சினேகலதா நாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சினேகலதா நாத்
பிறப்புதிசம்பர் 27, 1965
தேசியம்இந்தியா

சினேகலதா நாத் (Snehlata Nath) (பிறப்பு: டிசம்பர் 27, 1965) நீலமலையில் பணியாற்றியதற்காக அறியப்பட்ட ஒரு இந்திய ஆர்வலர் ஆவார். இவர் ஜம்னாலால் பஜாஜ் விருது மற்றும் நாரி சக்தி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

வாழ்க்கை[தொகு]

சினேகலதா நாத் 1965 இல் பிறந்தார் [1] 1993 இல் தொடங்கப்பட்ட கீஸ்டோன் அறக்கட்டளையின் நிறுவன இயக்குநராக இருந்தார்.[1] இந்த அறக்கட்டளை வறுமையை சமாளிக்க முடிவு செய்தது. குறிப்பாக, நீலமலை மக்களின் வாழ்வாதார மேம்பாடு பற்றி ஒரு தெளிவான இலக்கை நிர்ணயித்து செயல்பட இருந்தனர். இந்த அமைப்பின் நிர்வாக இயக்குநராக இவர் டெல்லியிலிருந்து செயல்பட முயற்சித்திருக்கலாம், ஆனால் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் [2] அறக்கட்டளையை கோத்தகிரியில் நிறுவினார். [3]

பேர்வைல்ட் அறக்கட்டளை 2008 இல் நிறுவப்பட்டது. இது காடுகளில் சேகரிக்கப்பட்ட தாவரப் பொருட்களுக்கான நிலையான மற்றும் நியாயமான வர்த்தக அமைப்பை உருவாக்குகிறது. சினேகலதா நாத் அவர்களின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுகிறார்.[4]

2013 ஆம் ஆண்டில், "கிராம வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் சிறந்த பங்களிப்பிற்காக" 2013 இல் இவருக்கு ஜம்னாலால் பஜாஜ் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி வழங்கினார். [5]

2019 ஆம் ஆண்டில் இவர் புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் இந்தியாவில் பெண்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த நாரி சக்தி விருது ராம்நாத் கோவிந்த் அவர்களால் வழங்கப்பட்டது. இவ்விருதைப் பெற்ற 41 பெண்களில் இவரும் ஒருவர். இந்த விருதை இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். சினேகலதா நாத் அப்போது 26 ஆண்டுகளாக நீலமலை உயிர்க்கோள காப்பகத்தில் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நிலைத்தன்மையில் பணியாற்றி வந்தார்.[6]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Snehlata Nath - Jamnalal Bajaj Award 2013 Recipient - Application of Science & Technology for Rural Development". Jamnalal Bajaj Foundation. பார்க்கப்பட்ட நாள் 2020-04-27.
  2. "For 26 Years, This Woman Has Been Helping Nilgiris Tribals Stand For Their Rights". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-01-15. பார்க்கப்பட்ட நாள் 2020-04-27.
  3. "FairWild advisory panel". FairWild Foundation (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-27.
  4. "FairWild advisory panel". FairWild Foundation (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-27.
  5. "Snehlata Nath conferred with the Prestigious Nari Shakthi Puraskar Award". Keystone Foundation (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-03-12. பார்க்கப்பட்ட நாள் 2020-04-27.
  6. "Snehlata Nath conferred with the Prestigious Nari Shakthi Puraskar Award". Keystone Foundation (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-03-12. பார்க்கப்பட்ட நாள் 2020-04-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினேகலதா_நாத்&oldid=3742874" இலிருந்து மீள்விக்கப்பட்டது