சினேகாவின் காதலர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சினேகாவின் காதலர்கள்
இயக்கம்முத்துராமாலிங்கன்
தயாரிப்பு
  • க. கலைகோட்டுதயம்
  • அமலா கலைக்கோட்டுதயம்
கதைமுத்துராமாலிங்கன்
திரைக்கதை
  • முத்துராமாலிங்கன்
  • ஆர். பிரபாகர்
இசைஆர். பிரபாகர்
நடிப்பு
ஒளிப்பதிவு
  • ஆனந்த்
படத்தொகுப்புஷிஜித் குமாரன்
கலையகம்தமிழன் கலைக்கூடம்
விநியோகம்குவரன்
வெளியீடுஆகத்து 15, 2014 (2014-08-15)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சினேகாவின் காதலர்கள் (Snehavin Kadhalarkal) என்பது 2014ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். .முத்துராமாலிங்கன் எழுதி இயக்கிய இந்த படத்தில் சினேகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அத்வைதா நடித்துள்ளார். சினேகா என்ற கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் வரும் ஆண்களைச் சுற்றியுள்ளதாக கதையோட்டம் உள்ளது. [1]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இப்படமானது க. கலைகோட்டுதயம் மற்றும் அமலா கலைக்கோட்டுதயம் ஆகியோரால் . 'தமிழன் கலைகூடம்' சார்பில் தயாரிக்கபட்டது. [2] [3]

வளர்ச்சி[தொகு]

இந்த படம் ஆரம்பத்தில் 7 டி எண்ணியல் ஒளிப்படமியைப் பயன்படுத்தி படமாக்கப்பட்டது, பின்னர் 5 டி ஒளிப்படமியும் சேர்க்கப்பட்டது.

குழு[தொகு]

  • ஆனந்த் ஒளிப்பதிவு.
  • ஷிஜித் குமாரன் படத்தொகுப்பு.
  • முத்துராமாலிங்கன் திரைக்கதை. [4]
  • முத்துராமாலின்கோன், ஆர். பிரபாகர் (இசை அமைப்பாளர்), தீஸ்மாஸ் ஆகியோர் உரையாடல் எழுதினர்.
  • ஜெயகுமாரன் எம். ஒளிப்படங்கள் [5]

இடம்[தொகு]

இப்படத்தின் படப்பிடிப்பானது சென்னை, மதுரை, கொடைக்கானல், கோயம்புத்தூர் பகுதிகளிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் நடததபபடடது.

இசை[தொகு]

இப்படத்திற்கான இசையை ஆர். பிரபாகர் மேற்கொண்டார். [6] இப்படத்தில் ஐந்து பாடல்கள் 2014 பிப்ரவரி 19 அன்று சென்னை பிரசாத் ஸ்டுடியோஸ் லேப் தியேட்டரில் வெளியிடப்பட்டது. [7]

வெளியீடு[தொகு]

படம் 2014 ஆகத்து 15 அன்று வெளியிடப்பட்டது. [8] சிஃபி எழுதியது, "மொத்தத்தில், சினேகவின் கதலர்கள் படமானது நீங்கள் பார்த்த பிறகு நினைவில் இருக்கும் படம் அல்ல. இயக்குனர் குறைந்த பட்சம் மிகை நடிப்பைக் குறைத்திருந்தால், இந்த படம் பார்க்கக்கூடியதாக இருந்திருக்கும் ". [9]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]