரபலமாக அறியப்படும் சினேகா கபூர், இந்திய சல்சா காட்சியை உலக அளவில் இடம்பிடிக்கச் செய்ததற்காகப் பரவலாகப் பாராட்டப்படுகிறார். இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பல பன்னாட்டு சல்சா வாகையாளர் போட்டிகளில் வென்ற முதல் இந்தியர் கபூர் ஆவார். மும்பையில் வசித்து வந்த இவர், 2006ஆம் ஆண்டு லூர்டு விஜய்யின் நடன நிறுவனத்தில் தனது நடன வாழ்க்கையைத் தொடங்கினார். சல்சா, பச்சாட்டா, மெரெங்கு, ஜிவ், கிப்-காப், அடாகியோ, பாலிவுட் போன்ற பல்வேறு நடன வடிவங்களைத் தழுவிய வாழ்க்கையின் தொடக்கமாக இது இருந்தது.[3]

கபூர் ஒரு தடகள வீராங்கனை ஆவார். ஆனால் ரிச்சர்ட் தோலூரை சந்தித்த பிறகு,[4] இவர் ஒரு நடனக் கலைஞராக மாற முடிவு செய்து, பெங்களூரில் உள்ள லூர்ட் விஜய்யின் நடனப் பள்ளியில் சேர்ந்தார். பள்ளியில் படித்த காலத்தில், கபூரும் அவரது நடனக் கூட்டாளி தோளூரும் உலகம் முழுவதும் நடந்த சல்சா போட்டிகளில் கலந்துகொண்டு பல விருதுகளையும் கோப்பைகளையும் வென்றனர்.[5]

"ஒரு நிமிடத்தில் அதிக எண்ணிக்கையிலான ஊசல் நடனச் சுழல்" என்ற கின்னஸ் உலக சாதனையை கபூர் முறியடித்தார். ஒரு நிமிடத்தில் 33 சுழல் என்ற சாதனை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் படைக்கப்பட்டது. ஆனால் கபூர் தனது குழுவின் மூன்று நடனக் கலைஞர்களுடன் 39 சுழல்களுடன் புதிய சாதனையைப் படைத்தனர்.

இவர் டான்ஸ் இந்தியா டான்ஸ் தொடர் 3 ல் பங்கேற்றார். ஆனால் 2012 சனவரி 22 அன்று போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

கபூர் ஜஸ்ட் டான்சு மற்றும் பெர்ஃபெக்ட் பிரைட் ஆகிய மெய்ம்மைக் காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடன அமைப்பினைச் செய்துள்ளார். தென்னிந்தியத் திரைப்படமான ஜுகாரி மற்றும் மதுர் பண்டார்கரின் படமான கீரோயின் ஆகியவற்றிற்கும் இவர் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். இவர் தேசிய, பன்னாட்டு அளவில் பல்வேறு நடனப் பட்டறைகளை நடத்தியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

கபூர் சுனில் கபூர் மற்றும் எலிசபெத் கபூர் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு நேகா கபூர் என்ற ஒரு தங்கை உள்ளார்.

