சினிவாலி
சினிவாலி (Sinivali) என்பது ஒரு வேதத் தெய்வம். இத்தெய்வம் குறித்து இருக்கு வேதத்தின் இரண்டு பாடல்களில், இ.வே. 2 .32 மற்றும் இ.வே. 10 .184இல் குறிப்பிடப்பட்டுள்ளது.[1] 2.32.7-8-ல் இவள் அகன்ற இடுப்பு உடையவள், அழகான கைகள் கொண்டவள், அழகான விரல்கள் கொண்டவள், கருவுறுதல் மற்றும் எளிதான பிறப்புக்குத் தலைமை தாங்குபவள் என்று விவரிக்கப்படுகிறார். இவர் கங்கை, ராகா, சரசுவதி, இந்திராணி, வருணி ஆகியோருடன் சேர்ந்து அழைக்கப்படுகிறார். 10.184.2இல், கருவைக் கருப்பையில் வைக்க சரசுவதியுடன் சேர்ந்து இவர் அறியப்படுகிறார்.[2] அதர்வண வேதம் 7.46இல், இவர் விஷ்ணுவின் துணைவியாக விவரிக்கப்படுகிறார். எனவே இவர் இலக்குமியின் சக்தியாகக் காணப்படுகிறார். இலட்சுமி தேவியின் சகசுரநாமத்தில் சினிவாலி என்ற பெயர் இவரது பெயர்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[3]
பிற்கால வேத நூல்களில், இவர் அமாவாசையின் போது இசைக்கப்படும் இராகாவுடன் அடையாளம் காணப்படுகிறாள்.
மகாபாரதத்தில் அங்கரிசரின் மகளின் பெயராகவும், பிரம்ம புராணத்தில் தத்ரனின் மனைவியாகவும், தர்சனின் தாயாகவும் சினிவாலி குறிப்பிடப்படுகிறார்.[3]
சீனிவாலி இருண்ட பாதியின் 14ஆவது நாளின் (அமாவாசை) அதிபதி. சீனிவாலி என்ற சொல் இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது: (1) சீனி மற்றும் (2) வாலி. யாசுகா 'சீனிவலி' என்ற பதத்தை 'உணவு உடையவர்' 'அன்னவதி' என்று விளக்குகிறார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kinsley, David (1987, reprint 2005). Hindu Goddesses: Visions of the Divine Feminine in the Hindu Religious Tradition, Delhi: Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0394-9, p.15
- ↑ O'Flaherty, Wendy Doniger (2000). The Rig Veda: An Anthology. New Delhi: Penguin Books. p. 291. ISBN 0-14-044402-5.
- 1 2 www.wisdomlib.org (2017-05-08). "Sinivali, Sinīvālī, Sini-vali, Sinivālī, Shinivali: 15 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2024-09-07.
- ↑ www.wisdomlib.org (2025-03-12). "Description of Goddess Sinivali". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2025-03-12.