உள்ளடக்கத்துக்குச் செல்

சினேகா உல்லால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சினேகா உல்லால்
டெய்சி ஷாவின் முதல் படமான பேகம் ஜான் என்ற திரைப்படத்தில் உல்லல்
பிறப்பு18 திசம்பர் 1987 (1987-12-18) (அகவை 36)
மஸ்கத், ஓமான்
தேசியம் இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2005–தற்போது வரை

சினேகா உல்லால் ( Sneha Ullal ) (பிறப்பு: டிசம்பர் 18, 1987) ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார்.[1] தெலுங்குப் படங்களான உல்லாசம்கா உற்சாகம்கா, சிம்ஹா மற்றும் இந்திப் படமான லக்கி: நோ டைம் ஃபார் லவ் ஆகியவற்றில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

சினேகா உல்லால் மங்களூரைச் சேர்ந்த ஒரு துளு பேசும் தேவாதிகா குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும் சிந்தி தாயாருக்கும் மகளாக மத்திய கிழக்கிலுள்ள மஸ்கத்ல் பிறந்து வளர்ந்தார்.[2] ஓமானிலுள்ள அல் வாடி அல் கபீர் இந்தியன் பள்ளி மற்றும் சலாலா, இந்தியன் பள்ளிகளில் படித்தார். பின்னர், இவர் தனது தாயுடன் மும்பை சென்று துரேலோ கான்வென்ட் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர் வர்தக் கல்லூரியில் படித்தார்.

திரை வாழ்க்கை

[தொகு]

சல்மான் கானுக்கு இணையாக 2005 ஆம் ஆண்டு லக்கி: நோ டைம் ஃபார் லவ் என்ற இந்தித் திரைப்படத்தில் சினேகா உல்லால் அறிமுகமானார். பிறகு, தோற்றத்தில் ஐஸ்வர்யா ராயுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளுக்காக இவர் குறிப்பிடப்பட்டார்.[3] ஒரு நடிகையாக இந்த ஒப்பீடு தனக்கு உதவவில்லை என்றாலும், அது தனக்கு அதிக அங்கீகாரத்தை அளித்ததாக பின்னர் கூறினார்.[4] பின்னர், சல்மான் கானின் சகோதரர் சோஹைல் கானுடன் ஆர்யன் என்ற படத்தில் தோன்றினார். அது திரையரங்கில் சரியாக வசூலிக்கவில்லை.

தெலுங்கு திரைப்படங்களில் உல்லாசம்கா உற்சாகம்கா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. நேனு மீக்கு தெலுசா? என்பது இவரது இரண்டாவது தெலுங்கு வெளியீடாகும். அதைத் தொடர்ந்து தெலுங்கில் நாகார்ஜுனாவுக்கு இணையாக கிங் படத்தில் நுவ்வு ரெடி என்ற பாடலில் தோன்றினார்.[5]

2007 ஆம் ஆண்டில், திகில் திரைப்படத் தயாரிப்பாளரும் குணச்சித்திர நடிகருமான இசுடெக் டோர் என்பவரால் தயாரிக்கப்படவிருந்த பைரேட்ஸ் ப்ளட் என்ற படத்தில் இவர் தோன்றவிருந்தார். சில காரணங்களால் ஓமான் நடிகை மைமூன் அல்-பலுஷி அதில் தோன்றினார்.[6]

தான் மிகவும் சிறுவயதாக இருப்பதாலும், திரைப்படங்களில் பணியாற்ற இன்னும் முதிர்ச்சியடைய வேண்டும் என்று நினைத்து இவர் பாலிவுட்டிலிருந்து சிலகாலம் விலகியிருந்தார்.[4] பின்னர், இவர் காஷ்... மேரே ஹோட் இந்தி படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[4] அவரது அடுத்த சில படங்கள் திரையரங்க வசூலில் வெற்றிபெறவில்லை, ஆனால் 2010 இல் பாலகிருஷ்ணாவுடன் நடித்த சிம்ஹா ஒரு பெரிய வெற்றியாக மாறியது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'Lucky-No Time for Love' actress, Sneha Ullal's pictures are breaking the internet". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  2. Mohandas, B.G. (1 May 2005). "A Bubbly Community Girl Sneha Ullal Speaks To Devadiga.Com". Devadiga. Archived from the original on 13 August 2015. பார்க்கப்பட்ட நாள் 12 June 2014.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  3. TNN (18 September 2006). "Sneha follows Aishwarya! – The Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 12 December 2010.
  4. 4.0 4.1 4.2 "Sneha on her upcoming movie". RealBollywood.com. 5 January 2009. பார்க்கப்பட்ட நாள் 16 May 2011.
  5. "Sneha Ullal Movies". https://timesofindia.indiatimes.com/topic/Sneha-Ullal/movies. 
  6. https://www.instagram.com/kenneth.carneiro (2020-10-14). "10 Sneha Ullal Facts That Prove She Is A Beauty With Purpose - Zee5 News". ZEE5 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-24. {{cite web}}: |last= has generic name (help); External link in |last= (help)
  7. "Simha box office results". BollywoodRaj.com. Archived from the original on 8 July 2011. பார்க்கப்பட்ட நாள் 16 May 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினேகா_உல்லால்&oldid=3946518" இலிருந்து மீள்விக்கப்பட்டது