சினெப்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
துத்தநாக ஈத்தேன்-1,2-டையில்பிசு(டைதயோகார்பமேட்டு) | |
| வேறு பெயர்கள்
1,2 ஈத்தேன்டையிபிசு[டைதயோகார்பமோடைதயோயேட்டோ](2−) துத்தநாகம், டைத்தேன் இசட் -78, அபைடோரா, அமிட்டன் | |
| இனங்காட்டிகள் | |
| 12122-67-7 | |
| ChEBI | CHEBI:52498 |
| ChemSpider | 2297309 |
| EC number | 235-180-1 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| KEGG | C15232 |
| பப்கெம் | 3032296 |
| வே.ந.வி.ப எண் | ZH3325000 |
| |
| பண்புகள் | |
| C4H6N2S4Zn | |
| வாய்ப்பாட்டு எடை | 275.8 கி/மோல் (ஒருமம்) |
| தோற்றம் | வெளிர் மஞ்சள் தூள் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
சினெப் (Zineb) என்பது {Zn[S2CN(H)CH2CH2N(H)CS2]}n என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கட்டமைப்பு அடிப்படையில் இதை ஒருங்கிணைப்பு பலபடி என்று வகைப்படுத்துகிறார்கள். வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் ஒரு பூஞ்சைக் கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது[1].
தயாரிப்பு
[தொகு]நபாம் எனப்படும் எத்திலீன்பிசு(டைதயோகார்பமேட்டு) சோடியம் உப்பை துத்தநாக சல்பேட்டுடன் சேர்த்து சூடுய்படுத்துவதால் சினெப் உருவாகிறது. இச்செயல்முறையில் நபாமும் துத்தநாக சல்பேட்டும் ஒரு தெளிக்கும் கோபுரத்தில் கலக்கப்படுகின்றன. பட்டுப்போன்ற மென்மையான தோலுடைய பூஞ்சைக் காளான்கள், துரு, செந்தீச்சுவாலை முதலியவற்றை கட்டுப்படுத்த சினெப் பயன்படுகிறது[1]. அமெரிக்காவில் ஒரு காலத்தில் இதை பொதுவான ஒரு பூச்சிக் கொல்லியாக பதிவு செய்திருந்தார்கள். இருப்பினும் அந்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் சிறப்பு ஆய்வறிக்கையைத் தொடர்ந்து அனைத்துப் பதிவுகளும் இரத்து செய்யப்பட்டன. பல நாடுகளில் சினெப்பின் பயன்பாடு தொடர்ந்தது.
கட்டமைப்பு
[தொகு]சினெப் சேர்மம் துத்தநாகமும் டைதயோகார்பமேட்டும் சேர்ந்த பல்லுருவ அணைவுச் சேர்மமாகும். இப்பலபடியில் Zn(டைதயோகார்பமேட்டு)2 துணை அலகுகள் ஓர் எத்திலீன் (-CH2CH2-) பின்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளன[2]. இதற்குரிய ஆதாரச் சேர்மம் [Zn(S2CNEt2)2]2 ஆகும். இதில் ஒரு சோடி நான்முக துத்தநாக மையங்கள் ஒரு கந்தக மையத்துடன் பாலம் அமைத்துள்ளன[3].
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Fungicides, Agricultural, 2. Individual Fungicides". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2012). Wiley-VCH. DOI:10.1002/14356007.o12_o06.
- ↑ R. Engst, W. Schnaak (1974). Gunther F.A.. ed. "Residues of dithiocarbamate fungicides and their metabolites on plant foods". Residue Reviews (New York, NY: Springer) 52: 45-6. doi:10.1007/978-1-4615-8504-6_3.
- ↑ Bonamico, M.; Mazzone, G.; Vaciago, A.; Zambonelli, L., "Structural studies of metal dithiocarbamates. III. The Crystal and Molecular Structure of Zinc Diethyldithiocarbamate", Acta Crystallogr. 1965, volume 19, pp. 898-909. எஆசு:10.1107/S0365110X65004620