விருதுகள்

[தொகு]
  • யாரம் 2019 திரைப்படத்தின் நடன இயக்குநர்
  • 2019ஆம் ஆண்டு டிஐடி வாகையாளர் போரில் முதல் வெற்றியாளர், ஜீ தொலைக்காட்சி
  • 2007, சிட்னியில் நடந்த ஆத்திரேலிய சல்சா பாரம்பரியப் போட்டி வெற்றியாளர்[6]
  • 2007, ஐரோப்பிய சல்சா வல்லமையாளர், வெற்றியாளர்[7]
  • 2007, ஆங்காங்கில் நடந்த ஆசிய சல்சா வாகையாளர் போட்டி இரண்டாமிடம்
  • 2007, புளோரிடாவின் ஆர்லாண்டோவில் நடந்த இஎசுபிஎன் உலக சல்சா வாகையாளர் போட்டி அரையிறுதிப் போட்டியாளர்.
  • டான்ஸ் இந்தியா டான்ஸ் தொடர் 3-இன் முதல் 20 இறுதிப் போட்டியாளர்கள்
  • சிட்னியில் 2007ஆம் ஆண்டு ஆத்திரேலிய சல்சா வெற்றியாளர்.
  • 2007ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஐரோப்பிய சல்சா போட்டி வெற்றியாளர்.
  • 2007ஆம் ஆண்டு ஆங்காங்கில் நடந்த ஆசிய சல்சா போட்டியில் 1வது இடம்
  • 2007ஆம் ஆண்டு புளோரிடாவின் ஆர்லாண்டோவில் நடந்த இஎசுபின் உலக சல்சா போட்டியின் அரையிறுதிப் போட்டியாளர்.
  • 2006 & 2007 ஆம் ஆண்டுகளில் பெங்களூரு மத்திய நடனப் போட்டியில் வெற்றி பெற்றவர்.
  • ஜலக் திகலா ஜா, தொடர் 7 – ஸ்ரீசாந்திற்கு நடன இயக்குநர் (துடுப்பாட்ட வீரர்)
  • நாச் பாலியே தொடர் 6, 2013 – கனிகா மகேசுவரி மற்றும் அங்கூர் கையின் நடன இயக்குநர்.
  • ஜலக் திக்லா ஜா (தொடர் 4), 2010 – அகில் குமாருக்கு நடன இயக்குநர்.
  • ஜலக் திக்லா ஜா (தொடர் 6), 2013 – ஷாந்தனு முகர்ஜியுடன் இணைந்து நிகழ்த்தப்பட்ட முதல் 3.
  • ஜலக் திக்லா ஜா (தொடர் 6), 2013 – கரண்வீர் போக்ராவின் சிறந்த 6 நடன இயக்குநர்.
  • ஜலக் திக்லா ஜா (தொடர் 5), 2012 – ரித்விக் தஞ்சனி முதல் 3 நடன இயக்குநர் .
  • ஜலக் திக்லா ஜா (தொடர் 8), 2015 - ரஃப்தாரின் நடன இயக்குநர்.
  • டான்ஸ் இந்தியா டான்ஸ் தொடர் 3, 2011 - முதல் 15 போட்டியாளர்கள்.
  • 2011ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனையாளர், ஒரு நிமிடத்தில் அதிக எண்ணிக்கையிலான ஊஞ்சல் திருப்பல்கள்.
  • இந்தியா'ஸ் காட் டேலண்ட் தொடர் 1, 2009 - இறுதிப் போட்டியாளர்.
  • சூப்பர் டான்சர் தொடர் 1 நடன இயக்குநர், 2016
  • நாச் பாலியே தொடர் 8, 2017 - ஆசுகா கோரடியா, ப்ரெண்ட் கோபிலுக்கு நடன இயக்குநர் தனது காதலன் ருயல் தௌசன் வரிதானியுடன்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Supporting act". The New Indian Express. 7 October 2020. Retrieved 2021-07-07.
  2. "Dancer Sneha Kapoor On Her Inspiring Journey | Verve Magazine". www.vervemagazine.in (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-08-20. Retrieved 2022-09-09.
  3. "Rithvik, Karanvir are my favourite dance partners: Sneha Kapoor". Tellychakkar.com (in ஆங்கிலம்). Retrieved 2022-09-09.
  4. Team, Tellychakkar. "Sneha Kapoor". Tellychakkar.com (in ஆங்கிலம்). Retrieved 2021-07-07.
  5. "Choreographer Sneha Kapoor spends time with NGO kids". Tellychakkar.com (in ஆங்கிலம்). Retrieved 2022-09-09.
  6. "A Salsa extravaganza!". http://www.rediff.com/getahead/2008/aug/19sl3.htm. 
  7. "Salsa classes by Lourd". https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/salsa-classes-by-lourd/article2254846.ece. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினேகா_கபூர்&oldid=4204696" இலிருந்து மீள்விக்கப்பட்டது